04-16-2005, 01:27 PM
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா இடம் பிடிப்பதாயின் முதலில் இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும்
அரசியல் விமர்சகர் கல்யாணந்த கொடகே கூறுகிறார்
ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் தனக்கென ஒரு இடத்தை இந்தியா கைப்பற்ற வேண்டுமெனின் அது முதலில் தனது பிராந்தியத்தில் பாரிய பாதுகாப்புப் பிரச்சினையாக விளங்கும் இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு வழி செய்ய வேண்டுமென ஆங்கில தினசரியொன்றிற்கு எழுதியுள்ள கட்டுரையில் அரசியல் விமர்சகரான கல்யாணந்த கொடகே குறிப்பிட்டுள்ளார்.
பாரிய சனத்தொகையையும் அணுவாயுதங்களையும் மட்டும் வைத்திருப்பதன் மூலம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. குறைந்த பட்சம் தனது பிராந்தியத்திலாவது சமாதானம் மற்றும் சுபீட்சத்தை நிலை நாட்டுவதில் அர்த்தமுள்ள பங்களிப்பை இந்தியா நல்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர் இதுவரை இந்தியா சமாதான பாதுகாப்பு விடயங்களை உணர்ந்து கொண்டு அதற்கு துணை புரியும் வகையில் சாதித்தது என்னவென்று கேள்வியெழுப்புகிறார்.
இந்தியாவின் தோழனாக நான் இருக்கின்ற போதும் ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆசனத்திற்கான போட்டியில் இந்தியாவுக்கு தோல்வி என்றே முடிவு கூறுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பிராந்தியத்தில் அமைதியை உறுதிப்படுத்துவதற்கான வல்லமை இந்தியாவுக்கு இல்லாதிருக்க வேண்டும். அல்லது அதற்கான அரசியல் விருப்பு அற்று இருக்க வேண்டும். தமது பிரச்சினையைத் தீர்க்க முடியாத இந்தியாவால் எவ்வாறு எமது பிராந்தியத்தை பிரதிநிதித்துவம் செய்து சர்வதேச பாதுகாப்பிற்கும் சமாதானத்திற்கும் உத்தரவாதம் அளிக்க முடியும்? என கேள்விகளை அவர் மேலும் தொடுக்கிறார்.
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்திய பங்களிப்பு முன்னணி வகிக்க வேண்டுமென கொடகே அழைப்பு விடுக்கிறார். ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இருப்பானது இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் ஒரு அச்சுறுத்தலாக அமைகிறது. இலங்கையின் அரசியலிலே இரு துருவங்களாக விளங்கும் ஜனாதிபதி சந்திரிகாவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணிலும் இனப்பிரச்சினைக்கான சாத்தியமான தீர்வு குறித்து பொது உடன்பாடொன்றை எட்டுவதற்கு இந்தியா தகுந்த சந்தர்ப்பத்தை உருவாக்கித் தரவேண்டும்.
பல தசாப்தங்களாக இப்பிரச்சினை இலங்கையை அழித்து வந்தமைக்கு இர பிரதான அரசியல் கட்சிகளும் ஒருமித்த பார்வையுடன் இதனை நோக்காததே காரணமாகும்.
வரலாற்று ரீதியான காரணங்கள் தவிர அண்டை நாடென்ற வகையில் இலங்கையின் பாதுகாப்பிற்கும் நிலைத்தன்மைக்கும் ஆதரவு வழங்கக் கூடிய ஒரே ஒரு நாடு இந்தியாவே. ஆகவே சற்று விலகி நிற்கும் கொள்கையை இந்தியா கைவிட்டு இலங்கைக்கு சமாதானத்தை வரவழைப்பதில் இந்தியா உச்சப்பங்கை வழங்க வேண்டுமெனவும் கொடகே கோரியுள்ளார்.
ஜூன் 2003 இல் டோக்கியோ மாநாட்டில் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஜப்பான் மற்றும் நோர்வே ஆகியன சர்வதேச நிதி குறித்து தீர்மானிக்க பங்குபற்றியிருந்தன. ஆனால் இந்தியா விடுதலைப் புலிகள் இம்மாநாட்டில் சமுகமளிக்கவிருப்பதை காரணங்காட்டி அதில் பங்குகொள்ள மறுத்து விட்டது. ஏனெனில் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவிலே தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும்.
எனினும் அவ்வியக்கத்தை தடை செய்துள்ள அமெரிக்கா மாநாட்டில் பங்குபற்றியதை சுட்டிக்காட்டும் கொடகே அமெரிக்காவிற்கு வற்புறுத்த வேண்டிய தேவையில்லை. அவர்களின் பொறுப்புகளை அவர்கள் நன்கு உணர்ந்தவர்கள். உலகின் ஏக அதிகாரத் தலைவன் என்பதோடு மட்டுமல்லாது அமெரிக்கா இலங்கையின் விசுவாசமான நீண்டகால நண்பனும் கூட என அவர் அமெரிக்காவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
நன்றி: தினக்குரல்