Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா மாயை
#3
<b>நடிகர்களாக இருந்து பெரிய தயாரிப்பாளர்களான மூன்று பேர்!</b>
<img src='http://www.vikatan.com/cinema/2005/mar/veerappa_31.jpg' border='0' alt='user posted image'>
சின்னராசு

தமிழ்திரை உலகில் அட்டகாசமான வில்லன் பி.எஸ்.வீரப்பா; இடி முழக்கமான சிரிப்புத்தான் அவருடைய தனி முத்திரை. அவருடைய ஆஜானுபாகுவான தோற்றம் வேறு எந்த வில்லன் நடிகருக்கும் இல்லாதது.

அவருடைய தோற்றம் போலவே அவருடைய உடலுறுதியின் பலமும் உண்மையானது. அது பற்றி ஒருமுறை நடிகர் ஆர்.எஸ்.மனோகரே கூறியிருக்கிறார்.

Ôஇரண்டு பேர் தூக்கவேண்டிய பெரிய நெல் மூட்டையை அநாயாசமாக முதுகில் போட்டுக்கொண்டு பெரிய மாடிப்படிகளில் சுலபமாக ஏறி இறங்கிக் காட்டிய தேகபலம் மிக்கவர் பி.எஸ்.வீரப்பாÕ என அவர் கூறினார்.

அவ்வளவு முரட்டுப் பலமும் தோற்றமும் இருந்ததினாலேயே அவர் வில்லன் வேடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டார். எனினும் உண்மையில் நேரில் பி.எஸ்.வீரப்பா மிக சாந்தமான மனிதர்.

அந்த வீரப்பா 55 வருடங்களுக்கு முன்னேயே மிகப் பெரிய வில்லனாக நடிக்க ஆரம்பித்தவர். குறிப்பாக எம்.ஜி.ஆரின் முந்திய படங்களில் எல்லாம் அவர்தான் வில்லனாக வருவார்.

கிட்டத்தட்ட 150 படங்களில் முக்கிய வில்லனாக நடித்த வீரப்பாவுக்கு சொந்தப் படங்களைத் தயாரிக்கிற ஆசை ஏற்பட்டது.

Ôபிள்ளைக்கனியமுதுÕ என்ற முதற்படத்தை எஸ்.எஸ்.ஆரை வைத்து எடுத்த வீரப்பா, அடுத்து Ôவீரக்கனல்Õ என்ற படத்தை ஜெமினி கணேசனை வைத்துத் தயாரித்தார். அதன்பின் Ôநீலமலைத் திருடன்Õ என்ற படத்தை அகில இந்திய நடிகரான ரஞ்சனை வைத்துத் தயாரித்தார்.

இப்படிப் படங்களை எடுத்துவந்த வீரப்பாவுக்கு, ÔஆலயமணிÕ என்று சிவாஜி கணேசனை வைத்து எடுத்த படம் மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது.

அடுத்து சிவாஜியை வைத்து Ôஆண்டவன் கட்டளைÕ என்றும், எம்.ஜி.ஆரை வைத்து Ôஆனந்த ஜோதிÕ என்றும் ஆலயமணி வெற்றியை தொடர்ந்து ÔஆÕ என்று ஆரம்பிக்கும் பெயர்களில் படங்களை எடுத்தாலும் ஆலயமணி வெற்றிக்கு ஈடாக எந்த படமும் அமையவில்லை.

இந்நிலையில் பம்பாய் பட தயாரிப்பாளர் ஒருவர் வீரப்பாவை தேடிவந்து, ÔஆலயமணிÕ படத்தை அப்படியே இந்தியில் எடுத்துக்கொள்ள உரிமை தந்தால் ஐந்து லட்ச ரூபாய் தருகிறேன்Õ என கேட்டார்.

இந்த காலத்தில் ஐந்து கோடி தருகிறேன் எனச் சொல்வதற்கு ஈடானது அந்த காலகட்டத்தில் ஐந்து லட்ச ரூபாய் எனக் குறிப்பிட்டது.

படத்தைத் தயாரிக்க அனுமதி தரவே Ôஐந்து லட்சமா?Õ என வீரப்பா திகைத்தார். அவரை சுற்றி இருந்தவர்கள் வீரப்பாவிடம் தனியாக, Ôஅண்ணே... வெறும் லட்டர்தாளில் அனுமதி கொடுக்கவே ஐந்து லட்சம் தருகிறேன் என்று இந்திப்பட முதலாளி சொல்கிறாரே இந்தக் கதை இந்தியில் எத்தனை கோடிகளை சம்பாதித்து தரும் என்பதை கணக்கிடாமலா ஐந்து லட்சம் தர சம்மதிப்பார்? எனவே அவசரப்பட்டு அனுமதி கொடுத்துவிடாதீர்கள்Õ என்றார்கள்.

வீரப்பாவும் தன்னை சேர்ந்தவர்கள் பேச்சைக்கேட்டு, அந்த இந்திப்பட தயாரிப்பாளரை அனுப்பிவிட்டார்.

மறுபடி சில மாதங்கள் கழித்து அதே இந்திப்பட தயாரிப்பாளர் வீரப்பாவை தேடி வந்தார். Ôசார் ஆலயமணி படத்துக்கு எனக்கு தனி உரிமை தரவேண்டாம். நான் பணம் போட்டு படத்தை இந்தியில் எடுக்கிறேன். கிடைக்கிற லாபத்தில் நாம் இருவருக்கும் சரிபாதிÕ என்று கூறினார்.

இந்த வாய்ப்பையாவது வீரப்பா பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் உடன் இருந்தவர்கள் மறுபடியும் தவறான யோசனையே வழங்கினார்கள்.

Ôஅண்ணே.. இந்த இந்திப்பட முதலாளி மறுபடி மறுபடி வந்து கெஞ்சுகிறதை பார்க்கும்போது, இந்த அருமையான கதையை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்கிறதுக்குப் பதில் நாமே இந்தியில் எடுக்க வேண்டும்Õ என்றார்கள்.

அப்படியே வீரப்பாவும் இந்தியில் தானே சொந்தமாக ஆலயமணியை தயாரிக்கப் போவதாகக் கூறிவிட்டு செயலிலும் இறங்கிவிட்டார்.

Ôஆத்மிÕ என்ற பெயரில் திலீப் குமாரை வைத்து ஆலயமணி படம் இந்தியில் தயாரிக்கப்பட்டது.

ஆனால் என்ன பரிதாபம், ஆத்மி படம் வெளிவந்து தோல்வி அடையவே வீரப்பா அதுவரை சம்பாதித்ததை இழந்தது மட்டுமல்லாமல் ஏராளமான கடன்களையும் வாங்கி சரியான சிக்கலில் மாட்டினார்.

தன்னை வைத்து படம் எடுத்து வீரப்பா நட்டத்தில் மாட்டிக்கொண்டாரே என பரிதாபப்பட்ட திலீப்குமார், தனது சொந்தத் தயாரிப்பில் மிகப் பெரிய வெற்றிப்படமாக ஓடிய Ôகங்கா ஜமுனாÕ படத்தை தமிழில் வீரப்பா எடுத்துக் கொள்ள பணம் எதுவும் வாங்காமல் உரிமை தந்தார்.

அந்தப் படம்தான் Ôஇரு துருவம்Õ என்ற பெயரில் சிவாஜியை வைத்துத் தயாரிக்கப்பட்டு அந்த படமும் தோல்வியடைந்தது.

சோதனைக்கு மேல் சோதனையாக வந்து குலைந்துபோன வீரப்பா, Ôசாட்சிÕ, Ôவெற்றிÕ போன்ற சில படங்களைத் தயாரித்துப் பார்த்தும் ஏற்கனவே உள்ள பெரிய கடன் சுமையில் இருந்து மீள முடியாமல் பெரும் துன்பத்திற்கு ஆளானார்.

படங்களில் மற்றவர்களை நடுங்க வைக்கிற வில்லனாக நடித்தவர், இப்போது கடன்காரர்கள் தேடி வருகிறார்கள் என்றால், உடம்பே வெடவெடவென ஆட நேருக்கு நேர் பதில் சொல்லக்கூடத் துணிச்சல் இல்லாம் நடுங்கும் நிலைக்கு ஆளானார்.

இன்னொரு பிரபல திரைப்பட தயாரிப்பாளராக விளங்கிய சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவரும் ஆரம்பத்தில் ஒரு நடிகனாக வாழ்க்கையைத் துவங்கியவர்தான்.

முதன்முதலில் இவர் மிகுந்த சிரமங்களுடன் Ôதாய்க்குப்பின் தாரம்Õ திரைப்படத்தை எம்.ஜி.ஆரை வைத்து தயாரிக்கலானார். படம் பாதிக்குமேல் வளர்ந்த நிலையில் நிதிநிலை மேலும் சிக்கலாகியது. இதற்கு மேலும் கடனுக்கு மேல் கடன் வாங்கிப் படத்தை தயாரித்து, ஒருவேளை படம் சரியாகப் போகாவிட்டால் மீளாத கடனில் மூழ்க நேருமே என எண்ணினார் தேவர்.

எனவே வாஹினி ஸ்டூடியோ அதிபர் நாகிரெட்டியை சந்தித்து, இதுவரை நான் எடுத்தப் படத்தை வாங்கிக்கொண்டு, இந்தளவுவரை ஆகியிருக்கிற செலவுதொகையை மட்டும் தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

நாகிரெட்டி இதுவரை வளர்ந்திருந்த படத்தைப் போட்டுப் பார்த்தவர், Ôபடம் நன்றாகத்தான் வந்திருக்கிறது. பாக்கிப் படத்தையும் பூர்த்தி செய்ய தயங்க வேண்டாம் படம் வெற்றிபெறும்Õ எனக் கூறினாஅர்.

அவர் தந்த நம்பிக்கையில் தேவர் படத்தை எப்படியோ முடித்து வெளியிட்டார். படம் பெரிய வெற்றியை பெற்றது.

அதன் பின் குறைந்த பட்ஜெட்டில் வெவ்வேறு கதாநாயகர்களை வைத்து ஐந்தாறு படங்களை தயாரித்தார். அந்த காலகட்டங்களில் நடிகர்களை விட மிருகங்களை அதிகமாக நம்பி படங்களைத் தயாரிக்கலானார். அவைகளெல்லாம் போட்ட முதல் தப்பியது என்ற நிலையிலேயே ஓடின.

அப்படியரு படம்தான் Ôதெய்வச்செயல்Õ என்ற பெயரில் யானைகளை முக்கிய பாத்திரங்களாக்கி மேஜர் சுந்தராஜனை வைத்து தயார் செய்து படம். இந்தப் படம் வெற்றி பெறாவிட்டாலும் இந்த யானைகள் கதையை இன்னும் சுவையாக எடுக்க வேண்டுமே என்ற எண்ணம் தேவருக்கு இருந்துகொண்டே இருந்தது.

இந்நிலையில் மறுபடி தேவர் படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்புக்கொள்ளாவே, Ôதாய்ச் சொல்லைத் தட்டாதேÕ படத்தை தயாரித்து பெரிய வெற்றி கண்டார்.

பின்னர் அதன் தொடர்ச்சியாக, தாயைக் காத்த தனயன், தர்மம் தலைகாக்கும்... இப்படி ÔதாÕ, ÔதாÕ என்ற முதல் எழுத்துக்களிலேயே பல படங்களைத் தயாரித்தார்.

தேவரின் படத் தயாரிப்பு நிலையம் வளர்ந்துவிட்ட நிலையில் Ôதேவர் பிலிம்ஸ்Õ என்ற முத்திரையில் எம்.ஜி.ஆர். நடிக்கிற படங்களையும், Ôதண்டபாணி பிலிம்ஸ்Õ என்ற பெயரில் மற்ற நடிகர்கள் நடிக்கிற படங்களையும் தேவர் தயாரிக்கலானார்.

இந்த கால வளர்ச்சியில் நாளாக நாளாக தேவருக்கு ஒரு படத்தின் வெற்றிக்கு கதையும், கதை நிகழ்ச்சிகளும், அதன் கோர்வையும் மிக முக்கியம் எனப் புரிய ஆரம்பித்தது.

அதன்பித் தேவர், திரைப்பட கதாசிரியர்கள் குழு ஒன்றையே எப்போதும் தன்னுடன் வைத்துக் கொள்ளா ஆரம்பித்தார். அந்த குழுவில், மகேந்திரன், தூயவன், கலைஞானம் போன்றவர்கள் எல்லாம் இருந்தனர். அவர்கள் கூடிகூடி பல கதைகளை உருவாக்கி தேவரிடம் சொல்லவேண்டும் என்ற வழக்கத்தை உண்டாக்கினார்.

அந்த காலகட்டத்தில்தான் முன்பு எடுத்து தோல்வியடைந்த Ôதெய்வச் செயல்Õ என்ற யானைகளின் கதையை, குடும்பப் பாங்கான சமபல செறிவுடன் ஒரு அருமையான கதையை உருவாக்கி, அதைத்தான் இந்தியில் Ôஹாத்தி மேரா ஸாத்திÕ என ராஜேஸ்கன்னாவை வைத்து தயாரித்தார். அந்தப் படம் வெளியானபோது இந்திப்பட உலகையே பிரமிப்பில் ஆழ்த்துகிற மாதிரி மிக பெரிய வெற்றியைப் பெற்றது.

அந்த வெற்றியை பார்த்த தேவர், மறுபடியும் அதைத் தமிழில் எடுக்கவேண்டுமென விரும்பி Ôதெய்வச்செயல்Õ படத்தில் எடுத்த சில காட்சிகளை தவிர்த்து தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து Ôநல்லநேரம்Õ என்ற பெயரில் எடுத்து வெற்றி கண்டார்.

இப்படி தமிழ்ப்படங்கள், இந்திப் படங்கள் என சாதனை புரிந்து வந்த தேவருக்கு ஒரு எதிர்பாராத சோதனை உடல் ரீதியான பாதிப்பை தந்ததாக சொன்னார்கள்.

ஒருநாள் எதிர்பாராமல் தேவர் மறைந்தார்.

அவருக்குபின் அவர் புதல்வரும், மருமகனும் தேவர் பிலிம்ஸ், தண்டபாணி பிலிம்ஸ் சார்பில் சில படங்களை தயாரித்த நிலையில் பொருளாதார பிரச்னை, கடன் என்று திடீரென அந்தப் பெரிய நிறுவனமே சுவடு தெரியாமல் மறைந்துவிட்டது.

தமிழ் திரையுலகில் குறிப்பிட்ட காலம்வரை மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாகக் கொடிகட்டிப் பறந்த நிறுவனம் நடிகர் கே.பாலாஜியின் சுஜாதா பிலிம்ஸ்.

திரைப்படங்களில் சின்ன வேடங்களை ஏற்று படிப்படியாக கதாநாயகனாக உயர்ந்த பாலாஜி முதன்முதலாக Ôஅண்ணாவின் ஆசைÕ என்ற பெயரில் ஜெமினி கணேசனை வைத்து ஒரு படத்தை தயாரித்தார். அந்த படம் வெற்றி பெறவில்லை.

அடுத்து சிவாஜியை வைத்து Ôதங்கைÕ என்ற படத்தை தயாரித்தார். அது வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பின் சிவாஜியை வைத்து, ஏராளமானப் படங்களை தயாரித்தார். Ôஎன் தம்பிÕ Ôஎங்கிருந்தோ வந்தான்Õ, Ôதீபம்Õ, Ôதியாகம்Õ , Ôநல்லதொரு குடும்பம்Õ என எண்ணற்ற படங்கள்.

தேவர் பிலிம்ஸ் என்றால் எம்.ஜி.ஆர். தான் என்கிற மாதிரி சுஜாதா பிலிம்ஸ் என்றால் சிவாஜி என ஆனது.

சிவாஜி வயோதிகராக நடிக்க ஆரம்பித்த பின்னால்கூட Ôமருமகள்Õ ÔநீதிபதிÕ, Ôபந்தம்Õ என படங்களை எடுத்துத் தள்ளினார்.

பின்னர் கமல், ரஜினியை வைத்தும் படங்களை தயாரித்தார்.

பாலாஜி, தான் தயாரிக்கின்ற படங்களுக்கு புதிதாகக் கதையை எழுதச் சொல்லவேண்டும் என நினைப்பதில்லை. வேற்று மொழிப் படங்களில் வெற்றியடைந்த படத்தின் கதையை ரீமேக்காக படமாக்கவே விரும்புவார். அந்த யுக்தியே அவருக்கு வெற்றிமேல் வெற்றியாக தொடர்ந்து கொண்டிருந்தது.

பாலாஜியைப் பார்த்து பலரும் பிற மொழிப் படங்களை ரீமேக் செய்ய முனைந்து வெற்றிபெற முடியாமல் போனார்கள்.

பாலாஜிக்கு மட்டும் ரீமேக் படங்கள் பெரிய வெற்றியை தருவது எப்படி என அவரிடமே ஒரு சமயம் கேட்கப்பட்டது.

அந்த ரகசியத்தைப் பாலாஜி பகிரங்கப்படுத்தினார்.


Ôபிறமொழிப்படம் ஒன்றை ரீமேக் செய்வதானால் அந்தப்படம் எடுக்கப்பட்ட மொழி பேசுகிற மாநிலத்தில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும். அதே சமயம் நமது மாநிலத்தில் அந்த படம் பற்றி நமது மக்கள் அவ்வளவாக அறிந்திருக்கக்கூடாது. அதாவது ÔசோலேÕ போன்ற படம் இந்தி மொழி பேசுகிற மாநிலங்களில் மட்டுமல்லாது இந்தியா முழுக்கவே நன்றாக ஓடியவை. யாரும் அந்தப் படத்தை நமது மொழியில் ரீமேக் செய்தால் தோல்வியையே சந்திக்க நேரும்!Õ


என பாலாஜி அருமையான ஒரு விளக்கம் தந்தார்.

ஆனால், அந்த விளக்கத்தை அவரே மறந்துபோல நடந்து கொண்டதால் வெற்றிகரமான அவர் நிறுவனம் மறுபடி எழ முடியாதபடி சோதனைக்கு ஆளானது.

Ôகுர்பானிÕ இந்திப்படம் ÔசோலேÕ மாதிரி இந்தியா முழுக்க வெற்றிகரமாக ஓடிய படம். அந்தப் படத்தை போய் ÔவிடுதலைÕ என்ற பெயரில் ரஜினியை வைத்து பாலாஜி மிக பிரமாண்டமாக தமிழில் தயாரித்தார்.

அதன் பலன் படத்தின் நட்டத்தால் மீளமுடியாத கடனுக்கு ஆட்பட நேர்ந்தது.




தொடரும்...
vikatan.com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
சினிமா மாயை - by vasisutha - 04-15-2005, 10:34 AM
சினிமா மாயை (பாகம்3) - by vasisutha - 04-15-2005, 10:49 AM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:14 AM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:15 AM
[No subject] - by vasisutha - 04-15-2005, 11:23 AM
[No subject] - by Eswar - 04-16-2005, 02:41 AM
[No subject] - by vasisutha - 04-16-2005, 03:00 AM
[No subject] - by kavithan - 04-16-2005, 05:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)