Yarl Forum
பூபதி....... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பூபதி....... (/showthread.php?tid=4445)



பூபதி....... - Nitharsan - 04-18-2005

இந்தியம் வந்திங்கு
இம்சைகள் செய்ததன்று
செங்களம் சென்ற எம்
சொந்தங்கள் நாளும்
செருக்கு பிடித்த - இந்தி
இராணுவ இரணியர்க்கு
இரையாகினரே!
காந்தியின் மண்ணது
ஆணவத்தில் அகிம்சையை மறந்ததன்று
வல்லரசாய் வருவதற்க்கு
வதங்கள் பல புரிந்தது
சொந்த சோதரர்களை கொன்று
கொடி ஏற்ற கங்கனம் கட்டியது
கொள்கை மாறப் புலி கூட
கொடுத்தது ஆயுதத்தை
ஆயுத அகழ்வின் பின்
ஆரம்பித்தான் அவன் ஆட்டத்தை
இருந்தது மின்றி அழிகையில்
ஆரம்பித்தாள் அன்னையவள்
அகிம்சை போரினை
புல் கூட போராடும் எம் மண்ணில்
புதுமைப் பெண்ணாய் பிறந்தவளே!
அன்னை பூபதியே!
காந்தியத்துக்கு அகிம்சையின்
அர்த்தம் சொல்லி கொடுத்தவளே!
நீ மூட்டிய தீயிங்கு
தீவெங்கும் திரிவுற்றதம்மா!-இன்று
திசை எங்கும் தமிழர் பேச்சு -உலகெங்கும்
உரிமை கேட்கும் தமிழன் குரல்
உலகம் உணர்ந்தது உண்மையை
புலரும் காலையில் பதிதாய்- நாளை
புதிதாய் ஈழம் மலரும் - அன்று
பூபதி நீயும் பூவான எங்கள் - மா
வீரர்களும் புவி மீது மலராய்
பொழிவீர்கள்....


- kuruvikal - 04-18-2005

ஈழத்தில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள் கண்டு கொதித்தெழுந்த அன்னையாம் பூபதியவள் கவிதை தந்து நினைவுகள் கிளறிவிட்ட நிதர்சனுக்கு நன்றிகள்..!


- tamilini - 04-18-2005

உணர்வான கவிதையை உருக்கமாய் இணைத்த நிதர்சன் அண்ணாவிற்க நன்றிகள்.


- KULAKADDAN - 04-18-2005

நன்றி


- vasisutha - 04-18-2005

கவிதைக்கு நன்றி நிதர்சன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .


- Nitharsan - 04-18-2005

குருவிகள் தமிழினி குளக்காட்டன் வசிசுதா உங்கள் கருத்துக்களுக்கு நன்றி


- hari - 04-19-2005

கவிதைக்கு நன்றி நிதர்சன்


- kavithan - 04-19-2005

நன்றி நிதர்சன் அருமை.