Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா மாயை
#4
<b>சாவித்திரியின் பிராப்தம் அப்படி! </b>
<img src='http://www.vikatan.com/cinema/2005/apr/savithiri_p.jpg' border='0' alt='user posted image'>
<b>சின்னராசு</b>

மதுரை வீரன் என்ற மகத்தான வெற்றிப்படத்தை தயாரித்தவர் கிருஷ்ணா பிக்சர்ஸ் அதிபர் லேனா செட்டியார்.

தமிழ்த் திரைப்பட உலகில் வெகுகாலம் நடிக, நடிகையருக்கு, காட்பாதரா விளங்கியவர் இவரே.

குறிப்பாக திரையுலகுக்கு வரப்போகிற, வந்துவிட்ட புதுமுக நடிகைகள் தாங்கள் படவுலகில் கால் ஊன்றும் வரை லேனவின் தயவு வேண்டும் என்றே விரும்பினார்கள். அவர்களுக்கு குடியிருக்க வீடு பிடித்துத் தருவது, தினமும் தன் வேனில் அவர்கள் வீடுகளுக்கு காய்கறிகள் முதல் ஆடு, கோழி கறிகள் வரை கிடைக்கச் செய்வது, தீபாவளி போன்ற நாட்களில் அவர்களுக்குப் பட்டுப்புடவைகள் அனுப்பிவைப்பது என அவருடைய பராமரிப்பு தொடரும்.

நடிகர்களுக்கும் தாங்கள் பிரபலமான பின்னரும் லேனாவின் தயவு வேண்டியே இருந்தது.

ஏதாவது அரசு அலுவலகங்களில் வேலை நடக்க வேண்டியது, போலீஸில் ஏதாவது பிரச்னை இருந்தால் தீர்வு வழி காண்பது போன்ற அனைத்து வேலைகளையும் லேனாவைப் பார்த்து சொல்லிவிட்டால் கனகச்சிதமாக முடித்துத் தந்துவிடுவார்.

இப்படி தமிழ் திரைப்பட உலகினருக்கு பல வகையில் தேவைப்படுகிற மனிதராக விளங்கிய லேனா நிறைய தமிழ்ப்படங்கள் தயாரித்தார்.

Ôகிருஷ்ண பக்திÕ, Ôவன சுந்தரிÕ போன்ற படங்களை பி.யு.சின்னப்பாவை வைத்து எடுத்தார். Ôமருமகள்Õ என்ற படத்தை என்.டி.ராமராவ், பத்மினியை வைத்து எடுத்தார். ÔகாவேரிÕ என்ற படத்தை சிவாஜியை வைத்து எடுத்தார். Ôமதுரை வீரன்Õ எம்.ஜி.ஆரை வைத்து எடுத்தார்.

மதுரை வீரனில் கிடைத்த மகத்தான வெற்றி கிருஷ்ணா பிக்ஸர்ஸ§க்கு பண மழையாக கொட்டியது.

உடனே அடுத்து எம்.ஜி.ஆரை வைத்து Ôராஜா தேசிங்குÕ எனற படத்தை தயாரிப்பதாக லேனா அறிவித்தார். மதுரை வீரனுக்கும், ராஜா தேசிங்குக்கும் கவிஞர் கண்ணதாசன் தான் திரைக்கதை, வசனம் எழுதினார்.

ராஜா தேசிங்கு வளர்ந்து கொண்டிருந்த போது லேனாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஏதோ பிரச்னை ஏற்பட்டது.

அவ்வளவுதான் எம்.ஜி.ஆர். படப்பிடிப்புக்கு வருவதாகச் சொல்லிவிட்டு வராமல் இருந்துவிடுவார். அவரை நம்பி போடப்பட்ட செட் மற்றும் செலவுகள் வீணாகிவிடும்.

ஒரு சமயம் ஒரு பெரிய அரங்கை அதிக செலவில் நிர்மாணித்த பிறகு எம்.ஜி.ஆர். கால்ஷீட் உடனே கிடைக்காது என்ற நிலையில், நிறைய செலவழித்துப் போட்டுவிட்ட அரங்கைப் பயன்படுத்துவதற்காக நடிகர் கே.பாலாஜியை வைத்து Ôமாங்கல்ய பாக்கியம்Õ என்ற படத்தை அவசரமாக தயாரித்தார். அந்தப்படம் சமூகப்படம் மாதிரியும் இருக்கும். புராண படம் மாதிரியும் இருக்கும்.

அதாவது போலீசும் படத்தில் வரும், பிள்ளையாரும் படத்தில் வருவார்.

படம் அவ்வளவாக ஓடவில்லை.

ராஜா தேசிங்கு, எம்.ஜி.ஆர் கோபத்தினால் இரண்டு மூன்று வருட தாமதத்திலேயே வெளிவந்தது. படமும் எதிர்பார்த்தபடி வெற்றிபெறவில்லை. காலதாமதம், படத்தின் வெற்றி இழப்பு சேர்ந்து லேனா செட்டியாரை பெரும் கடனில் மூழ்கடித்தது.

அதன் பிறகு ÔலேனாÕ அதிலிருந்து மீளவே இல்லை!

நமது வில்லன் நடிகர்களில் நெடுங்காலம் திரையுலகில் நீடித்தவர்களில் ஒருவர் டி.கே.ராமச்சந்திரன்.

இவர் ஏ.வி.எம்.மின் பழைய Ôநாம் இருவர்Õ படத்தில் அறிமுகமாகி பராசக்தி, திகம்பர சாமியார், பணம்... என தொடர்ந்து எஸ்.எஸ்.ஆர் அடித்த ÔமுதலாளிÕ படத்தில் மெயின் வில்லன் பாத்திரத்தில் பெரும் புகழ் சம்பாதித்தார்.

முதலாளி படத்தில் இவர் நடிப்பைப் பார்த்துவிட்டு, படக் கம்பெனிகள் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என இவருக்கு அட்வான்ஸ் தந்த பணமே ஆறு லட்ச ரூபாயாக வந்தது.

Ôமதுரை வீரன்Õ படத்தில் டி.எஸ்.பாலையாவுடன் இணைந்தும், Ôவஞ்சிக்கோட்டை வாலிபன்Õ படத்தில் பி.எஸ்.வீரப்பாவுடன் இணைந்தும் அட்டகாசமாக நடித்தார்.

ரஜினி பிற்காலம் நடித்த பைரவி படம்வரை நடிப்பைத் தொடர்ந்தார்.

ஆனால் இடையில் Ôபெரிய மனிதன்Õ என்ற படத்தை சொந்தமாக தயாரித்ததால், தன் இரண்டு பங்களாக்களையும் விற்று சம்பாத்தியத்தையும் இழந்து கடனில் மூழ்கினார்.

மறுபடி எழ முடியுமா என்ன?

நடிகை சாவித்திரி மாதிரி புகழ் உச்சியில் நீடித்து லட்சம் லட்சமாய் தொடர்ந்து சம்பாதித்த நடிகை யாருமில்லை.

சாவித்திருக்கு தமிழ்ப்பட உலகில் எவ்வளவு வரவேற்பு இருந்ததோ, அதே மாதிரி தெலுங்குப் பட உலகிலும் இணையில்லாத நடிகையாக திகழ்ந்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என முன்னணி கதாநாயகர்களுடன் தமிழில் நடித்தது போலவே தெலுங்கில், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் இருவருடனும் இவரே நடித்து வந்தார்.

நாகேஸ்வரராவ் இனி தனக்கு தமிழ்ப் படங்களில் அதிக வாய்ப்பிருக்காது என்ற நிலையில் சென்னையை காலி செய்துவிட்டு ஹைதராபாத் புறப்பட்டபோது, சென்னை அபிபுல்லா ரோட்டில் உள்ள தன் பிரமாண்டமான பங்களாவை சாவித்திரியிடம்தான் விறார்.

ஆரம்பகால படமான Ôதேவதாஸ்Õ படத்தில் நாகேஸ்வரராவ் நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்து அனைவர் மனதில் நீங்கா இடம்பிடித்த சாவித்திரி, Ôபாசமலர்Õ படத்தில் சிவாஜிக்கு ஈடாக நடித்து அனைவரையும் கண்கலங்க செய்தவர்.

அந்தக் காலகட்டத்தில் திரையுலகில் பிஸியாக இருந்த மற்ற நடிகைகளான பத்மினியும், எம்.என்.ராஜமும் சாவித்திரியோடு நெருங்கிப் பழகி வந்ததால் இந்த மூன்று நடிகைகளும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஒரே மாதிரி புடவை அணிந்து உடன்பிறந்த சகோதரிகள் மாதிரி சென்னையில் உலா வருவார்கள்.

காலிலே தங்கத்திலேயே சாவித்திரி கொலுசு அணிந்து திளைத்த காலம்.

சாவித்திரி தன் மூத்த பெண் விஜய சாமுண்டீஸ்வரியை வயிற்றில் சுமந்த நேரம் அது.

வீரபாண்டிய கட்டபொம்மன் படப்பிடிப்புக்காக அக்குழுவினர் ஜெய்ப்பூருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம், பகதூர் வெள்ளையத் தேவனாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் திடீரென அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அதாவது Ôசிவகங்கை சீமைÕயில் இன்னும் நல்ல வேடம் தருகிறேன் என கண்ணதாசன் அழைத்ததே காரணம்.

கட்டபொம்மன் படப்பிடிப்புக்கு எஸ்.எஸ்.ஆருக்குப் பதில் உடனே யாரை அழைத்துப் போவது என்ற திண்டாட்டத்தில் சிவாஜி உடனே சாவித்திரியைத்தான் போய் சந்தித்தார்.

Ôஅம்மா, உடனே மாப்பிள்ளை ஜெமினி கணேசனை என்னுடன் ஜெய்ப்பூருக்கு நீ அனுப்பிவைக்காவிட்டால் நாங்கள் செலவழித்ததெல்லாம் வீணாகிவிடும்Õ என்றார்.

ஜெமினி கணேசனோ, Ôசாவித்திரிக்கு திடீரென குழந்தை பிறக்கலாம். நான் பக்கத்தில் இல்லாவிட்டால் எப்படி?Õ என்றார்.

பின்னர் சாவித்திரிதான், Ôஎன்னை பற்றி பயப்படவேண்டாம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிவாஜி அண்ணாவுக்குக் கை கொடுக்காவிட்டால் எப்படி?Õ என கூரி ஜெமினி கணேசனை ஜெய்ப்பூர் படப்பிடிப்புக்கு அனுப்பிவைத்தார்.


ஜெய்ப்பூர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதுதான் Ôசாவித்திரிக்கு பெண் குழந்தை பிறந்ததுÕ என அங்கே தகவல் வந்தது. உடனே சிவாஜியும், ஜெமினியும் அடுத்த விமானத்தில் சென்னை வந்து குழந்தையைப் பார்த்துவிட்டு மறுப்டி ஜெய்ப்பூர் படப்பிடிப்புக்கு சென்றார்கள்.


சாவித்திரி புகழ், செல்வாக்கு, குழந்தை பாக்கியம் என எல்லா வகையிலும் நிறைவாக வாழ்ந்து கொண்டிருந்தபோதுதான் சொந்தப்படம் எடுக்கிற ஆசை வந்தது.

படங்கள் எடுக்கலானார். தெலுங்கில் நன்றாக ஓடிய ஒரு படத்தை ரீமேக் செய்ய உரிமை பெற்று Ôபிராப்தம்Õ என்ற அந்த படத்தில் நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் சிவாஜியை நடிக்க வைத்தார்.

பிராப்தம் படம்தான் Ôசாவித்திரியின் பிராப்தம் இனி அவ்வளவுதான்Õ என்கிற மாதிரி பெரும் தோல்வியிலும் தாங்க முடியாத நட்டத்திலும் விழச் செய்தது.

சாவித்திரியின் எல்லா சொத்துக்களும் கைவிட்டுப் போக கணவரான ஜெமினி கணேசனும் விலகிப்போனார்.

மிக சிரமப்பட்ட காலத்தில் சாவித்திரியின் மூத்த பெண் விஜய சாமூண்டீஸ்வரி திருமணம் நடக்க ஏற்பாடு நடந்தது. முன்பு விஜய சாமூண்டீஸ்வரி பிறந்ததும் ஜெய்ப்பூரில் இருந்து விமானத்தில் ஓடிவந்த ஜெமினி கணேசன், இப்போது அந்த குழந்தையின் திருமணத்தை கேள்விபட்டு விமானத்திலே ஆப்பிரிக்கா பயணம் போய்விட்டார்.

சாவித்திரியின் கடைசி நாட்களெல்லாம் மிக மிக சோகம் நிறைந்தவை.

சுமார் இரண்டு வருடம் தன்நினைவு இல்லாத கோமா ஸ்டேஜில் சாவித்திரி இருந்தார்.

ஒரு வகையில் இதுகூட கடவுள் கருணையோ என்னவோ!, சுய நினைவு இருந்தால்தானே அனுபவிக்கிற கஷ்டம் எல்லாம் ஒரேயடியாய் நிம்மதியை கொன்று கொண்டிருக்கும். இப்போதுதான் தூக்கம்மாதிரி நினைவே இல்லாமல் போய்விட்டதே!

<img src='http://www.vikatan.com/cinema/2005/apr/gv_p.jpg' border='0' alt='user posted image'>
இங்கே இன்னொரு பெரிய படத் தயாரிப்பாளராக விளங்கியவர் ஜீ.வி.

ஒரு காலகட்டத்தில் வருமானவரி இலாகாவுக்கு ஒரே செக்காக மூன்று கோடி ரூபாயை அளித்தவர் என பரபரப்பாக பேசப்பட்டவர்.

நாயகன், அக்னி, நட்சத்திரம், அஞ்சலி, தளபதி என மணிரத்னம் இயக்கத்திலேயே பிரமாண்டமான படங்களை வரிசையாகத் தயாரித்தவர்.

திரைப்படத் துறையில் பலருக்கு பைனான்ஸ் தந்து ஓகோவென இருந்தவர். பிரிவியூ தியேட்டர், டப்பிங் தியேட்டர் என பல சொந்தமாக வைத்திருந்தவர்.

படங்களை தொடர்ந்து எடுத்துக்கொண்டே வந்தார். கடைசியாக அவர் நிறுவனம் சார்பாக வெளிவந்தபடம் சொக்கத் தங்கம். கே.பாக்கியராஜ் கதை, வசனம், இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம்.

படம் வெளிவந்த சமயம் ஒருநாள் திடீரென அதிர்ச்சி தரும் செய்தியாக கந்து வட்டியால் மிகவும் பாதிக்கப்பட்ட ஜீ.வி.தன் அலுவலக அறையில் தூக்கில் தொங்கினார் என்பதே அது.

பளபளப்பான திரையுலகின் இன்னொரு பக்கம் பயங்கரமானது.




தொடரும்..
vikatan.com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
சினிமா மாயை - by vasisutha - 04-15-2005, 10:34 AM
சினிமா மாயை (பாகம்4) - by vasisutha - 04-15-2005, 10:56 AM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:14 AM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:15 AM
[No subject] - by vasisutha - 04-15-2005, 11:23 AM
[No subject] - by Eswar - 04-16-2005, 02:41 AM
[No subject] - by vasisutha - 04-16-2005, 03:00 AM
[No subject] - by kavithan - 04-16-2005, 05:24 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)