04-18-2005, 08:38 PM
இந்தியம் வந்திங்கு
இம்சைகள் செய்ததன்று
செங்களம் சென்ற எம்
சொந்தங்கள் நாளும்
செருக்கு பிடித்த - இந்தி
இராணுவ இரணியர்க்கு
இரையாகினரே!
காந்தியின் மண்ணது
ஆணவத்தில் அகிம்சையை மறந்ததன்று
வல்லரசாய் வருவதற்க்கு
வதங்கள் பல புரிந்தது
சொந்த சோதரர்களை கொன்று
கொடி ஏற்ற கங்கனம் கட்டியது
கொள்கை மாறப் புலி கூட
கொடுத்தது ஆயுதத்தை
ஆயுத அகழ்வின் பின்
ஆரம்பித்தான் அவன் ஆட்டத்தை
இருந்தது மின்றி அழிகையில்
ஆரம்பித்தாள் அன்னையவள்
அகிம்சை போரினை
புல் கூட போராடும் எம் மண்ணில்
புதுமைப் பெண்ணாய் பிறந்தவளே!
அன்னை பூபதியே!
காந்தியத்துக்கு அகிம்சையின்
அர்த்தம் சொல்லி கொடுத்தவளே!
நீ மூட்டிய தீயிங்கு
தீவெங்கும் திரிவுற்றதம்மா!-இன்று
திசை எங்கும் தமிழர் பேச்சு -உலகெங்கும்
உரிமை கேட்கும் தமிழன் குரல்
உலகம் உணர்ந்தது உண்மையை
புலரும் காலையில் பதிதாய்- நாளை
புதிதாய் ஈழம் மலரும் - அன்று
பூபதி நீயும் பூவான எங்கள் - மா
வீரர்களும் புவி மீது மலராய்
பொழிவீர்கள்....
இம்சைகள் செய்ததன்று
செங்களம் சென்ற எம்
சொந்தங்கள் நாளும்
செருக்கு பிடித்த - இந்தி
இராணுவ இரணியர்க்கு
இரையாகினரே!
காந்தியின் மண்ணது
ஆணவத்தில் அகிம்சையை மறந்ததன்று
வல்லரசாய் வருவதற்க்கு
வதங்கள் பல புரிந்தது
சொந்த சோதரர்களை கொன்று
கொடி ஏற்ற கங்கனம் கட்டியது
கொள்கை மாறப் புலி கூட
கொடுத்தது ஆயுதத்தை
ஆயுத அகழ்வின் பின்
ஆரம்பித்தான் அவன் ஆட்டத்தை
இருந்தது மின்றி அழிகையில்
ஆரம்பித்தாள் அன்னையவள்
அகிம்சை போரினை
புல் கூட போராடும் எம் மண்ணில்
புதுமைப் பெண்ணாய் பிறந்தவளே!
அன்னை பூபதியே!
காந்தியத்துக்கு அகிம்சையின்
அர்த்தம் சொல்லி கொடுத்தவளே!
நீ மூட்டிய தீயிங்கு
தீவெங்கும் திரிவுற்றதம்மா!-இன்று
திசை எங்கும் தமிழர் பேச்சு -உலகெங்கும்
உரிமை கேட்கும் தமிழன் குரல்
உலகம் உணர்ந்தது உண்மையை
புலரும் காலையில் பதிதாய்- நாளை
புதிதாய் ஈழம் மலரும் - அன்று
பூபதி நீயும் பூவான எங்கள் - மா
வீரர்களும் புவி மீது மலராய்
பொழிவீர்கள்....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

