Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்திரமுகி
#41
சந்திரமுகி - திரைவிமர்சனம்(சுட சுட)

அதிக எதிர்பார்ப்பு எப்போதுமே அதிக ஏமாற்றம் தான். எப்படியோ அடித்து பிடித்து இன்று இரவு காட்சியில் சந்திரமுகி பார்த்தாயிற்று. ரஜினி ரசிகர்கள் மத்தியில் நானும் ஒருவன் என்ற நிலைமை. ஏத்திய சுருதியுடன் திரையரங்குக்குள் மணியை பார்ப்பது திரையை பார்ப்பதுமாக ரசிகர்களின் கூக்குரலினூடே வாகாக இருக்கையும் பிடித்து அமர்ந்தாயிற்று. இடைவேளை கிடையாது என்பதால் பாத்ரூமுக்கு போய் டவுன்லோட் பண்ண வேண்டியதை பண்ணி விட்டு திரும்ப இருக்கையில் அமர்ந்தேன். சென்றிருந்த 20 நண்பர்களும் ஒரே வரிசையில் உட்கார்ந்துக் கொண்டு, பாட்டுக்கு ஆட்டம் போடவும் ரெடி.

படம் ஆரம்பித்து எதற்கு எடுத்தாலும் விசில். பெரிய லெவல் ரோடு காண்ட்ராக்டராக பிரபுவை காண்பிக்க தொழில் பொறாமைக் கொண்ட வில்லன் அடியாட்களை அனுப்ப, பிரபு வருவதற்குள் திரையில் ஒரு ஷூவின் அடிப்பாகம் மட்டும் திரையில் குளோசப்பில் காண்பிக்கப்படுகிறது. அப்புறம் பக்கவாட்டில் கவிழ்த்து போட்ட Y எழுத்து மாதிரி காலை அந்தரத்தில் தூக்கி நின்று புருஸ்லீ, ஜாக்கிசான் ஸ்டைலில் ரஜினி காந்த் போஸ் கொடுக்கிறார். விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. சில பேர் திரைக்கு ஓடிச் சென்று ரஜினியின் காலை தொட்டு கும்பிட்டு விட்டு வருகிறார்கள். ரஜினி தொட்டாலே போதும் அடியாட்கள் பறக்கிறார்கள். தலைகீழாக சுற்றுகிறார். மேல் கீழாக குதிக்கிறார். என்னனவோ செய்கிறார். வில்லன்கள் அடித்து ரஜினியால் துவம்சம் பண்ணப்படுகிறார். அய்யகோ... இருந்தாலும் ரஜினி ரசிகர்களுக்கு அருமையான பைட்டு சிக்குவென்ஸ்.

அப்புறம் தான் புரிகிறது ரஜினி அமெரிக்காவிலிருந்து இறங்கிய உலகப் புகழ்பெற்ற மனோதத்துவ நிபுணர்.பெயர் சரவணன். பிரபுவுக்கு உற்ற நண்பன். "யாமிருக்க பயமேன்,இந்த சரவணன் இருக்க பயமேன்" இது தாங்க ஒரு சில இடத்துல ரஜினி பயன்படுத்துற பஞ்ச் (பஞ்சு) டயலாக். பிரபு ஜோதிகாவை காதலித்து கல்யாணம் புரிந்தவர். அம்மா கே.ஆர்.விஜயா. பிரபு சொந்த ஊரில் உள்ள வேட்டையப்ப ராஜா அரண்மணை வாங்க போகிறேன் என்று சொல்ல கே.ஆர்.விஜயா பதறுகிறார். பிறகு அந்த ஊரில் உள்ள சொந்தங்களாக அகிலாண்டேஸ்வரி, நாஸர் பத்தியெல்லாம் சொல்கிறார்.அவர்களிடமிருந்து பல வருடம் முன்பு பிரிந்து வந்தவர்கள் பிரபு பேமிலி. அகிலாண்டேஸ்வரியைப் பற்றி ஒரு பெரிய பில்ட்-அப் கொடுக்கிறார்கள். நானும் வழக்கம் போல ரஜினி பட வில்லி என்று நினைத்தேன்.கடைசியில் அந்த கேரக்டரும் தொஸ்ஸ்ஸ்ஸ்....

ரஜினி முதலில் அந்த பங்களாவைப் பற்றி விசாரிக்க அந்த ஊருக்கு வருகிறார். வடிவேலுவும் நாசருக்கு ஒரு மாப்பிள்ளை முறையாக வேண்டும் அந்த படத்தில். ரஜினி வடிவேலுவுடன் சேர்ந்து சில காமெடிகளை செய்கிறார். பங்காளவைப் பற்றி சொன்னதும் எல்லாரும் நடுங்கிறார்கள். நடுங்கிக் கொண்டே இருக்கிறார்கள். பில்ட்-அப் கொடுத்தக் கொண்டே இருக்கிறார்கள். ரஜினியும் வடிவேலுவும் காமெடி என்ற பெயரில் அவஸ்தை பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள். போதும்டா சாமி இந்த கொடுமை. இடையிடையே பாட்டு வேற.

பங்களா பற்றிய பில்ட்-அப் என்னவென்றால் வேட்டையப்ப ராஜா சந்திரமுகி என்ற நாட்டியகாரியின் மேல் ஆசைக் கொண்டு அவளை தூக்கிக் கொண்டு வர, அவள் ஏற்கனவே ஒருவனை காதலித்து வருகிறாள். ராஜா பொறாமைக் கொண்டு காதலனை கொன்று விட்டு சந்திரமுகியை எரித்து விடுகிறார். அப்புறம் சந்திரமுகி அந்த பங்களாவில் ஆவியாக 150 வருடமாக வேட்டையப்ப ராஜாவை கொல்ல அலைகிறார். இது தான் பில்ட்-அப்.

ரஜினி அந்த பங்காளவை ஆராய்ந்து பேய் எல்லாம் ஒன்னும் கிடையாது என பிரபுவுக்கு ரைட் கொடுக்க, பிரபு பேமிலி உறவினர்களுடன் சர்வ ஜாக்கிரதையாக அந்த பங்களாவுக்கு குடியேறுகிறது. அப்புறம் ரஜினி வெளியூர் போகிறேன் என்று காணாமல் போகிறார். இதற்கிடையில் ஜோதிகா ஆர்வம் மிகக் கொண்டு பங்களாவில் ஒரு பகுதியில் பூட்டப்பட்ட சந்திரமுகி, வேட்டையப்ப ராஜாவின் அறையை திறக்கிறார். அதிலிருந்து வீட்டில் அமனுஷ்யமாக பல கெட்டவைகள் பிரபுவுக்கும் சுத்தி இருப்பவர்களுக்கும் நடக்கின்றன.

ரஜினி வந்து சேருகிறார். துப்பறிகிறார். கண்டுபிடிக்கிறார். மனோதத்துவ ரீதியாக இது ஸ்பிலிட் பெர்சனாலிட்டியின்(Split personality) அட்டகாசம் என்கிறார். நிகழந்த அட்டூழியங்களுக்கு ஜோதிகாவை நோக்கி கையை காட்டுகிறார். அவரை எப்படி குணப்படுத்துகிறார் என்பதே சந்திரமுகி.

டிவியில் வந்துக் கொண்டிருந்த 'விடாது கருப்பு'(இந்திரா சௌந்தராஜன் எழுதியது என நினைக்கிறேன்???) அப்படியே சந்திரமுகி ஆகியிருக்கிறது. படத்தில் ரஜினிக்கு சுருதி ரொம்ப குறைவு. படு இளைமையாகத் தெரிகிறார். இருந்தும் என்ன பயன்? பாபாவுக்கு ஒரு படி மேல் என்று சொல்லலாம் இந்த படத்தை. ரசிகர்களுக்காக முதலிலேயே வழக்கான ரஜினியை காண்பித்து விட்டு, படம் பூராவும் அவரை மிஸ் பண்ணி விடுகிறார்கள். உற்சாகத்துடன் வந்த ரசிகர்கள் படம் கொஞ்ச நேரம் ஓட ஆரம்பித்ததும் ஆங்காங்கே கொட்டாவி விடுவதும், பாடலுக்கு பாத்ரூமைத் தேடி போவதுமாக இருக்கிறார்கள்.

இடைவேளை வரை இந்த படத்தை பேய் படமாக காட்ட வேண்டுமா? இல்லை சஸ்பெண்ஸ் படமாக காட்ட வேண்டுமா? என்ற குழப்பம் பி.வாசுவுக்கு. சும்மா அந்த பங்களாவை சுத்தி சுத்தி கேமிரா சுழட்டி அடிக்கிறது. கூட சேர்ந்து நமக்கும் தலை சுத்துகிறது.

சில ரசிகர்களிடம் அப்பிராயம் கேட்ட போது இடைவேளை வரை தான் ரஜினி படமாக தெரிந்தது என்றார்கள்.எனக்கு என்னமோ இடைவேளைக்கு பிறகு தான் படம் நன்றாக போனதாக நினைப்பு. காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனத்தை ஆங்காங்கே ரஜினி அள்ளி விடுகிறார்.

படத்தில் என்னதான் நிறைவு இருக்கிறது? நிறைவும் நிறைய இருக்கிறது.

பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை(தமிழ் பட தரத்தை அளவுக்கோல்களாக வைத்தால்). 'கொஞ்ச கொஞ்ச நேரம்' பாடல் துருக்கி இஸ்தான்புல்-ல் எடுத்ததாகக் கேள்விப் பட்டேன். தமிழ் படத்தில் இது வரை வராத லொக்கேஷன். ரஜினியும் நயந்தாராவும் அருமையாக தெரிகிறார்கள். அடுத்த பாடல் "அண்ணணோட பாட்டு" இதுவும் வெகு அருமையாக எடுத்துருக்கிறார்கள். "கோழி பறபற" பாடலும் அருமை.

அப்புறம் ராஜகமாளிகை. அருமையான செட்டிங்ஸ். அற்புதமாகத் தெரிகிறது அந்த மாளிகை. இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.கலை யார் என்று கவனிக்கவில்லை.

அப்புறம் படத்தின் கிளைமாக்ஸ். மிக விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ்.

அப்புறம் ஜோதிகா. கலக்கி அள்ளியிருக்கிறார். கிளைமாக்ஸில் ஜோதிகாவின் நடிப்புக்கு முன் ரஜினியால் ஈடு கொடுக்க முடியாமல் திணறியிருந்தார். சொத்தை சொள்ளையாக படத்தின் ஆரம்பித்தில் வந்துக் கொண்டிருந்த ஜோதிகா ஸ்பிலிட் பெர்சனாலிட்டியாக மாறியதும் சந்திரமுகியாக ஜொலித்திருக்கிறார். அவருடைய மேக்-அப் வெகு அருமை. இன்னும் என் கண்ணிலேயே நிற்கிறது ஜோதிகாவின் அந்த க்ளைமேக்ஸ் நடிப்பு. சபாஷ் நல்ல திறமையிருக்கு ஜோதிகா.

நயந்தாரா? ரஜினிக்கு நாயகி மட்டுமே. வேஸ்ட் செய்திருக்கிறார்கள். நாசருக்கும் கோமாளி வேடம். வேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

படம் முழுக்க தோய்வு.எப்படியோ க்ளைமேக்ஸை மட்டும் சரி கட்டியிருக்கிறார் பி.வாசு.

ரஜினி ரசிகர்களுக்கு இதுவும் சரியான படம் அல்ல என நினைக்கிறேன். அவர்கள் தான் சொல்ல வேண்டும் அவர்களின் பார்வையை. ரஜினி நடித்திருக்கிறார். அவ்வளவே....

அப்ப படம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... டமார் (க்ளைமாக்ஸ்)

குறிப்பு: படம் பார்த்த சூட்டில் எழுதியது, தூக்கம் கண்ணை சுழட்டுவதால் மூளையின் மேல்டாப்பில் வந்ததை போட்டுத் தாக்கியிருக்கிறேன். மற்ற விசயங்கள் மற்றொரு பதிவில் மெதுவாக. மும்பை எக்ஸ்பிரஸை கொஞ்சம் ஆறப்போட்டு சனிக்கிழமை பார்க்கலாமென இருக்கிறேன்

Thanx: அல்வாசிட்டி அண்ணாச்சி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
சந்திரமுகி - by Mathan - 03-06-2005, 10:39 AM
[No subject] - by Mathan - 03-07-2005, 06:43 AM
[No subject] - by Mathan - 03-07-2005, 11:54 AM
[No subject] - by Mathan - 03-08-2005, 03:42 AM
[No subject] - by kavithan - 03-08-2005, 11:04 PM
[No subject] - by tamilini - 03-10-2005, 05:05 PM
[No subject] - by Mathan - 03-10-2005, 05:42 PM
[No subject] - by Nilavan - 03-10-2005, 06:20 PM
[No subject] - by Mathan - 03-10-2005, 06:36 PM
[No subject] - by Mathan - 03-14-2005, 01:51 PM
[No subject] - by KULAKADDAN - 03-14-2005, 03:23 PM
[No subject] - by tamilini - 03-14-2005, 03:32 PM
[No subject] - by KULAKADDAN - 03-14-2005, 03:43 PM
[No subject] - by tamilini - 03-14-2005, 03:46 PM
[No subject] - by வியாசன் - 03-14-2005, 08:46 PM
[No subject] - by kirubans - 03-14-2005, 09:35 PM
[No subject] - by Mathan - 03-16-2005, 11:27 AM
[No subject] - by Mathan - 03-19-2005, 04:12 PM
[No subject] - by KULAKADDAN - 04-09-2005, 06:36 PM
[No subject] - by hari - 04-10-2005, 08:24 AM
[No subject] - by tamilini - 04-10-2005, 11:29 AM
[No subject] - by Danklas - 04-10-2005, 11:30 AM
[No subject] - by Eswar - 04-11-2005, 03:47 PM
[No subject] - by shanmuhi - 04-11-2005, 04:36 PM
[No subject] - by tamilini - 04-11-2005, 04:38 PM
[No subject] - by sayanthan - 04-11-2005, 05:56 PM
[No subject] - by Danklas - 04-11-2005, 08:27 PM
[No subject] - by shanmuhi - 04-11-2005, 08:50 PM
[No subject] - by Danklas - 04-11-2005, 09:10 PM
[No subject] - by shanmuhi - 04-11-2005, 09:15 PM
[No subject] - by kuruvikal - 04-11-2005, 09:23 PM
[No subject] - by Niththila - 04-12-2005, 01:19 AM
[No subject] - by kavithan - 04-12-2005, 06:29 AM
[No subject] - by tamilini - 04-12-2005, 01:04 PM
[No subject] - by stalin - 04-12-2005, 02:23 PM
[No subject] - by நேசன் - 04-12-2005, 05:52 PM
[No subject] - by kuruvikal - 04-12-2005, 06:10 PM
[No subject] - by tamilini - 04-12-2005, 06:12 PM
[No subject] - by Mathan - 04-12-2005, 09:47 PM
[No subject] - by kavithan - 04-12-2005, 10:18 PM
[No subject] - by Mathan - 04-14-2005, 08:26 AM
[No subject] - by Danklas - 04-14-2005, 10:15 AM
[No subject] - by stalin - 04-14-2005, 01:39 PM
[No subject] - by Mathan - 04-14-2005, 01:43 PM
[No subject] - by vasisutha - 04-14-2005, 02:56 PM
[No subject] - by tamilini - 04-14-2005, 03:09 PM
[No subject] - by vasisutha - 04-14-2005, 03:14 PM
[No subject] - by tamilini - 04-14-2005, 03:15 PM
[No subject] - by kuruvikal - 04-14-2005, 04:04 PM
[No subject] - by KULAKADDAN - 04-14-2005, 05:11 PM
[No subject] - by Mathan - 04-15-2005, 12:23 AM
[No subject] - by kavithan - 04-15-2005, 02:30 AM
[No subject] - by stalin - 04-19-2005, 12:09 PM
[No subject] - by KULAKADDAN - 04-19-2005, 12:21 PM
[No subject] - by tamilini - 04-19-2005, 12:25 PM
[No subject] - by vasisutha - 04-19-2005, 12:36 PM
[No subject] - by shiyam - 04-19-2005, 01:00 PM
[No subject] - by kuruvikal - 04-19-2005, 01:11 PM
[No subject] - by tamilini - 04-19-2005, 01:16 PM
[No subject] - by shiyam - 04-19-2005, 01:16 PM
[No subject] - by vasisutha - 04-19-2005, 01:17 PM
[No subject] - by shiyam - 04-19-2005, 01:19 PM
[No subject] - by kuruvikal - 04-19-2005, 01:20 PM
[No subject] - by tamilini - 04-19-2005, 01:21 PM
[No subject] - by kuruvikal - 04-19-2005, 01:24 PM
[No subject] - by shiyam - 04-19-2005, 01:24 PM
[No subject] - by tamilini - 04-19-2005, 01:27 PM
[No subject] - by KULAKADDAN - 04-19-2005, 01:28 PM
[No subject] - by tamilini - 04-19-2005, 01:29 PM
[No subject] - by Mathan - 04-19-2005, 01:29 PM
[No subject] - by KULAKADDAN - 04-19-2005, 01:31 PM
[No subject] - by vasisutha - 04-19-2005, 01:40 PM
[No subject] - by shiyam - 04-19-2005, 01:45 PM
[No subject] - by vasisutha - 04-19-2005, 01:51 PM
[No subject] - by tamilini - 04-19-2005, 01:59 PM
[No subject] - by Mathan - 04-19-2005, 02:18 PM
[No subject] - by Mathan - 04-19-2005, 02:19 PM
[No subject] - by shiyam - 04-19-2005, 04:14 PM
[No subject] - by tamilini - 04-19-2005, 04:28 PM
[No subject] - by vasisutha - 04-19-2005, 04:31 PM
[No subject] - by tamilini - 04-19-2005, 05:35 PM
[No subject] - by Mathan - 04-19-2005, 05:36 PM
[No subject] - by tamilini - 04-19-2005, 05:38 PM
[No subject] - by vasisutha - 04-19-2005, 05:49 PM
[No subject] - by hari - 04-19-2005, 06:16 PM
[No subject] - by tamilini - 04-19-2005, 08:21 PM
[No subject] - by KULAKADDAN - 04-19-2005, 09:28 PM
[No subject] - by stalin - 04-19-2005, 09:34 PM
[No subject] - by stalin - 04-19-2005, 09:38 PM
[No subject] - by KULAKADDAN - 04-19-2005, 09:38 PM
[No subject] - by stalin - 04-19-2005, 09:51 PM
[No subject] - by Nitharsan - 04-19-2005, 10:20 PM
[No subject] - by vasisutha - 04-19-2005, 10:25 PM
[No subject] - by stalin - 04-19-2005, 11:01 PM
[No subject] - by Nitharsan - 04-20-2005, 12:28 AM
[No subject] - by vasisutha - 04-20-2005, 12:41 AM
[No subject] - by AJeevan - 04-20-2005, 01:45 AM
[No subject] - by hari - 04-20-2005, 04:52 AM
[No subject] - by hari - 04-20-2005, 04:58 AM
[No subject] - by hari - 04-20-2005, 08:53 AM
[No subject] - by tamilini - 04-20-2005, 10:28 AM
[No subject] - by pepsi - 04-20-2005, 11:21 AM
[No subject] - by hari - 04-21-2005, 04:44 PM
[No subject] - by kavithan - 04-21-2005, 05:32 PM
[No subject] - by Mathuran - 04-21-2005, 05:41 PM
[No subject] - by hari - 04-21-2005, 05:41 PM
[No subject] - by hari - 04-21-2005, 05:44 PM
[No subject] - by தூயா - 04-21-2005, 05:48 PM
[No subject] - by Mathuran - 04-21-2005, 05:50 PM
[No subject] - by tamilini - 04-21-2005, 05:53 PM
[No subject] - by hari - 04-21-2005, 05:57 PM
[No subject] - by hari - 04-21-2005, 05:59 PM
[No subject] - by hari - 04-21-2005, 06:04 PM
[No subject] - by tamilini - 04-21-2005, 06:07 PM
[No subject] - by adithadi - 04-24-2005, 04:11 PM
[No subject] - by shanmuhi - 04-27-2005, 06:19 PM
[No subject] - by tamilini - 04-27-2005, 06:46 PM
[No subject] - by kuruvikal - 04-27-2005, 06:59 PM
[No subject] - by Danklas - 04-27-2005, 07:07 PM
[No subject] - by vasisutha - 04-27-2005, 10:16 PM
[No subject] - by Eswar - 04-27-2005, 11:41 PM
[No subject] - by தூயா - 04-28-2005, 11:49 AM
[No subject] - by இளைஞன் - 04-28-2005, 12:44 PM
[No subject] - by tamilini - 04-28-2005, 01:14 PM
[No subject] - by vasisutha - 04-28-2005, 01:19 PM
[No subject] - by Danklas - 05-01-2005, 01:36 AM
[No subject] - by tamilini - 05-01-2005, 02:13 AM
[No subject] - by kavithan - 05-01-2005, 06:31 AM
[No subject] - by vasisutha - 05-01-2005, 11:07 AM
[No subject] - by KATPUKKARASAN - 05-02-2005, 01:34 PM
[No subject] - by stalin - 05-02-2005, 02:47 PM
[No subject] - by kuruvikal - 07-31-2005, 07:31 PM
[No subject] - by Rasikai - 07-31-2005, 07:37 PM
[No subject] - by kavithan - 07-31-2005, 08:13 PM
[No subject] - by அனிதா - 07-31-2005, 08:23 PM
[No subject] - by kavithan - 07-31-2005, 08:24 PM
[No subject] - by அனிதா - 07-31-2005, 08:32 PM
[No subject] - by Danklas - 07-31-2005, 08:36 PM
[No subject] - by kavithan - 07-31-2005, 08:42 PM
[No subject] - by அனிதா - 07-31-2005, 08:47 PM
[No subject] - by வினித் - 07-31-2005, 10:08 PM
[No subject] - by vasisutha - 07-31-2005, 10:15 PM
[No subject] - by Eswar - 07-31-2005, 10:21 PM
[No subject] - by வினித் - 07-31-2005, 11:00 PM
[No subject] - by kavithan - 08-01-2005, 03:15 AM
[No subject] - by வினித் - 08-01-2005, 07:03 AM
[No subject] - by Vishnu - 08-01-2005, 09:34 AM
[No subject] - by Rasikai - 08-01-2005, 06:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)