Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா மாயை
#2
<b>கண்ணதாசனின் வியப்பும் திகைப்பும்! </b>
<img src='http://www.vikatan.com/cinema/2005/mar/kannadasan_p23.jpg' border='0' alt='user posted image'>
சின்னராசு


கலைவாணரையும், பாகவதரையும் போல் பெரிய புகழோடு இருந்த இன்னொரு நடிகர் பி.யு.சின்னப்பா.

இவர் திரையுலகில் மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்துவந்த காலத்தில் வெகுகாலம் திருமணம் செய்யாமலே இருந்துவந்தார். அவருடன் அவரது சகோதரியும், சகோதரியின் கணவரும் மட்டுமே உடன் இருந்து வந்தார்கள்.

இந்நிலையில் பி.யு.சின்னப்பா ஏராளமாக சம்பாதித்தப் பணத்தைக் கொண்டு தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் சொத்துக்களாக வாங்கிக் குவித்தார். ஒரு காலகட்டத்தில் புதுக்கோட்டை தடை விதித்தததாகக் கூறுவார்கள். காரணம் அவர் சொத்துக்கள் வாங்கிக் குவித்த வேகத்தைப் பார்த்து, புதுக்கோட்டையையே ஒருநாள் வாங்கிவிடுவாரோ எனப் பயந்தார்களாம்.

பி.யு.சின்னப்பா அதன்பிறகு சென்னையில் சொத்துக்கள் வாங்கிக் குவித்தார். சென்னையில் மொத்தம் 64 வீடுகளை வாங்கிக் போட்டிருந்தார் பி.யு.சின்னப்பா. திருவல்லிக்கேணியில் மட்டும் 13 வீடுகள் அவருக்கு இருந்தன.

புதுக்கோட்டை மன்னரும் பி.யு.சின்னப்பாவும் நண்பர்களாக இருந்துவந்தனர். ஒரு சமயம் சென்னையில் சந்தித்துக்கொண்ட இருவரும் விருந்தில் கலந்து கொண்டார்கள். தாங்கள் இருவரும் சேர்ந்து சென்னையில் ஒரு பிரமாண்டமான திரையரங்கை கட்டவேண்டும் என திட்டமிட்டிருந்த அவர்கள் அது குறித்து அந்த விருந்தில் பேச ஆரம்பித்து, நேரம் ஆக ஆக நீ பெரியவனா, நான் பெரியவனா என்கிற சண்டையாவிட்டதாம்.

பி.யு.சின்னப்பா, சொன்னாராம், நீங்க புதுக்கோட்டையில் மன்னர் என்றால், நான் இந்த சென்னையில் Ôமன்னன்Õ என்பதாக! ஆக ஒருநாள் சண்டையில் அவர்கள் திரையரங்கு கட்டுகிற திட்டமும் முடிந்துபோனது.

ஆக வீடு போன்ற சொத்துக்களை வாங்கிக் வாங்கிக் குவித்துவந்த சின்னப்பா, பிருத்திவிராஜனாக ஒரு படத்தில் நடத்தபோது அதில் நடித்த சகுந்தலா என்ற நடிகையை காதலித்து மணந்து கொண்டார்.

இதுவரை நான் வாங்கிக் குவித்துவந்த சொத்துக்களை தன் தங்கைக்கும், மனைவிக்கும் பிரித்து எவ்வளவு எவ்வளவு எழுத வேண்டும் என்பதில் தாமதம் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஒருநாள் பி.யு.சின்னப்பா காலமானார்.

பி.யு.சின்னப்பா காலமானதும் அவர் மனைவி சகுந்தலா தன் கணவரின் தங்கையையும் கணவரையும் சென்னை வீட்டிலிருந்து வெளியேற்றினார்.

அவர்களுக்குப் புதுக்கோட்டையில் உள்ள பெரும் சொத்துக்களிலும் சட்டப்படி உரிமை இல்லாது போகவே. அவ்விருவரும் பரிதாபமாக தங்கள் கடைசி காலம்வரை புதுக்கோடாயில் உள்ள பி.யு.சின்னப்பா சமாதியிலேயே வாழ்ந்தார்கள்.

அதே சமயம் பி.யு.சின்னப்பாவின் மனைவி சகுந்தலாவும் தன் கணவர் விட்டுச் சென்ற சொத்துக்களை எல்லாம் குறுகிய காலத்தில் இழந்து கடைசியில் தன் ஒரே மகன் ராஜபாகதூருடன் குடிசைப் பக்கப்போய் வாழ நேரிட்டதாக கூறுவார்கள்.

பி.யு.சின்னப்பா ஒரு மன்னன் மாதிரி சொத்துக்களை வாங்கிக் குவித்தும் அவையெல்லாம் அவர் மறைந்த சிறிது காலத்திலேயே அந்தக் குடும்பத்தின் கைவிட்டுப் போய்விட்டன. சொந்தப்படம் எடுத்து பி.யு.சின்னப்பா சொத்துக்களை அழிக்காவிட்டாலும், புதிய சொந்தத்தைத்தேடி சொத்துக்களை இழந்தார் எனக்கூறலாம்.

பாகவதர், சின்னப்பா கதாநாயகர்களாக கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் டி.ஆர்.மகாலிங்கமும் பாடக்கூடிய கதாநாயகனாகப் புகழோடு விளங்கினார். டி.ஆர்.மகாலிங்கம் மிகச் சிறிய வயதிலேயே திரையுலகத்திற்கு வந்துவிட்டார்.

அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட Ôபக்த பிரகலாதாÕ படத்தில் பிரகலாதனாக டி.ஆர்.மகாலிங்கம் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். இந்திரனாக சிறுவேடத்தில் வருவார். அதேபோல் Ôநந்தகுமார்Õ என்ற படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பால கண்ணனாக நடித்தார்.

பிற்காலம், ஸ்ரீவள்ளி, நாம் இருவர், ஞானசௌந்தரி போன்ற பெரிய வெற்றிப் படங்களில் எல்லாம் அவர் நடித்தார்.

பாகவதருக்கும் சின்னப்பாவுக்கும் இல்லாத ஒரு வாய்ப்பாக டி.ஆர்.மகாலிங்கத்திற்கு, பக்தி படம், ராஜா ராணி படம் தவிர சமூகப்படங்களிலும் நடிக்கிற வாய்ப்பு இருந்தது.

இதன் காரணமாக ஏராளமான படங்களில் டி.ஆர்.மகாலிங்கம் நடித்து அந்த காலத்திலெயே எண்பது லட்ச ரூபாய் சம்பாதித்தார். இந்த கால மதிப்பு எண்பது கோடி ரூபாயை தாண்டிய மதிப்புடைய பணம் அது.

அவ்வளவு செல்வாக்கில் இருந்த டி.ஆர்.மகாலிங்கம் சொந்தப் படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார்.

திரையுலகில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக விளங்கிய பி.ஆர்.பந்தலுவுக்கும் சாரங்கபாணிக்கும் தான் வாழ்ந்த மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை பக்கமுள்ள தன் பங்களாவின் அருகேயே அவர்களுக்கும் வீடுகள் அமைய செய்தார்.

சொந்தமாகப் படங்கள் தயாரிக்கத் துவங்கிய டி.ஆர்.மகாலிங்கம் தன்பட நிறுவனத்திற்கு தனது புதல்வன் பெயரையே Ôசுகுமார் பிக்சர்ஸ்Õ என வைத்தார்.

;மோகன சுந்தரம்Õ ÔÔவிளையாட்டுப் பொம்மைÕ என்ற இரு சமூகப்படங்கள் அவர் சம்பாதித்த செல்வத்தை கரைத்ததோடு கடனாளியாகவும் ஆக்கியது. Ôதெருப்பாடகன்Õ என்ற படத்தை எடுக்கத் துவங்கி தொடர முடியாமல் நிறுத்தினார்.

இனி சென்னையில் வாழ்வது முடியாது என்ற நிலையில் ஏற்கனவே சொந்த ஊரான சோழவந்தானில் கட்டியிருந்த வீட்டில்போய் குடியேறினார்.

முதன்முதலில் நாடகங்களில் நடித்து தனது கலைப்பயணத்தை துவக்கிய டி.ஆர்.மகாலிங்கம், தான் பெரிய திரைப்பட நட்சத்திரமாக விளங்கியவர் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு மறுபடி ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார்.

கவிஞர் கண்ணதாசன் சொந்தமாக Ôஊமையன் கோட்டைÕ என்ற படத்தை எம்.ஜி.ஆர். வைத்து எடுக்கத் துவங்கினார். ஏதோ காரணத்தால் அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க எம்.ஜி.ஆர். விரும்பவில்லை.

இது கண்ணதாசனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ÔÔதிரை உலகில் முன்னணி நடிகரை வைத்துதான்படம் எடுத்து ஓட்ட வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. நான் திரை உலகில் மார்க்கெட் இழந்த ஒரு நடிகரை வைத்தே ஒரு வெற்றிப்படத்தை தரமுடியும்ÕÕ எனக் கூறினார்.

இந்நிலையில் தன் படத்திற்கு பைனான்ஸ் தரப்போகிறவரை கண்ணதாசன் சந்தித்தார். அவர் கண்ணதாசனிடம் ÔÔநீங்கள் எடுக்கப்போகும் படத்திற்கு பழைய நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தை கதாநாயகனாக போட்டு படம் எடுப்பீர்களானால் நான் பைனான்ஸ் தருகிறேன்Õ என்றார்.

இதைக் கேட்ட கண்ணதாசனுக்கு வியப்பாக இருந்தது. Ôஎப்போதுமே பைனான்ஸியர்கள் தங்கள் உதவுகிற படம் வெற்றிபெற மார்க்கெட்டில் மவுசோடு இருக்கிற நடிகர்&நடிகைகளை சிபாரிசு செய்வார்கள். இவர் மார்க்கெட் இல்லாத நடிகரை சிபாரிசு செய்கிறாரேÕ என எண்ணினார்.

மேலும் ஒரு மார்க்கெட் இல்லாத நடிகரை வைத்து வெற்றிப் படத்தை எடுத்துக்காட்டுவதாக தானும் சபதம் செய்திருப்பதால் அதற்கு ஏற்ற நடிகர் டி.ஆர்.மகாலிங்கம்தான் என முடிவு செய்து அவரையே புக் செய்து Ôமாலையிட்ட மங்கைÕ என்ற படத்தை கண்ணதாசன் தயாரித்தார்.

இந்தப் படத்தின் மூலம்தான் கண்ணதாசன் நடிகை மனோரமாவையும் திரையுலகில் அறிமுகப்படுத்தினார்.

டி.ஆர்.மகாலிங்கத்தை வைத்துப் படத்தை எடுத்துக் கொண்டிருந்தபோதுதான் பைனான்ஸியர் ஏன் மகாலிங்கத்தை சிபாரிசு செய்தார் என்பது கவிஞருக்குத் தெரியவந்தது.

அதாவது முன்பு டி.ஆர்.மகாலிங்கம் சொந்தப்படம் எடுத்தக் காலத்தில் இதே பைனான்ஸியரிடம் வாங்கிய கடனில் ஒரு நாற்பதாயிரம் ரூபாய் பாக்கியாக அப்படியே நின்றுவிட்டதாம். இனி அந்தப் பணத்தை மகாலிங்கத்திடம் இருந்து வசூல் பண்ணவே முடியாது என்ற தீர்மானத்திற்கு வந்த நிலையில்தான் கண்ணதாசன் பணத்திற்கு வந்து சேர்ந்தார்.

இப்போது கண்ணதாசனை Ôமகாலிங்கத்தையே ஒப்பந்தம் செய்யுங்கள்Õ என பைனான்ஸியர் யோசனை வழங்கியதன் மூலம் மகாலிங்கத்திற்கு தரவேண்டிய சம்பளத்தை பழைய கடன் தொகையில் கழித்துக் கொள்ளலாம் அல்லவா. இந்த விபரத்தை கண்ணதாசன் அறியவந்தபோது பைனான்ஸியரின் திறமையைப் புரிந்து திகைத்துப் போனார்.

Ôமாலையிட்ட மங்கைÕ படம் வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து டி.ஆர்.மகாலிங்கத்திற்கு மேலும் சில படங்களில் நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது என்றாலும், அவர் ஏற்கனவே பட்டிருந்த கடன்களால் மறுபடி கடைசிவரை அவரால் எழ முடியவே இல்லை.

கவிஞர் கண்ணதாசனும் மற்றவர்களைப் பார்த்துப் படிக்காமல் அவரும் சொந்தப் படம் தயாரிக்க ஆரம்பித்து அதன் காரணமாக பன இழப்புகளுக்கும் நிம்மதி இழப்புகளுக்கும் ஆளானார்.

Ôமாலையிட்ட மங்கைÕ படத்தின் வெற்றியை தொடர்ந்து கண்ணதாசன் சொந்தப்படங்களை தொடர்ந்து தயாரிக்க முன்வந்தார். அந்தக் காலகட்டத்தில் திரைப்பட பாடலாசிரியர்களில் கண்ணதாசன் முன்னிலை வகித்து எல்லாப் படங்களுக்கும் பாடல் எழுதிக் கொண்டிருந்தார்.

அதனால் நேரடியாக சொந்தப் படத் தயாரிப்பை கவனிக்க முடியாமல் அரசியல் மூலம் அறிமுகமான கோவை செழியனை சென்னை அழைத்து வந்து தனது படக்கம்பெனி பொறுப்புகளைத் தந்தார்.

வானம்பாடி, கவலை இல்லாத மனிதன், கறுப்புப் பணம் போன்ற படங்களை கண்ணதாசன் தயாரித்தார்.

Ôகவலை இல்லாத மனிதன்Õ படத்தில் சந்திரபாபுவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி பல துன்பங்களையும் சந்தித்தார். Ôகறுப்புப் பணம்Õ படத்தில் கண்ணதாசனே ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

இந்தப் படங்கள் எல்லாம் பெரிய லாபத்தை தராவிட்டாலும் எப்படியோ தப்பித்தன என்ற நிலையில் ஓடின.

ஆனால் Ôசிவகங்கைச் சீமைÕ படம்தான் வரலாற்று படம் என்பதால் நிறைய கடன் வாங்கிக் கண்ணதாசன் செலவு செய்தார்.

அந்தப்படம் தோல்வி அடைந்ததால் பெரும் கடனில் கண்ணதாசன் சிக்கிக் கொண்டார்.

அதன்பிறகு அவர் பாடல் எழுதி எவ்வளவு சம்பாதித்தாலும் ஏற்கனவே உள்ள கடனுக்கு வட்டி செலுத்தவே தன் சம்பாத்யம் காணமல் கண்ணதாசன் தவித்தார்.

ஆக நிறைய சம்பாதித்துக் கொண்டே தொடர்ந்து கடனும் வாங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனைப் பற்றி ஒரு விழாவில் வலம்புரிஜான் கூறும்போது, Ôகவிஞர் இந்திய ஜனாதிபதி மாதிரி சம்பாதிக்கிறார். இந்திய அரசு மாதிரி கடன் வாங்குகிறார்ÕÕ என குறிப்பிட்டார்.

ஆக கண்ணதாசனும் சொந்தப்பட தயாரிப்பால் தன் புகழின் பெருமையை அனுபவிக்க முடியாமல் தவிப்போடுதான் வாழ்ந்தார்.




தொடரும்
vikatan.com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
சினிமா மாயை - by vasisutha - 04-15-2005, 10:34 AM
சினிமா மாயை (பாகம்2) - by vasisutha - 04-15-2005, 10:44 AM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:14 AM
[No subject] - by tamilini - 04-15-2005, 11:15 AM
[No subject] - by vasisutha - 04-15-2005, 11:23 AM
[No subject] - by Eswar - 04-16-2005, 02:41 AM
[No subject] - by vasisutha - 04-16-2005, 03:00 AM
[No subject] - by kavithan - 04-16-2005, 05:24 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)