04-21-2005, 07:24 PM
^^ இனியவர்களே நான் இழந்தவைகள் என்ன
இனியும் இழக்க என்ன இருக்கிறது?
புழுதிபடிந்த என் மண்ணில் தவழ்ந்து
நடந்து. நண்பர்களுடன் விளையாடி
அழுக்காக வீடு திரும்பி அடிவாங்கி
அழுதாலும் மகிழ்வான நாட்கள்....
நான் இழந்தவை......
பொங்கல் பண்டிகைக்கு வாங்கிதந்த
புத்தாடையையும் பட்டாசையும்
ஆசையுடன் தடவி அகமகிழ்ந்து
போர்த்தேங்காயை அடித்து
மாலையிலே நாடகமும் நாட்டியமுமாய்
மகிழ்ந்திருந்த நாட்கள் நான் பறிகொடுத்தவை
காத்தான் கூத்தென்று பெற்றவர்களுடன்
ஊர்க்கோயில்வீதியில் பெற்றவர்களுடன் காத்திருந்து காத்தான்
மேடையேற காத்திருந்து அலுத்துப்போய்
அம்மாவின்மடியினிலே தூங்கியதும்
நாடகம் முடிந்ததும் பெற்றவள் தட்டியெழுப்பியதும்
நாடகம் பார்க்கமுடியாத ஆத்திரத்தில் அழுதாலும்
ஆனந்தமான அந்த நாட்கள் நான் இழந்தவை.....
பரீட்சையிலே சித்தியாகி வீட்டுக்கு வந்தவுடன்
பெற்றவர்கள் மகிழ்வாக எங்களுக்கு தெரியும்
என்ரைபிள்ளை பாசாவான் என்று பெருமிதமாய்
பேசி கேட்தெல்லாம் கொடுத்து உற்சாகம் தந்ததும்
திருவிழாவுக்கு என்று சொல்லி திருட்டுத்தனமாக
இரவு சினிமாவுக்கு நண்பர்களுடன் சென்றதும்
இருக்கின்ற காசைபங்கு போட்;டு ரிக்கெற்
வாங்கியதும்................ நான் இழந்தவை
தொடரும்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]