Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா மாயை
#5
<b>புதுமைகளைப் புகுத்திய ஸ்ரீதருக்கும்
பொல்லாத சோதனை வந்ததெப்படி?</b>
<img src='http://www.vikatan.com/cinema/2005/apr/chandrababu_07.jpg' border='0' alt='user posted image'>
<b>சின்னராசு</b>

சொந்தப்படம் தயாரித்து சோதனைக்கு ஆட்பட்டவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

சந்திரபாபு இணையில்லாத நடிகர்

மிக சிரமப்பட்டு ஆரம்ப காலங்களில் வாய்ப்புகளைப் பெற்றார். மூன்று பிள்ளைகள், ராஜு என் கண்மணி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போன்ற ஆரம்பகால படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தார்.

மாமன் மகள், குலேபகாவலி போன்ற படங்களில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரமேற்று புகழ் உச்சிக்கு போனார்.

Ôநாடோடி மன்னர்Õ படத்தில் கோழி முட்டைகளை உடைத்து உடைத்து வாயில் போடுகிறவர். திடீரென முகம்மாறி வாயைத் திறக்கும்போது உள்ளேயிருந்து கோழிக்குஞ்சு பறந்து வருகிற நகைச்சுவையில் வியப்பில் ஆழ்த்தினார்.

Ôசபாஷ் மீனாÕ திரைப்படத்தில் சிவாஜியை விட சந்திரபாபுவுக்கே வாய்ப்புகள் அதிகம். இரட்டை வேடத்தில் வருவார்.

மேல்நாட்டுப் பாணியை கலந்து அருமையாக ஆடுவார். சொந்தக் குரலில் பாடுவார். உயரமான இடங்களில் இருந்து அப்படியே தலைகீழாக விழுவார்.

சந்திரபாபுவின் காமெடி நடிப்பை மட்டும் இன்னொருவர் பின்பற்றவே முடியாது.

கவலை இல்லாத மனிதன், குமாரவேலன் படங்களில் கதாநாயகனாகவே நடித்தார்.

தான் கட்டிய வீட்டைக் கூடப் புதுமையாக, கார் மாடியில் போய் நிற்கும்படியாகக் கட்டினார்.

அந்தக்காலங்களில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் ஐம்பதினாயிரம் ரூபாய் என்ற அளவிலேயே ஒரு படத்தில் பல மாதங்கள் நடிக்க சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஏ.வி.எம். தயாரித்த ÔசகோதரிÕ படம் முடிவடைந்த நிலையில் சந்திரபாபு காமெடி சேர்த்தால்தான் படம் வெற்றிபெறும் என்று முடிவு செய்து அவசரமாக பத்துநாள் படப்பிடிப்பு வைத்து நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் சம்பளம் தந்து இவரை நடிக்க வைத்தது பிரமிப்பாகப் பேசப்பட்டது.

அப்படி ÔஓஹோÕ என இருந்த நடிகர் சந்திரபாபு சொந்தப்படமாக Ôதட்டுங்கள் திறக்கப்படும்Õ என்ற படத்தை துவக்கி தானே இயக்கி நடிக்க ஆரம்பித்தார்.

கிட்டத்தட்ட வெளிப்படங்களை எல்லாம் ஒப்புக்கொள்ளாத நிலையில், தொடர்ந்து படங்களில் சந்திரபாபு காணாமல் போனதோடு, சொந்தப்படமும் வெளிவந்து தோல்வியடைந்தது.

அவ்வளவுதான் அந்தக் கடனில் சிக்கிக் கொண்ட சந்திரபாபு நிம்மதியிழந்து. படங்களில் நடிக்கிற வாய்ப்புகள் குறைந்து மிகுந்த சோதனையான சூழ்நிலையிலேயே காலமானார்.

நடிகர் வி.கே.ராமசாமி ஒரு சிரஞ்சீவி நடிகராக திகழ்ந்தவர்.

1947ல் Ôநாம் இருவர்Õ படத்தில் அறிமுகமான இவர் 2000தையும் தாண்டி 55 வருடங்களாக நடித்து வந்தார்.

நீண்டகாலமாக திருமண செய்யாமலேயே இருந்துவந்த வி.கே.ஆர். சொந்தப்படம் தயாரிப்பில் ஆர்வம் கொண்டார்.

அருட்செல்வர் ஏ.பி.நாகராஜனோடு இணைந்து Ôமகாலட்சுமி பிலிம்ஸ்Õ என்ற படக் கம்பெனியை துவக்கி முதன் முதலாக Ôமக்களைப் பெற்ற மகராசிÕ என்ற படத்தை சிவாஜியை வைத்துத் தயாரித்தார்.

படம் வெற்றி பெற்றது. மீண்டும் சிவாஜியை வைத்து Ôவடிவுக்கு வளைகாப்புÕ, எம்.ஆர்.ராதாவை வைத்து Ôநல்ல இடத்து சம்பந்தம்Õ போன்ற படங்களை தயாரித்தார்.

பின்னர் அந்தப் படக் கம்பெனி செயல்படவில்லை. வெகுகாலம் கழித்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை, வசனத்தில் சிவாஜியை வைத்து Ôசெல்வம்Õ படத்தை வி.கே.ஆர். தயாரித்தார். எதிர்பார்த்த வெற்றி படத்துக்கு கிடைக்கவில்லை.

காலம் ஓடியது. Ôருத்ர தாண்டவம்Õ கதையை நகைச்சுவை வீரப்பன் எழுதித்தர அதை நாடகமாக நடித்த வி.கே.ஆர். அந்த நாடகத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு சொந்தப்படமாக தயாரித்தார்.

முடிவு பல லட்சங்கள் கடனாகி சொந்த பங்களாக்களை விற்றார். கடன் இன்னும் தீரவில்லை என்ற நிலையில், படக் கம்பெனிகளுக்கு இவரே வலிய சென்று வாய்ப்புகள் கேட்டார்.

ரஜினிகாந்த் தனது சொந்தப்படம் ஒன்றின் லாபத்தில் இருந்து நலிந்த கலைஞருக்கு உதவிட வி.கே.ஆருக்கு ஐந்து லட்ச ரூபாய் தந்ததாக கூறினார்கள்.

ஆனாலும் வி.கே.ஆர். முழுக் கடனும் தீர்க்கப்படாமலே காலமானார்.

தமிழ் திரைவானில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஸ்ரீப்ரியா ஒருவர்.

Ôஅவள் ஒரு தொடர்கதைÕ படத்தில் அறிமுகமாகி விரைவாக முன்னணி நட்சத்திரப் பதவி அடைந்து சிவாஜியுடன் தொடர்ந்து நடிக்கலானார். பின்னர் கமலுடன், ரஜினியுடன் நிறைய நடித்தார்.


இந்த நேரம்தான் சொந்தப்படம் எடுக்கிற ஆசை வந்தது. ÔநீயாÕ என்ற முதல் படம் வெற்றிப்படம்.

அடுத்து தெலுங்கில் வெற்றி பெற்ற Ôசிவரஞ்சிÕயை தமிழில் நட்சத்திரம் என்ற பெயரில் தயாரித்தார்.

படம் அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. காரணம் தமிழக முன்னணி கதாநாயகர்கள் அனைவரும் படத்தில் இருந்தனர்.

ஆனால் எதிர்பார்க்கப்பட்ட படம் தோல்வி அடைந்தது. அதன் பலன் சம்பாதித்ததை எல்லாம் ஸ்ரீப்ரியா இழந்தார்.

நெருக்குகிற கடன்காரர்களுக்கு அடுத்தப் படத்தில் நிச்சயம் கணக்கை தீர்த்துவிடுவேன் எனச் சொல்வதற்காக Ôசாந்தி முகூர்த்தம்Õ என்றொரு படத்தை ஸ்ரீப்ரியாவே இயக்கி தயாரித்தார்.

அதுவும் தோல்வி... இனி மீள முடியுமா?

<img src='http://www.vikatan.com/cinema/2005/apr/srdar_07.jpg' border='0' alt='user posted image'>
தமிழ்த் திரையுலகில் புதுமைகளுக்கு வழி கோலியவர் என மதிக்கப்பட்டவர் இயக்குனர் ஸ்ரீதர்.

இவர் முதலில் டி.கே. சண்முகமுகத்தின் Ôரத்தப்பாசம்Õ நாடகத்திற்கு கதை எழுதித் தந்தார். நாடகத்தில் வரவேற்பு பெற்ற இந்த கதை திரைப்படமும் ஆகவே அதன் மூலம் திரையுலகில் காலைப் பதித்தவர் ஸ்ரீதர்.

அடுத்துப் புரட்சிகரமான கதையம்சம் கொண்ட Ôஎதிர் பாராததுÕ என்ற திரைக்கதையை ஸ்ரீதர் எழுதினார். சரவணா யூனிட் என்ற படக்கம்பெனி அதை சிவாஜி, பத்மினியை வைத்து எடுத்தது.

பின்னர் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் என்ற இரு நண்பர்களுடன் ஸ்ரீதரும் சேர்ந்து வீனஸ் பிக்சர்ஸ் என படக் கம்பெனியை துவக்கினார்கள்.

அதன் சார்பாக தயாரிக்கப்பட்ட முதல்படம் ஸ்ரீதரின் Ôஅமரதீபம்Õ, சிவாஜி, பத்மினி, சாவித்திரி ஆகியோர் நடத்த படம் வெற்றிபெற்றது. அதே கதையை இந்தியில் தயாரிக்கும்போது சிவாஜியும் தயாரிப்பில் பங்கு பெற்று, தேவ் ஆனந்த், வைஜெந்திமாலா ஆகியோரை வைத்து எடுக்கப்பட்டது.

இதனை அடுத்து சிவாஜியை வைத்து இரட்டை வேடங்களில் முதன்முதலாக உத்தமபுத்திரன் படம் ஸ்ரீதர் திரைக்கதை, வசனத்தில் எடுக்கப்பட்டு அதுவும் வெற்றிப்படமாக அமைந்தது.

இதன்பின் ஸ்ரீதர் கதை, வசனத்துடன் இயக்குனராகவும் பொறுப்பேற்று தயாரித்த படம்தான் Ôகல்யாண பரிசுÕ இதில் ஜெமினி கணேசன், சரோஜாதேவி நடித்து பெரிய வெற்றியை பெற்றது. இந்தியில் ஸ்ரீதர் இந்தப் படத்தை தயாரித்தபோது ராஜ்கபூரும், தெலுங்கில் நாகேஸ்வரராவும் நடித்தனர்.

இதனையடுத்து ஒரே செட்டில் புதுமையாக ஒரு படத்தை ஸ்ரீதர் தயாரித்தார். திரையுலகில் புதுமையான அந்தப் படம்தான் பெரிய வெற்றிப் பெற்ற Ôநெஞ்சில் ஓர் ஆலயம்Õ. இந்தப் படத்தில் கன்னட நடிகரான கல்யாண்குமாருடன் நடிகர் முத்துராமனும், நாகேஷ§ம் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இந்த படத்தை Ôசித்ராலயாÕ என்ற சொந்த நிறுவனத்தில் தயாரித்தார்.

இதையடுத்து வண்ணப்படங்கள் அறிமுகமாக துவங்கிய காலக்கட்டத்தில் முதன்முதலாக சென்னையில் கொண்டுவரப்பட்ட ஜெமினி கலர் லாபரட்டிரியில் தயாரான பெரும் வெற்றிப்படம்தான் ஸ்ரீதரின் Ôகாதலிக்க நேரமில்லைÕ என்ற படமாகும். இந்தப் படத்தில் முத்துராமனின் ஜோடியாக புதுமுகம் காஞ்சனாவும், சில படங்களில் வந்திருந்த ராஜ்ஸ்ரீயுடன் புதுமுகம் ரவிச்சந்திரனையும் ஸ்ரீதர் நடிக்க வைத்திருந்தார்.

அடுத்து Ôதேன் நிலவுÕ என்ற படம் தமிழ் திரையுலகில் முதன் முதலாக முழுவதுமாக காஷ்மீரிலேயே எடுத்தப்படமாக அமைந்தது. ஜெமினிகணேசன், வைஜெயந்திமாலா நடித்திருந்தனர். படம் சுமாரான வெற்றியே.

இவற்றை அடுத்து வண்ணத்தில் ஸ்ரீதர் தயாரித்ததுதான் Ôவெண்ணிற ஆடைÕ திரைப்படம். இதில்தான் இன்றைய முதல்வர் ஜெயலலிதாவை முதன்முதலாக ஸ்ரீதர் அறிமுகப்படுத்தினார்.

இடையே 24 மணி நேரத்தில் ஒரு படத்தை தயாரிக்க ஸ்ரீதர் திட்டமிட்டு பின்னர் அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இவற்றையடுத்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் ஸ்ரீதர் இயக்கத்தில் படங்கள் வந்தன.

எம்.ஜி.ஆரை வைத்து Ôஅன்று சிந்திய ரத்தம்Õ என்ற விடுதலைப் போராட்ட வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக ஸ்ரீதர் அறிவித்து சிலநாள் படப்பிடிப்பு வேலைகளையும் நடத்தினார்.

ஆனால் ஏனோ அந்தப்படம் வளராமல் நின்றுவிட்டது.

அதே கதையைத்தான் சில மாற்றங்களுடன் Ôசிவந்தமண்Õ என்ற பெயரில் தயாரிக்கப்போவதாக ஸ்ரீதர் அறிவித்தார்.

இந்தப் படத்தை ஒரே சமயத்தில் தமிழிலும், இந்தியிலும் ஸ்ரீதர் தயாரிக்கலானார். தமிழில் சிவாஜியிம் இந்தியில் ராஜேந்திர குமாரும் நடித்தனர். தமிழில் முத்துராமன் நடித்த கௌரவ வேடத்தில், இந்தியில் சிவாஜி நடித்தார். பிரம்மாண்டமாக அதிகப் பொருட்செலவில் படம் உருவாக்கப்பட்டது.

முதன்முதலாக வெளிநாடுகளிலும் சில காட்சிகளை இப்படத்திற்காக ஸ்ரீதர் எடுத்தார்.

இந்தப் படத்தில் ஒரு நதிக்கரையை ஒட்டி ஒரு சிறு வீடு இருப்பது போன்ற வருகிற காட்சிக்காக ஏராளமான பொருட்செலவில் ஒரு செயற்கை நதியையே வாஹினியில் பெரிய செட்டாக போட ஸ்ரீதர் ஏற்பாடு செய்தார்.

முதலில் இதற்காக போடப்பட்ட செட் தண்ணீர் கொள்ளளவை தாங்காமல் உடைந்து பெரிய நட்டமாகியது. மறுபடி இன்னொரு செட் போட்டு படத்தை எடுத்தார்.

இப்படி வரையறையில்லாமல் செலவு செய்து தயாரிக்கப்பட்ட Ôசிவந்தமண்Õ படம் தமிழிலும் இந்தியிலும் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் போகவே ஸ்ரீதர் பெரிய பண இழப்புக்கு ஆளானார்.

அதன்பின் ஸ்ரீதரின் சித்ராலயா நிமிர்ந்து நிற்கவே முடியாமல் போனது.

இந்நிலையில் எம்.ஜி.ஆரை வைத்து, உரிமைக்குரல், மீனவ நண்பன் என இரு படங்களை ஸ்ரீதர் தயாரித்தும் ஏற்கனவே உள்ள கடன் பிரச்னையிலிருந்து மீளவே முடியவில்லை.



தொடரும்..
vikatan.com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
சினிமா மாயை - by vasisutha - 04-15-2005, 10:34 AM
சினிமா மாயை (பாகம்5) - by vasisutha - 04-15-2005, 11:02 AM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:14 AM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:15 AM
[No subject] - by vasisutha - 04-15-2005, 11:23 AM
[No subject] - by Eswar - 04-16-2005, 02:41 AM
[No subject] - by vasisutha - 04-16-2005, 03:00 AM
[No subject] - by kavithan - 04-16-2005, 05:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)