04-17-2005, 11:24 PM
பள்ளிபாளையத்தில் வெள்ளம் புகுந்து 7 பேர் பலி மாரியம்மன் சிலைஅழுவதாக பரபரப்பு இனி ஒரு குறையும் வராமல் காப்பேன் சாமியாடிய பெண் அருள்வாக்கு
பள்ளிபாளையம், ஏப்.16- பள்ளிபாளையத்தில் வெள்ளம் புகுந்து 7 பேர் பலியானதில், மாரியம்மன் சிலை அழுவதாக பரபரப்பு எழுந்ததால், இனி ஒரு குறையும் வராமல் காப்பேன் என்று சாமியாடிய பெண் அருள்வாக்கு கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூர் ஊராட்சியில் கடந்த 6-ந்தேதி இரவு பெய்த கனமழையால் ஆனங்கூர் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் புகுந்தது. இதில் 7 பேர் பலியானார்கள். 500 வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததில் 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தரைமட்டமானது. இந்த வெள்ளத்தால் சத்யாநகர் பகுதி பெரும் பாதிப்புக்குள்ளானது. இங்கு மட்டும் 3 பேர் உயிரிழந்தனர். எண்ணற்றோர் உயிர் பிழைத்த போதிலும் வீட்டையும், உடமைகளையும் இழந்து பள்ளிகளிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சம் புகுந்து உள்ளனர்.
கிராமத்தில் பெரும் சோகம் சூழ்ந்துள்ள தற்போதைய சூழல் காரணமாக சித்திரை மாதத்தில் விழா நடக்கும் சத்யா நகர் மாரியம்மனுக்கு விழா வினை தள்ளிவைப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கோவில் பூசாரியின் மருமகளை வெள்ளம் இழுத்து சென்றுவிட்டதால் கோவில் விழாவை சித்திரை மாதத்தில் நடத்துவதுகூடாது எனவும் சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் சத்யாநகர் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற சிலர் சாமி சிலையை உற்று கவனித்தனர். சாமியின் முகம் சோகம் சூழ்ந்து அழுவதைபோன்று காணப்பட்டதாம். இதைக்கண்ட அவர்கள் மாரியம்மன் அழுவதாக மற்றவர்களிடம் கூற பரபரப்பு ஏற்பட்டது. கிராமமக்கள் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அம்மன் சிலையை உற்று பார்த்தனர்.
அவர்களுக்கும் மாரியம்மன் உதட்டை கோனி அழுவதாக தோன்றுவதாக தெரிவித்தனர்.
இத்தகவல் காட்டுத்தீ போல பக்கத்து ஊர்களுக்கும் பரவவே ஏராளமானோர் வந்து மாரியம்மன் சிலையை பார்த்து சென்றனர். கிராமமக்களின் துயரநிலை கண்டே அம்மன் அழுவதாக கருதிய பலர் …நீயே அழுதால் நாங்கள் என்ன செய்வது தாயேஎன அம்மனை வணங்கினார்கள். அங்கிருந்த ஆசாரி தெருவை சேர்ந்த ஆடு மேய்க்கும் மாரியம்மாளுக்கு திடீர் அருள் வந்து ஆடினார். …15 நாளாக சொல்ல முடியாத மன துயரத்தில் இருப்பதாகவும், வந்த வெள்ளத்தை கட்டுப்படுத்த இயலாத வகையில் தன்னை சிலர் கட்டிப்போட்டு விட்டதாகவும், இந்த ஊரை விட்டு ஒருவரும் போகாதீர்கள், இனி ஒரு குறையும் வராமல் காப்பாத்துவேன், உடனடியாக விழா எடுங்கள் என்றும் அருள்வாக்கு கூறினார். அவருக்கு சுற்றி நின்றவர்கள் ஒரு குடம் நீரூற்றி வணங்கினார்கள்.
மாரியம்மன் அழுவதாக கிளம்பிய செய்தியால் சத்யா நகர் பகுதி நேற்று பரபரப் போடு காணப்பட்டது. செய்தியாளர்களும், புகைப்பட கலைஞர்களும் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதி மேலும் பரபரப்பு அடைந்தது.
தினகரன்

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>