04-15-2005, 10:34 AM
<b>கட்டுரையின் நோக்கம் பற்றி...
<img src='http://www.vikatan.com/cinema/2005/mar/chinnarasu_p.jpg' border='0' alt='user posted image'>
சின்னராசு
திரை உலகத்தால் கவரப்படாத மனிதரே இல்லை என்கிற அளவுக்கு ஈர்ப்பு சக்தி கொண்டு விளங்குகிறது சினிமா... இப்போது சினிமாவுக்கு மவுசில்லை! சின்னத்திரைக்கே மவுசு என்று சிலர் சொல்லிக் கொண்டாலும் சினிமாவை வைத்துத்தான் சின்னத்திரை காலத்தை ஒட்டுகிறதே தவிர, சினிமா தொடர்புடைய எதையும் ஒளிபரப்பாமல் அதனால் செயல்பட முடியாது.
மனிதன் மேலெழுந்தவாரியாக வாழ்க்கையின் மகிழ்ச்சிகளாகக் கருதுகிற ஆட்டம், பாட்டம், பெண்கள், பொழுது போக்கும் இன்பங்கள் எனக் கருதுபவை எல்லாம் திரைப்படத் துறையின் தொழிலோடு விரவிக் கலந்துள்ளவையாக இருக்கின்றன.
மற்ற துறைகளில் ஒருவன் புகழையும், செல்வத்தையும், தேட வெகுகாலம் ஆகும் என்கிற நிலையில் திரைத்துறையால் ஒருவன் நடிகனாக அறிமுகமானதுமே நாடு முழுவதும் அறியப்பட்டவனாகப் புகழ் அடைந்து விடுகிறான். மிகக் குறுகிய காலத்திலேயே கார், பங்களா என பளபளப்பான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாகி விடுகிறான்.
எனவே இந்த புகழும், செல்வமும், பளபளப்பும் மட்டுமே வெளியே இருந்து திரையுலகைப் பார்ப்பவர்களுக்குத் தெரிய வருவதால் சுலபமாக அந்தத் துறை மீது மோகம் கொண்டு விடுகிறார்கள், அதே சமயம் இந்தத் திரையுலகில் ஓகோவென வாழ்ந்த அனைவருமே ஒரு நாள் தான் பெற்ற புகழ், செல்வம் என அனைத்தையும் இழந்து விட்டுப் போகவே நேர்ந்திருக்கிறார்கள்.
இதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை என்றாலும் இதுதான் உண்மை. இந்த உண்மையைப் பகிரங்கப்படுத்துவதே Ôசினிமா மாயைÕ என்ற இந்த கட்டுரை தொடரின் நோக்கமாகும்.
கட்டுரையாளர் பற்றி...
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் பிறந்த சின்னராசு நீண்ட கால பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து வருபவர்.
காவியங்கள், கவிதைகள், கவிதை நடை கதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், நாடகங்கள், அரசியல், சமூகம், கலை பற்றிய கட்டுரைகள் முதலியன இவர் எழுத்துப் பணியில் அடங்கும். தற்சமயம் திருக்குறளுக்கு குறுங்கதைகள் எழுதும் பணியை மேற்கொண்டுள்ளார். ஜூனியர் விகடனில் அரசியல் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
பொதுவாக இவருடைய அரசியல், சமூகம், கலைகள் பற்றிய கட்டுரைகளில் கூற வந்த சேதிகளுக்கு தொடர்புடைய அரிய சம்பவங்களையும், மாமனிதர் வாழ்வு நிகழ்ச்சிகளையும் அணி அணியாகச் கோர்த்து கட்டுரையை சுவையுடையதாகவும், பயன் தருபவையாகவும் வழங்குவதில் திறன் வாய்ந்தவர்.</b>
<b>பாகவதருக்கு நேர்ந்த பரிதாபம் </b>
<img src='http://www.vikatan.com/cinema/2005/mar/pagavadar_21.jpg' border='0' alt='user posted image'>
[b]சின்னராசு
சினிமா உலகமும், நாம் வாழும் உலகத்தைப் போல் ஒரு மாயைதான்! எத்தனைதான் வாழ்ந்தாலும் முடிவில் ஒன்றுமே இல்லையென உலக வாழ்க்கையைப் பற்றி கூறுவதுபோல், சினிமா உலகத்தில் எத்தனைப் புகழ்பெற்றாலும், எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் ஒருநாள் அவை எதுவுமே நிலைக்கவில்லை என்ற முடிவையே காண நேரிடுகிறது.
நமது தமிழ் சினிமா உலகையே எடுத்துக்கொண்டால், இன்றிலிருந்து ஒரு அறுபது ஆண்டுகால நிகழ்ச்சிகளை பார்ப்போமேயானால், ஓகோவென வாழ்ந்த சினிமா உலக நட்சத்திரங்களும், கலைஞர்களும் பெரும்பாலும் சம்பாதித்தப் புகழையும், பொருளையும் ஒருநாள் இழந்துவிட்டேப் போயிருக்கிறார்கள்.
பெரும்பாலானவர்கள் சொந்தப் படங்களை தயாரித்ததனாலேயே அந்த சோக முடிவுக்கு ஆளாகியிருக்கிறார்கள். சொந்தப்படம் எடுக்காமல் சம்பாதித்ததை சிக்கனமாக வைத்துக்கொள்ள முயன்றவர்களும் தேடிய செல்வத்தை எப்படியோ இழந்துதான் போயிருக்கிறார்கள். சினிமா உலக மொத்த வரலாற்றில் எண்ணிச் சிலர் மட்டுமே தப்பித்திருப்பார்கள் போலும்.
தமிழ் சினிமா உலகத்தில் அறுபது ஆண்டுகால வரலாற்றில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர், சகலகலா வல்லவன் பி.யு.சின்னப்பா, ஆகிய மூவரும் புகழின் உச்சியில் வாழ்ந்த நடிகர்கள். பேரும், புகழும், செல்வமும் ஈட்டிய இந்த மூன்று மகத்தான கலைஞர்களின் முடிவு என்ன?
கலைவாணரும், பாகவதரும் தாங்கள் சம்பாதித்ததை எல்லாம் இழந்ததற்கு காரணம் அவர்கள் மீது அபாண்டமான கொலைப்பழி விழுந்து சுமார் இரண்டு ஆண்டு காலம் சிறைபட நேர்ந்ததே ஆகுமென சிலர் கூறுவார்கள்.
ஆனால் அது காரணமல்ல:
கலைவாணருக்கும் பாகவதருக்கும் சிறைப்பட்ட காலத்தில் திரைப்பட உலகத்தினர் பலர் பற்றி கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. தங்களை வைத்து பெரிய லாபம் அடைந்தவர்களே தங்களுக்கு சோதனை வந்த காலத்தில் நழுவிக்கொள்ள ஒதுங்கிக் கொள்ள முயன்றதைக் கண்டார்கள்.
இந்த அனுபவத்தினால் கலைவாணர் தான் விடுதலை ஆனதும் தன்னைத் தேடிவந்த ஏராளமான பட வாய்ப்புகளை புறக்கணித்தார். தங்களிடம் மிக அனுதாபமாய் இருந்த சிலர் படங்களில் மட்டும் ஒப்புக் கொண்டார்.
நமது சினிமா உலகத்தில் புகழோடு இருக்கிற காலத்தில் வெளியார் படங்களிலும் நடித்துக்கொண்டு இடையே சொந்தபடமும் தயாரித்துக்கொண்டால், தன் சொந்தப்படத்தை ஓரளவு லாபத்துடன் விற்பது சுலபமாக இருக்கும். அப்படியல்லாமல் சொந்தப்படத் தயாரிப்புக்காக வெளிப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது படத்தை எடுக்க மட்டும் செலவழித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?
சொந்தப்படம் வெளிவந்து வெற்றியடையாமல் போனால் அதனால் ஏற்பட்ட பண இழப்பும், கடன் பிரச்னைகளும் அடுத்து எழுந்திருக்கவே விடாது. அன்றிலிருந்து இன்றுவரை திரைப்படக் கலைஞர்கள் அத்தனை பேரின் நிலையும் இதுதான்.
கலைவாணர் வழக்கில் சிக்குவதற்கு முன் திரையுலகில் மிகுந்த செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் சொந்தப்படங்களை தயாரித்ததுண்டு. அப்போதெல்லாம் அதன் லாபநட்டம் அவரை சிறுதும் பாதித்ததில்லை. ஆனால் விடுதலை ஆகி வெளிவந்த பின்னால், பெரும்பாலான வெளியார் படங்களை தவிர்த்து சொந்தப் படத் தயாரிப்பிலேயே ஈடுபட்டதால் ஏற்பட்ட பெரும் கடன் பிரச்னை அவரை எழவே விடவில்லை.
கலைவாணர் விரைவில் விடுதலை ஆவார் என்ற நம்பிக்கையில் கலைவாணர் நிறுவனம் சார்பில் அவர் துணைவியார் டி.ஏ.மதுரம் தங்கள் சொந்தப் படமாக Ôபைத்தியக்காரன்Õ என்ற படத்தைத் துவக்கினார்.
பட வேலைகள் நடக்க ஆரம்பித்தன. கலைவாணர் விடுதலை தாமதமாகும் என்ற சூழ்நிலையில் அவர் இல்லாமலேயே படம் நிறைவு அடைகிற மாதிரி கதை அமைத்தார்கள்.
<img src='http://www.vikatan.com/cinema/2005/mar/ns_krishnan_21.jpg' border='0' alt='user posted image'>
வழக்கமாக கலைவாணரின் ஜோடியாக மட்டுமே நடித்துவந்த டி.ஏ.மதுரம் இந்த படத்தில் ஒரு புதுமைப் பெண்ணாக, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் காதலியாக நடித்தார். எம்.ஜி.ஆர். அந்தக் கதைப்படி ஒரு திருட்டு வழக்கில் பழி சுமத்தப்பட்டு சிறைக்குப் போய்விட, டி.ஏ.மதுரத்தை ஒரு பணக்கார முதியவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். அந்த முதியவரோடு டி.ஏ.மதுரம் வாழாத நிலையில் ஒருநாள் முதியவர் மரணமடைந்துவிடுவார். இந்நிலையில் எம்.ஜி.ஆர். தண்டனை முடிந்து விடுதலை ஆகிவிட, அவரையே டி.ஏ.மதுரம் மறுமணம் செய்து கொள்வார்.
இந்தப்படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கலைவாணர் விடுதலை ஆனார். எனவே கலைவாணரை வைத்து சில காட்சிகள் எடுத்து படத்தில் சேர்க்க விரும்பினார்கள்.
எனவே கலைவாணருக்கு ஜோடியாக இன்னொரு பாத்திரத்தை உருவாக்கி அதிலும், டி.ஏ.மதுரத்தை நடிக்க வைத்தார்கள். ஆக Ôபைத்தியக்காரன்Õ படத்தில் டி.ஏ. மதுரத்திற்கு இரட்டை வேடம்.
இந்த படத்தில் கலைவாணருக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு காட்சி இருந்ததென்றால், அது கலைவாணர் சிறைக்குப் போய்வந்த அனுபவத்தை டி.ஏ.மதுரத்திடம் ஒரு பாடலைப் பாடிக் காட்டுகிற காட்சியேயாகும்.
Ôஜெயிலுக்குப் போய்வந்த சிரேஷ்டர் மக்களை சீர்திருத்துவாங்கோÕ என்ற பாடலே அது. அந்த பாடலில் சில வரிகள் கலைவாணரின் தன்னிலை விளக்கமாகும்
Ôபய கெட்டப் பேர்வழிங்க, அடிதடி
பண்ணிக்கிட்டுப் போனவங்க, திருடியும்
பொண்ணைத் தொட்டு வம்பு பண்ணியும்
போனவங்க, சோம்பேறிங்க
புத்திகெட்டு சக்திகெட்டு
போலீசாரால் அடிபட்டு பிடிபட்டுப்
போனவங்க உண்டுங்க
அதுவெல்லாம் தப்புங்க
ஆனா நான் அப்படி இல்லீங்க
பொறவு எப்படின்னு கேப்பீங்க
பொறாமை சிலர் கொண்டதாலே
பொய்யே உண்மையாகிப்
போச்சுதுங்க.. உருட்டும்
பொறட்டும் வரவர உலகத்தில
ஓரேயடியா பெருகிப் போச்சுதுங்க
ஒற்றுமை இல்லீங்க நமக்குள்ளே
ஒற்றுமை இல்லீங்கÕ
என்று கலைவாணரின் அந்தப் பாடல் தொடரும்.
ஆக Ôபைத்தியக்காரன்Õ படம் திரையிடப்பட்டு எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதனை அடுத்து கலைவாணர் Ôநல்லதம்பிÕ என்ற படத்தைத் துவக்கினார். இந்தப் படத்துக்கு அறிஞர் அண்ணா முதன்முதலாக திரைக்கதை, வசனம் எழுதினார்.
படம் உயர்ந்த நோக்கங்களோடு தயாரிக்கப்பட்டிருந்தது. படத்தைப் பார்த்துவிட்டு கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி சிறப்பாக விமர்சனம் எழுதினார். Ôநல்ல சிந்தனைகளை வளர்க்க வேண்டும்; கருத்து நிறைந்த ஒரு படத்தைக் காணவேண்டும் என்றால், Ôநல்லதம்பிÕ படத்தைப் போய் பாருங்கள்...Õ என்ற பொருள்பட அவர் விமர்சனம் அமைந்தது.
இருப்பினும் நல்லதம்பியும் வசூலில் பெரிய வெற்றி பெறவில்லை.
அடுத்து கலைவாணர் Ôமணமகள்Õ என்ற படத்தைத் துவக்கினார். இந்தப் படத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதினார். நாட்டிய பேரொளி பத்மினி முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார். கிருஷ்ணன் பஞ்சு படத்தை இயக்க ஆரம்பித்து இடையில் விலகிவிட கலைவாணரே பாக்கிப் படத்தை இயக்கி முடித்தார்.
Ôமணமகள்Õ படம் வெற்றிப்படமாக அமைந்தது.
இதனை அடுத்து கலைவாணர், Ôபணம்Õ என்ற படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். பராசக்தி படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றதும் அதைத் தொடர்ந்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டதால், இந்த படத்திற்கும் கருணாநிதியே வசனம் எழுதலானார். பரபரப்பான புகழில் வரவேற்கப்பட்ட சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடிக்கலானார்.
பராசக்தி தாக்கம் ரசிகர்களுக்கு இருந்ததினால், அதே மாதிரி படத்தை எதிர்பார்த்ததினால், நன்றாக எடுக்கப்பட்டும் Ôபணம்Õ திரைப்படம் பெரிய தோல்வியை அடைந்தது. பராசக்தியில் சிவாஜி, வழக்கு மன்றத்தில் நீண்ட வசனம் பேசி ரசிகர்களை ஆரவாரம் செய்யவைத்தார். பணம் படத்திலும் கடைசியில் ஒரு நீதிமன்ற காட்சி. ஆனால் அதில் சிவாஜி கூண்டில் பேசாமடந்தையாக நின்று கொண்டிருப்பார். இதுவெல்லாம் படத் தோல்விக்கு ஒரு காரணம்.
Ôபணம்Õ படத்தின் தோல்விதான் கலைவாணரை மீளா முடியாத கடனில் தள்ளியது.
இந்நிலையில் அடுத்து Ôபடித்த முட்டாள்Õ என்று ஒரு படத்தைத் தயாரிக்க துவக்கவிழாவெல்லாம் நடத்தினார். கவிஞர் கண்ணதாசன்தான் வசனம் எழுதுவதாக இருந்தது. ஆனால் கலைவாணரின் பணப்பிரச்னை அந்த படத்தை தயாரிக்க விடாமலே செய்தது.
பணம் படத்தின் நட்டத்தினால் ஏற்பட்ட பெரும் கடன் வட்டிக்கு மேல் வட்டியாக வளர்ந்தது. அதன்பின் வெளியார் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தும் ஏற்கனவே உள்ள கடனின் வட்டியை கட்டுவதே பெரும்பாடாகி கலைவாணர் பிரச்னையில் சிக்கி தவிக்கலானார்.
எனவே கலைவாணர் சிரமத்திற்கு சிறைவாசம் காரணமல்ல; சொந்தப்பட தயாரிப்புகளே காரணம்.
கலைவாரணரை அடுத்து பாகவதரும் சிறை மீண்டதும் தேடிவந்த பட வாய்ப்புகளை ஏற்கவில்லை.
பாகவதரும், கலைவாணரும் பொறாமை கொண்டவர்களின் சதியில் மாட்டி சிறையில் புகுந்தார்கள் என்ற கருத்தில் உறுதியாக இருந்ததால், அறிஞர் அண்ணா அவர்கள் இருவரையும் அவ்வப்போது சிறையில் சந்தித்து வந்தார்.
பாகவதர் விடுதலையானதும் அவருக்கு ஒரு திரைப்படம் உடனடியாக வேண்டும் என்பதற்காகவே, Ôசொர்க்கவாசல்Õ திரைக்கதை வசனத்தை எழுதி, அந்தப் படத்தைத் தயாரிக்க ஜுபிடர் சோமுவையும் தயார்படுத்தி வைத்திருந்தார் அறிஞர் அண்ணார்.
பாகவதரை சந்தித்து அண்ணா இந்தப் படம் பற்றி பேசியபோது, இன்னொரு காரணத்தாலும் படத்தை ஒப்புக்கொள்ள தயங்கினார் பாகவதர்.
அவர் அண்ணாவிடம், Ôஉங்களுக்கு என்மீது பெரிய பற்றுதல் உண்டு என்பதினால் எனக்கும் உங்களிடம் பெரிய மரியாதை உண்டு. ஆனால் நீங்கள் கடவுள் மறுப்பு இயக்கத்தை சார்ந்து இருக்கிறீர்கள். நானோ பக்தி படங்களில் மட்டுமே நடித்து வந்திருப்பவன். நான் தங்கள் வசனத்தில் நடிக்கும்போது ஏதாவது பிரச்னை ஏற்படலாம். மன்னித்துவிடுங்கள்Õ எனச் சொல்லி அந்தப் பட வாய்ப்பை ஏற்கவில்லை.
பாகவதர் சொந்தப் படம் தயாரிக்கவே முனைந்தார். Ôராஜமுக்திÕ என்ற படத்தை எடுக்க முடிவு செய்து தன்னுடன் எம்.ஜி.ஆர்., பி.எஸ்.வீரப்பா, பி.பானுமதி, வி.என்.ஜானகி போன்றோரையும் நடிக்க ஒப்பந்தம் செய்தார். வசனம் எழுதியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன்.
தமிழ்நாட்டுத் தயாரிப்பாளர்கள் வேண்டாம் என்ற முடிவோடு தமிழ்நாட்டிலும் படத்தை தயாரிக்க விருப்பமின்றி பம்பாயில் போய் அந்தப் படத்தை எடுக்க முடிவு செய்தார்.
அது 1948 ஆம் வருடம். பம்பாயில் ஒரு பங்களாவைப் பிடித்து படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அனைவரையும் பாகவதர் தங்க வைத்து, பம்பாய் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பித்தார்.
அப்போது ஒருநாள் எதிர்பாராமல் ஒஎரு பெரிய அதிர்ச்சியான செய்தி வெளியாகி பம்பாய் நகரமே குலுங்கியது.
ஆம்; அண்ணல் காந்தியடிகள் டில்லியில் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றபோது சுடப்பட்டார் என்ற செய்தியே அது.
அவ்வளவுதான் பம்பாயே வெட்டுக் குத்து என பெரிய ரணகளமாயிற்று.
பாகவதர், எம்.ஜி.ஆர். என ராஜமுக்தி படக் குழுவினர் அனைவரும் தங்கள் தங்கியிருந்த பங்களாவை விட்டுப் பத்து நாட்கள் வரை வெளியே வரமுடியாமல் சிறைப்பட்டனர்.
அந்த பெரிய அமளியில் இருந்து மீண்ட நேரத்தில் வசனம் எழுதிவந்த புதுமைப்பித்தன் பெரும் நோய்க்கு இலக்காகி படத்தின் பிற்பகுதி வசனங்களை எழுதித்தர முடியாமல் போனார். பிறகு இன்னொருவர் பாக்கி காட்சிகளை எழுதி முடித்தார்.
எப்படியோ, பல சிரமங்களை தாங்கி முடிவடைந்த Ôராஜமுக்திÕ திரைப்படம் வெளிவந்தபோது எதிர்பாராத நிலையில் பெரிய தோல்வியை அடைந்தது.
இந்தப் படத்தின் மூலம் பாகவதருக்கு ஏற்பட்ட ஏராளமான கடன் அவர் அதிலிருந்து மீளமுடியாமல் செய்தது.
ஆக கலைவாணருக்கும் பாகவதருக்கும் சிறைவாசத்தால் ஏற்பட்ட சிக்கலைவிட, சொந்தப்பட தயாரிப்பு மூலம் ஏற்பட்ட மீளா பிரச்னைதான் இறுதிவரை தொடர்ந்தது.
-- தொடரும்
நன்றி vikatan.com

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>