04-24-2005, 08:05 AM
Mathuran Wrote:1 இலங்கையைப் பாதுகாப்பான நாடுகள் (white country list) பட்டியலில் இருந்து அகற்றல்
இலங்கை பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு போய்வரும் வெளிநாட்டு அரசுகளின் பிரதிநிதிகள் அங்கு வாழும் தமிழர்கள், மனிதஉரிமைகள் மதிக்கப்பட்டு, பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும், தமிழீழ வங்கியின் உதவியுடன், சிறந்த வேலைவாய்ப்பு வசதிகளுடனும் வாழ்கிறார்கள் என்று எண்ணுவதும் அடங்கும். இப்படியான எண்ணத்தை உருவாக்குவதில், இந்த அரசபிரதிநிதிகளை அங்கு சந்திக்கும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இதுபற்றி புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதை தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நடவடிக்கைக் குழு தெளிவு படுத்த வேண்டும்.

