![]() |
|
இழந்தவற்றை மீட்டுத்தருவீர்களா நண்பர்களே? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இழந்தவற்றை மீட்டுத்தருவீர்களா நண்பர்களே? (/showthread.php?tid=4421) |
இழந்தவற்றை மீட்டுத்தருவீர்களா நண்பர்களே? - வியாசன் - 04-21-2005 ^^ இனியவர்களே நான் இழந்தவைகள் என்ன இனியும் இழக்க என்ன இருக்கிறது? புழுதிபடிந்த என் மண்ணில் தவழ்ந்து நடந்து. நண்பர்களுடன் விளையாடி அழுக்காக வீடு திரும்பி அடிவாங்கி அழுதாலும் மகிழ்வான நாட்கள்.... நான் இழந்தவை...... பொங்கல் பண்டிகைக்கு வாங்கிதந்த புத்தாடையையும் பட்டாசையும் ஆசையுடன் தடவி அகமகிழ்ந்து போர்த்தேங்காயை அடித்து மாலையிலே நாடகமும் நாட்டியமுமாய் மகிழ்ந்திருந்த நாட்கள் நான் பறிகொடுத்தவை காத்தான் கூத்தென்று பெற்றவர்களுடன் ஊர்க்கோயில்வீதியில் பெற்றவர்களுடன் காத்திருந்து காத்தான் மேடையேற காத்திருந்து அலுத்துப்போய் அம்மாவின்மடியினிலே தூங்கியதும் நாடகம் முடிந்ததும் பெற்றவள் தட்டியெழுப்பியதும் நாடகம் பார்க்கமுடியாத ஆத்திரத்தில் அழுதாலும் ஆனந்தமான அந்த நாட்கள் நான் இழந்தவை..... பரீட்சையிலே சித்தியாகி வீட்டுக்கு வந்தவுடன் பெற்றவர்கள் மகிழ்வாக எங்களுக்கு தெரியும் என்ரைபிள்ளை பாசாவான் என்று பெருமிதமாய் பேசி கேட்தெல்லாம் கொடுத்து உற்சாகம் தந்ததும் திருவிழாவுக்கு என்று சொல்லி திருட்டுத்தனமாக இரவு சினிமாவுக்கு நண்பர்களுடன் சென்றதும் இருக்கின்ற காசைபங்கு போட்;டு ரிக்கெற் வாங்கியதும்................ நான் இழந்தவை தொடரும் - shanmuhi - 04-21-2005 என்ன வியாசன் இழந்தவற்றை மீட்டுத்தருவீர்களா என்று வந்து இருக்கிறீர்கள். சொல்லுங்கள். முயற்சித்து பார்ப்போம். - Malalai - 04-21-2005 Quote:இரவு சினிமாவுக்கு நண்பர்களுடன் சென்றதும்இது தான் அப்ப நடந்திருக்கு படிக்காமல் என்ன வியாசன் அண்ணா...சரி சரி ஏதோ தேடுற மாதிரி இருக்கு..என்ன ஓட்டோகிறாபோ? :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Nitharsan - 04-21-2005 அடிமை வாழ்வுக்குள்ளும் அருமையான காலங்கள் அவை அக்காவுடன் தங்கையுடன் அண்ணாவுடன் தம்பியுடன் அகமகிழ்ந்து கழிக்க முடியாத காலங்கள் அவை நட்பு எனும் நாயர்களாதல் நாளும் இன்பமாக்கப்பட்ட நேரம் இப்போ... கனவாகிப்போய்விட்ட சோகம் கடவுள் நினைத்தாலும் அந்த வரழ்வுதனை கடத்தி வரமுடியாது தோழா! காலத்தின் பெயரால் எம் முந்தையரும்.. பெற்றவர் செய்ய மறந்த தேசத்து கடமையால் கனவுடனே நாம் இங்கு மாற்றானின் நாட்டில் மடிகின்றோம் மனங்கள் இங்கே மரிக்க வில்லை மாறாய மடிகின்றன நீ சொன்ன காலங்கள் இங்கு இனிமேல் இல்லை நண்பா! அது ஒரு இரவின் கனவு போன்றது - இனி அந்த கனவின் நினைவுதானிருக்கும்- ஆனால் கனவு மீண்டும் வராது.... நெஞ்சத்தை திடமாக்கி நாளைய எம் சந்ததிக்கும் இக்கனவு கனவாகாமல் இருக்க உறுதி எடுத்துக் கொள்! இழந்த நினைவுகளை மீட்க முடியாத -ஆனால் இழந்த தேசத்தை மீட்க முடியும் நீயும் நானும் மனது வைத்தால்........ - வியாசன் - 04-21-2005 உண்மையை சொல்லுங்கள் நீங்கள் இந்த நாடுகளில் 100 வீதம் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? நன்றி நிதர்சன் என்னால் உங்களைப்போல் நளினமாக சொல்லமுடியவில்லை. அந்த புழுதி வாழ்க்கை மிகவும் இனிப்பானவையாக தெரிகிறது.இங்கு எவ்வளவு வசதிகள் இருந்தும் ஏதோ ஒரு ஏக்கம் நெஞ்சில் மழலை ஓட்டோகிராபோ என்னவோ எனக்கு தெரியவில்லை ஆனால் ஏக்கம் சொர்க்கமே என்றாலுமே அது.............................. - Nitharsan - 04-21-2005 என்ன வியாசம் 100 வீதமோ கடைசி ஒரு 5 வீதம் சந்தோச மாக இருக்கினமோ என்று கேட்கனும்... - tamilini - 04-21-2005 அண்ணை வியாசன் அண்ணா.. என்ன மலரும் நினைவுகளோ.. என்ன பண்ண நினைவுகளில் எனினும் மீட்டிடலாம். :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Malalai - 04-21-2005 நிச்சயமா நீங்க சொல்றது சரி வியாசன் அண்ணா....பெற்ற தாயும் பிறந்த பொன் நாட்டை விட எது சிறந்ததாக முடியும்?.... - வியாசன் - 04-21-2005 உங்களின் வார்த்தைகள் இழந்தவற்றை பெறமுடியும் என்று நம்பிக்கையூட்டுகிறது. தமிழ் நான்எங்கோ படித்த ஒரு கவிதையில் ஒருவரி அம்மா உன்னை மகிழ்விப்பதற்காக அப்பிளை படித்தபடி இரவல் காரின்முன் நின்று போட்டோ எடுத்து அனுப்புகீறேன் என்பதை நீ அறியாய் என்று இதுதான் எங்கள் வாழ்க்கை - tamilini - 04-21-2005 நம்மைப்பொறுத்தவரை..இந்த கலேர்ஸ் எல்லாம் எங்க.. அம்மா அப்பாவுக்கு காட்டிறது எங்களை நாங்க ஏமாற்றிற மாதிரி.. உள்ளதை சொல்லலாம் இங்க இருக்கிறவை.. மிதக்கல வாழினம் என்று.. உண்மையை அம்மா அப்பாவுடன் பகிர்வதே ஒரு சுகம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 04-21-2005 Quote:அப்பிளை படித்தபடிஇது தேவையில்லாததொன்று....உண்மையாக இருப்பதில் தானே வாழ்க்கையின் அடிப்படையே அமைந்து இருக்கிறது..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வியாசன் - 04-21-2005 அப்படியில்லை வெளிநாட்டுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் பெற்றோர்களுக்கு ஒரு காமதேனு. வெளிநாடுகளில் பணம் பொட்டியிருக்க அதை இங்குள்ளவர்கள் எடுத்து பெற்றோருக்கு அனுப்புகிறார்கள். இப்படித்தான்அவர்கள் நினைக்கிறார்கள். எத்தனை பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை முதிர் ஆடவர்களாக வைத்திருக்கிறார்கள். அவர்களின் இழப்பில்தான் பலர் நாட்டில் ஆடம்பர வாழ்வு நடத்துகிறர்கள்.. அவர்களுக்காகஎத்தனை பிள்ளைகள் இப்படி போலியான வாழ்க்கை நடத்துகிறார்கள். - Nitharsan - 04-21-2005 viyasan Wrote:அப்படியில்லை வெளிநாட்டுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் பெற்றோர்களுக்கு ஒரு காமதேனு. வெளிநாடுகளில் பணம் பொட்டியிருக்க அதை இங்குள்ளவர்கள் எடுத்து பெற்றோருக்கு அனுப்புகிறார்கள். இப்படித்தான்அவர்கள் நினைக்கிறார்கள். எத்தனை பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை முதிர் ஆடவர்களாக வைத்திருக்கிறார்கள். அவர்களின் இழப்பில்தான் பலர் நாட்டில் ஆடம்பர வாழ்வு நடத்துகிறர்கள்.. அவர்களுக்காகஎத்தனை பிள்ளைகள் இப்படி போலியான வாழ்க்கை நடத்துகிறார்கள். பெற்றவர்கள் பிள்ளையைப் பற்றி கவலைப்படா விட்டால்.. பிள்ளை பெற்றவரைப்பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும்..... தங்கள் நிலமையை ஊரிலுள்ள யாரிடமாவது புகலிடத்தவர்கள் சொல்லியதுண்டா? என்னப்பு வேலை என்றால் உணவகத்தில் டிஸ்வேஸ் வசய்யிறவன் சொல்லுவான் நான் உணவகத்தில் வேலை செய்யிறரன் அங்க நான் தான் மேற்பரர்வையாளரென்டு பிறகு அவர்களுக்கு எப்படி தெரியும் நீங்கள் இங்கு கஸ்டப்படுவது..... அத விட கடனுக்கு காரை வேண்டி அதுக்கு பக்கத்தில் நின்று போட்டொ எடுத்து இது தான் நான் வாங்கிய கார் 15000 டொலர் என்று சொன்னால்.... அங்க இருக்கிறதுகள் என்ன நினைக்கும் 15000 x 83.5=1,252,500 என்று கணக்கு பார்க்கும் பிறகு தம்பீட்ட தான் காசுக்கு வந்து நிக்கும்.. இது யாரின்ர பிழை அதுகளுக்கு என்ன தெரியும்..... ஊரில ஒருவன் சைக்கிளை தொலைத்து விட்டான் அருகில் நின்றவர் சொன்னார் டேய் நீ ஏன்ட அழுறாய் உன்ர அண்ணா தானே கனடாவில கலோ என்று சொன்னால் கிலோக்கனக்கில காசனுப்புவான் என்று.. இப்படியான நிலமையை உருவாக்கியது யார்? நாம் தானே எனவே இதற்க்கு நாம் தான் முகம் கொடுக்க வேண்டும் - hari - 04-22-2005 விசயன் அண்ணா நீங்கள் XP பாவிப்பவராக இருந்தால் ஒருக்கா System Restore செய்துபாருங்கள்! இழந்தவை சில சமயம் கிடைக்கலாம்! - VERNON - 04-22-2005 hari எழுதப்பட்டது: வெள்ளி சித்திரை 22, 2005 6:03 am Post விசயன் அண்ணா நீங்கள் XP பாவிப்பவராக இருந்தால் ஒருக்கா System Restore செய்துபாருங்கள்! இழந்தவை சில சமயம் கிடைக்கலாம் ஹரிக்கு கனவிலும் கணனி நினைப்புத்தான் நண்பர் வியாசன்ää எம்மில் பெரும்பான்மையானவர்களின் தங்கத்தை வெளியிட்டுள்ளார் - அது உண்மையானதும் கூட நட்புடன் vernon - VERNON - 04-22-2005 நண்பர் வியாசன் எம்மில் பெரும்பான்மையானவர்களின் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார் - அது உண்மையானதும் கூட - sathiri - 04-23-2005 வியாசன் நல்லாயிருக்கு எல்லப பிரச்சனைக்கும் என்னை சந்தியும் - Kurumpan - 04-25-2005 வியாசன் அண்ணா.... விபரமான ஆள்தான் நீங்கள்..... இழந்தவற்றை... அடி மனதில் இடித்தல்லவா சொல்லியிருக்கின்றீர்கள். எதுக்கும்... சாத்திரியிட்ட போங்கோ.. மை போட்டு தேடித்தருவார்....!!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 04-26-2005 வாழ்த்துக்கள் ஏதோ இழந்திருந்தாலும் கவிதை வந்திருகே... .. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> என்ன மன்னர் ரீஸ்ரோர் பண்ணுறதிலை நிற்கிறீர்கள்... களப்பக்கம் கண்டபடி காணவில்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |