Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா மாயை
#6
<b>ஒரு பட வெற்றியில் கட்டப்பட்ட ஸ்டூடியோ!</b>

<img src='http://www.vikatan.com/cinema/2005/apr/evmrajan_11.jpg' border='0' alt='user posted image'>
<b>சின்னராசு</b>

தமிழ்த்திரை உலகில் படங்களில் காதலர்களாக நடிக்க ஆரம்பித்து நாளடைவில் உண்மை வாழ்க்கையிலும் காதலர்களாக மாறி திருமணமும் செய்து கொண்டவர்களில் ஏ.வி.எம்.ராஜன் & புஷ்பலதா ஜோடியினரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

புதுக்கோட்டையில் இருந்து திரையுலகுக்கு வந்து பிரகாசித்தவர்களான பி.யு.சின்னப்பா, ஜெமினி கணேசனை அடுத்து வந்து பெயரெடுத்தவர் ஏ.வி.எம்.ராஜன்.

ஏ.வி.எம்.ராஜனிடம் ஒரு சமயம் ஜெமினி கணேசன் பேசிக் கொண்டிருக்கும்போது, Ôநாம் மூவரும் புதுக்கோட்டையில் இருந்து வந்தவர்கள் என்பதை எடுத்துக்காட்டவோ என்னவோ மூன்று பேருக்குமே முகத்தில் கொஞ்சம் சதை அதிகம்Õ என்றாராம்.

புஷ்பலதா நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தே திரையுலகுக்கு வரவேற்பு கிடைத்து வந்தார். எம்.ஜி.ஆர். நடத்தி வந்த இன்பக்கனவு, அட்வகேட் அமரன் நாடகங்களில் புஷ்பலதாவுக்கு நல்ல பெயர்.

Ôநானும் ஒரு பெண்Õ படத்தில் ஏ.வி.எம்.ராஜனும், புஷ்பலதாவும் காதலர்களாக வந்து ஒருவரை ஒருவர் ஏமாற்றி, Ôஏமாற சொன்னது நானோÕ என்ற பாடலை ஒருவர் பின் ஒருவர் பாடி அமர்க்களம் செய்தார்கள்.

ஏ.வி.எம்.ராஜன், புஷ்பலதா ஜோடி படங்களில் நடித்து வந்த காலத்திலேயே சிங்காரவேலன் என்பவர் எழுதி, சேஷாத்திரி குழுவினர் நடத்திய Ôகற்பூரம்Õ நாடகத்தில் பிரதான வேடம் ஏற்று பாராட்டுகளை பெற்றார்கள். அவர்கள் இருவரின் நடிப்பு அந்த நாடகத்தில் பெரும் சிறப்பாக இருந்ததால் அவர்களை அதே வேடங்களில் நடிக்க வைத்து அந்த நாடகத்தை திரைப்படமும் ஆக்கினார்கள்.

ஏ.வி.எம்.ராஜன் தன் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி உணர்ச்சிமயமான குணச்சித்திர பாத்திரங்களை தேர்ந்தெடுத்து வரவேற்பும் பெற்றுவந்தார்.

Ôமனிதருள் மாணிக்கம்Õ என்ற படத்தில் அப்படியரு வேடத்தில் ஏ.வி.எம்.ராஜன் நடிக்க, நகைச்சுவை கலந்த ஒரு கதாபாத்திரத்தில் சிவாஜி இரண்டாவது கதாநாயகனாக நடித்தார்.

தெய்வம், துணைவன் போன்ற படங்களில் எல்லாம் எ.வி.எம்.ராஜனுக்கு நல்ல வேடங்கள்.

ஏ.வி.எம். ராஜன், புஷ்பலதா ஜோடி திரையுலகில் ஓரளவு சம்பாதித்த நிலையில் சில படங்களுக்கு பைனான்ஸ் செய்ய ஆரம்பித்தார்கள். அதுவே ஒரு நாள் அவர்களையும் படம் எடுக்கிற ஆசையில் தள்ளியது.

Ôலாரி டிரைவர் ராஜ்கண்ணுÕ போன்ற இரண்டு மூன்று படங்களை தயாரித்து படங்களின் தோல்வியால் பெரும் இழப்புகளுக்கு ஆளானார்கள்.

இதுவரை காமாட்சி பக்தராக நெற்றி நிறைய திருநீரும், குங்குமமுமாக காட்சி தந்து வந்த ஏ.வி.எம்.ராஜன் தனது திரையுலக தோல்விக்குபின் முழுக்க மதமாற்றமாகி கிறிஸ்துவ போதகராக மாறிவிட்டார்.

<img src='http://www.vikatan.com/cinema/2005/apr/askoan_11.jpg' border='0' alt='user posted image'>
நடிகர் அசோகன் 1950 ஐ அடுத்து வந்த ஜெமினியின் Ôஅவ்வையார்Õ படத்தில் சில காட்சிகளில் ஒரு மன்னராக அறிமுகமாகி நடித்தார்.

அதன்பின் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த Ôஇல்லற ஜோதிÕ திரைப்படத்தை கவிஞர் கண்ணதாசன் எழுத, சிவாஜி & பத்மினியோடு வில்லனாக அசோகன் நடித்தார்.

Ôவீரத்திருமகன்Õ படத்தில் ஏற்றிருந்த குணச்சித்திர வேடமும், Ôமணப்பந்தல்Õ படத்தில் கிடைத்த உணர்ச்சி மயமான பாத்திரமும் அசோகன் புகழை உயர்த்தின.

இடையில் நிறைய படங்களில் வில்லன், இரண்டாவது கதாநாயகன் என வேடங்களை தாங்கி நடித்து வந்தார்.

டி.ஆர்.ராமண்ணா தயாரித்த Ôநான்Õ படத்தில் முதலில் ஆர்.எஸ்.மனோகர் பாத்திரம் மட்டுமே வில்லனாக சித்தரிக்கப்பட்டு படம் உருவானது. ஒருநாள் அசோகன் இயக்குனர் ராமண்ணாவை சந்திக்க வந்திருந்தபோது, Ôஅசோகனை ஒரு வித்தியாசமான வில்லனாக இந்தப்படத்தில் காட்டினால் என்னÕ என்று திடீரென உதித்த யோசனையின் காரணமாகவே அவர் Ôமொட்டைத்தலைÕ அசோகனாக மாற்றப்பட்டார்.

அப்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த Ôபத்துக் கட்டளைகள்Õ ஆங்கிலப் படத்தில் கூட வில்லனாக யூல் பிரின்னர் மொட்டைத் தலையனாகவே தோன்றினார்.

ஆக Ôநான்Õ படத்திற்காக மொட்டைத் தலையாக மாறிவிட்ட அசோகன், அந்தப் படத்தில் வழக்கமான வில்லன்களைப் போல குரூரமான பார்வை, சிரிப்போடு தோன்றாமல், இழுத்து இழுத்துப் பேசிக்கொண்டு எக்காளமான சிரிப்புடன் வித்தியாசமாக அந்தப் பாத்திரத்தை வெளிப்படுத்தி பெரிய வெற்றியும் கண்டார்.

அதன்பிறகு எல்லாப் படங்களிலுமே அசோகன் கோமாளித்தனமுள்ள கொடூரன் மாதிரியே நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

பின்னாளில் அசோகன் மிக உணர்ச்சிகரமான பாத்திரத்தில் அனைவர் உள்ளத்திலும் இடம்பிடிக்கிற மாதிரி நடித்தார் என்றால், அது சிவாஜியுடன் நடித்த Ôஉயர்ந்த மனிதன்Õ படம்தான்.

தவிர பி.எஸ்.வீரப்பா சொந்தப்பட கவனத்திலும், பிரச்னையிலும் மற்ற படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். படங்களில் அந்தக் குறையை போக்க அசோகனே வில்லன் வேடங்களை தாங்கி கொடூரமான கதாபாத்திரங்களை சித்தரித்துவந்தார்.

இப்படி தன் நடிப்புப் பணி சிக்கல் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்தான் அசோகனுக்கும் சொந்தப்பட ஆசை வந்தது.

Ôநேற்று இன்று நாளைÕ என்ற பெயரில் எம்.ஜி.ஆரை வைத்து படத்தயாரிப்பில் இறங்கினார்.

அதுவரை வயது மூத்த குழந்தை மாதிரி நடவடிக்கைகளை கொண்டிருந்த அசோகன், தன் சொந்தப் படத் தயாரிப்பில் ஏற்பட்ட எதிர்பாராத பிரச்னைகளால் சோகமே உருவான அசோகனானார்.

Ôநான் மெட்ராஸ் வரும்போது வெறுங்கையை வீச்க் கொண்டுதான் வந்தேன்! இப்போ மறுபடி வெறுங்கையோடுதான் ஊருக்குத் திரும்பணும்னு இருந்தா அதையும் ஏத்துக்க வேண்டியதுதான்Õ என்ப பேச ஆரம்பித்தார்.

Ôநேற்று இன்று நாளைÕ படமும் வெளிவந்து எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் இதுவரை சம்பாதித்ததை எல்லாம் அசோகன் இழந்தார்.

அந்த கவலையே அவரை அதன்பின் அதிக நாட்கள் வாழவிடவில்லை.
<img src='http://www.vikatan.com/cinema/2005/apr/mnrajam_11.jpg' border='0' alt='user posted image'>
நடிகை எம்.என்.ராஜம் தமிழ்த்திரை உலகில் உள்ள சிறந்த நடிகைகளில் ஒருவராக விளங்கியவர் என்பதுடன், தமிழை அழகாக உச்சரிக்கிற நடிகைகளிலும் ஒருவராக திகழ்ந்தார்.

காரணம் தமிழ்த்திரையுலகில் பெரும்பாலான நடிகைகள் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கக்கூடிய நிலையில் எம்.என்.ராஜம் தமிழ்நாட்டிலே பிறந்த நடிகையும் ஆவார்.

1948ல் Ôநல்ல தம்பிÕ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான எம்.என்.ராஜம் மேலும் ஓரிரு படங்களில் சிறுசிறு வேடம் தாங்கிவிட்டு அதன்பின் நாடகங்களிலெ நடிகையாக தொடர்ந்து இருந்துவந்தார்.

1954 Ôரத்தக்கண்ணீர்Õ வரும்போது அதில் காந்தா என்ற பாத்திரத்தில் எம்.ஆர்.ராதாவோடு நடித்து அந்த ஒரு படத்தின் மூலமே எல்லோருக்கும் அறிமுகமான ஒரு நடிகையாக உயர்ந்துவிட்டார்.

அந்தப் படத்தில் மோகனாக வருகிற ராதா, தன் செல்வத்தை எல்லாம் காந்தா என்ற விலைமகளிடம் இழந்து, பெரு நோயும் வந்து, Ôஅடியே காந்தாÕ என வசனம் பேசியபடியே படத்தில் பல இடங்களில் கத்துவார்.

ரசிகர்களும் பல நாட்கள், ராதா பாணியில், Ôஅடியே காந்தாÕ என குரல் எழுப்பின் வேடிக்கை செய்து வந்ததினால், எம்.என்.ராஜம் வெகுகாலம் காந்தா என்ற பெயரிலேயே ரசிகர்களின் மனதிலே பதிந்திருந்தார்.

சிறந்த வில்லி வேடங்களில் மட்டுமல்லாது கதாநாயகி வேடங்களிலும் எம்.என்.ராஜம் பரிமளித்தார்.

ÔமகாதேவிÕ படத்திலும், Ôசிவகங்கை சீமைÕ படத்திலும் உயர்ந்த பண்புள்ள தமிழ்ப் பெண்ணாக உயர்ச்சிமிக்க வசனங்களைப் பேசி ரசிகர்களை வியப்பிலே ஆழ்த்தியவர் எம்.என்.ராஜம்.

எம்.ஜி.ஆர். சிவாஜியோடு எல்லாம் ஜோடியாக நடித்தவர்.

பின்னாளில் பாடகர் ராகவனை மணந்து கொண்டார்.

ஸ்டூடியோவில் படிப்பிடிப்புக்காக கணவருடன் வரும் எம்.என்.ராஜத்தை ஒரு சோதிடர் வழக்கமாக சந்தித்துப் பேசிப் பழகிக் கொண்டிருந்தார். அந்த சோதிடர் கூறிய செய்திகள் சில நாளில் உண்மையிலேயே நடந்துவிட்டதைக் கண்டு எம்.என்.ராஜத்திற்கும் அவரது கணவர் ராகவனுக்கும் அந்த சோதிடர் மீது பெரிய மரியாதை ஏற்பட்டுவிட்டது.

ஒருநாள் அந்த சோதிடர், Ôநீங்கள் இப்போது சொந்தபடம் தயாரித்தால் பணமாக வந்து குவியும்Õ என்று ஆசை கிளப்பிவிட்டார்.

Ôஇவர் சொல்வது எல்லாம் நடந்திருக்கிறதேÕ என்ற நம்பிக்கையில் எம்.என்.ராஜமும் கணவர் ராகவனும் படத்தயாரிப்பில் இறங்கிவிட்டார்கள்.

படம் வெளிவந்து பெரிய தோல்வியை தழுவவே சுமார் இருபது ஆண்டுகளாக எம்.என்.ராஜம் சம்பாதித்ததை எல்லாம் இழந்து பல சோதனைகளுக்கு ஆளானார்.

அதிலிருந்து தங்களை படம் எடுக்கத் தூண்டிவிட்ட சோதிடரை தேடிக் கொண்டே இருக்கிறார்.
<img src='http://www.vikatan.com/cinema/2005/apr/gopalakrishnan_11.jpg' border='0' alt='user posted image'>
தமிழ்த்திரை உலகில் வாழ்க்கைத் தத்துவங்களை உரைநடை நடையில் எழுதி தனிப்புகழ் நாட்டியவர் இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலாகிருஷ்ணன்.

மிக அருமையாக கதையும் வசனமும் எழுதக்கூடிய கே.எஸ்.கோபால கிருஷ்ணனை வெகுகாலம் யாரும் புரிந்துகொள்ளவில்லை.

சென்னையில் வாழ்ந்து எப்படியாவது திரையுலகில் நுழைய வேண்டும் என்பதற்காக, ஒரு வருவாயை தேடிக்கொள்ள தஞ்சையில் இருந்து சென்னைக்கு வாழை இலையை தருவித்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

பின்னர் கலைவாணரின் நாடகக் குழுவில் தான் ஒருவராக சேர்ந்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.

அந்த சமயம்தான் சரவணா யூனிட் என்ற படக்கம்பெனி தாங்கள் தயாரிக்கப் போகும் படத்திற்கு கதை தேடிக் கொண்டு இருந்தார்கள்.

இயக்குனர் ஸ்ரீதர் தன் முதல்படமான Ôரத்தப்பாசம்Õ வந்த பிறகு Ôஎதிர்பாராததுÕ என்ற பெயரில் எழுதி வைத்திருந்த கதையை சரவணா யூனிட்டில் கொண்டு வந்து தந்தார். அந்த சமயம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் Ôதம்பிÕ என்ற பெயரில் ஒரு கதையை கொண்டு வந்து அங்கே தர வந்திருந்தார்.

அந்த நேரம் ஸ்ரீதரும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் அறிமுகமாகிக் கொண்டார்கள்.

ஒருநாள் சரவணா யூனிட் படக்கம்பெனி ஸ்ரீதர் கதையை தேர்வு செய்ததாகச் சொல்லி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதையை திருப்பி தந்துவிட்டது.

ஏற்கனவே கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மூலம் அவர் கதையை கேட்டிருந்த ஸ்ரீதர், Ôஉங்கள் கதையும் நன்றாகத்தான் இருந்தது. கதை திரும்ப வந்துவிட்டால் மனம் தளராதீர்கள். உங்களுக்கு பாட்டும் எழுத முடியும் என்றீர்களே.. உங்களுக்கு பாட்டு எழுதுகிற வாய்ப்பு கிடைக்க நான் உதவுகிறேன்Õ என்றார். அவ்விதமே இரு பாடல் எழுதுகிற வாய்ப்பையும் ஸ்ரீதர் வாங்கிக் கொடுத்தார்.

இதன் மூலம் ஸ்ரீதர் நட்பு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்குத் தொடர்ந்தது.

அடுத்து ஸ்ரீதர் கூட்டம் Ôஅமரதீபம்Õ படத்தைத் தயாரித்தபோது அந்தப் படத்திலும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு பாட்டு எழுதும் வாய்ப்பைத் தந்தார். Ôஅமரதீபம்Õ படத்தில் சிவாஜி முதல் காட்சியில் வரும்போதே Ôநாணயம் மனுசனுக்கு அவசியம்Õ என்று பாடுகிற பாட்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பாட்டுதான்.

இப்படி சின்னச் சின்ன வாய்ப்புகளோடு சில வருடங்கள் ஓடின.

நடிகர் நம்பிராஜன் (குமரிமுத்து அண்ணன்) கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கதை ஒன்றை இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சுவிடம் கொண்டுவந்து தந்தார். கதையை வாசித்துப் பார்த்த அவர்களுக்கு பிடித்துவிட்டது.

கதாசிரியரை அழைத்து வா என நம்பிராஜனிடம் தகவல் கூறி அனுப்பினார்கள். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வந்து நின்றபோது, அவர் ஊர்க்காரரும் நண்பருமான மல்லியம் ராஜகோபாலும் வந்து, Ôஇந்தக் கதை என்னுடையதுÕ என்றார்.

கிருஷ்ணன் பஞ்சுவுக்கு ஒன்றும் புரியவில்லை.

கடைசியில் கதையின் சில காட்சிகளை கூறி வசனம் எழுதி வருமாறு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடமும், மல்லியம் ராஜகோபாலிடமும் சொன்னார்கள்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதிவந்த வசங்களே கதைக்குப் பொருத்தமாக இருந்ததால், அவர்தான் உண்மையான கதாசிரியர் என ஏற்றுக் கொண்டார்கள்.

அந்தக் கதைதான் திரைப்படமாக மாபெரும் வெற்றி பெற்ற Ôதெய்வப்பிறவிÕ! சிவாஜி, பத்மினி, எஸ்.எஸ்.ஆர். எம்.என்.ராஜம் நடித்த படம்.

Ôபடிக்காத மேதைÕ படத்திற்கு திரைக்கதை, வசனம் அடுத்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதினார். ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி நடித்த அந்தப்படமும் மகத்தான வெற்றி.

இந்தப் படத்தைப் பற்றி இயக்குனர் ஸ்ரீதர் கூறும்போது, Ôஎன்னைத்தான் முதலில் இந்தப்படத்திற்கு வசனம் எழுத அழைத்தார்கள். கதையை படித்துப் பார்த்த நான், இந்தப் படத்தில் சிறப்பாக வசனம் எழுத வாய்ப்பில்லை என கூறிவிட்டு வந்துவிட்டேன். இப்போது பாம் வந்தபிறகு பார்த்தபோதுதான், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எவ்வளவு திறமையாக இந்தக் கதையை கையாண்டிருக்கிறார் என வியந்து போனேன்Õ என்றார்.

படிக்காத மேதையை அடுத்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கைராசி, அன்னை, குமுதம் போன்ற வெற்றிப் படங்களுக்கு எழுதினார்.

அதன்பிறகுதான் தான் வசனம் எழுதுவதோடு படத்தை இயக்கவும் வேண்டும் என்று, ஏ.எல்.எஸ். புரொடக்ஷனுக்காக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதி, இயக்கிய படமே ÔசாரதாÕ; மிகப் பெரிய வெற்றிப்படம்.

அடுத்து Ôகற்பகம்Õ என்ற பெயரில் தான் தயாரித்த படத்தில் ஜெமினி, சாவித்திரியோடு, புதுமுகமாய் கே.ஆர்.விஜயாவை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினார். Ôகற்பகம்Õ படம் பெயருக்கேற்ப செல்வ மழையை பொழிந்தது.

அந்தப் படத்தின் மகத்தான வசூலில்தான் Ôகற்பகம்Õ ஸ்டூடியோÕவையே கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கட்டினார்.

தொடர்ந்து கைகொடுத்த தெய்வம், பணமா பாசமா, வாழையடி வாழை, குலமா குணமா என வெற்றிப் படங்களாக எடுத்து தள்ளினார்.

மிக பிரமாண்டமான படமாக ஆதி பராசக்தி படத்தைத் தயாரித்தார். பெரிய வெற்றி பெற்றது.

தொடர்ந்து மீண்டும் பிரமாண்டமாக Ôதசாவதாரம்Õ படத்தைத் தயாரித்தார். சின்ன வயதில் நவாப் ராஜமாணிக்கம் நாடக கம்பெனியில் இருந்தபோது Ôதசாவதாரம்Õ நாடகத்தைப் பார்ததும் அது சம்பந்தமான புராண நூல்களைப் படித்தும் அந்தக் கதையில் பெரிய ஈடுபாடு கொண்டிருந்தார்.

தன் ஸ்டூடியோவில் ஒரு சேர், ஒரு பேன் பாக்கியில்லாமல் அத்தனையையும் அடமானம் வைத்து படத்தைத் தயாரித்தார்.

Ôதசாவதாரம்Õ பெரிய அபராதமாக தோல்வியடையவே, அத்தனை சொத்துக்களும் கடனில் மாட்டிக்கொள்ள சிலவற்றையே அவரால் மீட்க முடிந்தது.




தொடரும்
vikatan.com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
சினிமா மாயை - by vasisutha - 04-15-2005, 10:34 AM
சினிமா மாயை (பாகம்6) - by vasisutha - 04-15-2005, 11:09 AM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:14 AM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:15 AM
[No subject] - by vasisutha - 04-15-2005, 11:23 AM
[No subject] - by Eswar - 04-16-2005, 02:41 AM
[No subject] - by vasisutha - 04-16-2005, 03:00 AM
[No subject] - by kavithan - 04-16-2005, 05:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)