04-12-2005, 01:08 AM
Mathan Wrote:தனிப்பட்ட ஒருவரை குறித்து ஆதாரமில்லாமல் களத்தில் எழுதினால் அது களத்தை நடாத்துபவரையே பாதிக்கும். கருத்தெழுதுபவர்கள் சொந்த பெயரிலே புனை பெயரிலோ எழுதினாலும் பாதிக்கப்படும் தனிப்பட்ட நபர் கள நிர்வாகியையே பொறுப்பேற்குமாறு கோருவார்.
அப்படியா. இது எல்லா இடங்களிலும் பொருந்துவதாகத் தெரியவில்லையே. இங்கு பலர் தமிழ் விரோத சக்திகளை விமர்சிக்கின்றனர். அவ்விரோதிகள் களத்துக்கு எதிராக வழக்குத் தொடரலாம் என்று நீங்கள் எண்ணவில்லையா?
செய்திகளின் ஆதாரத்துக்கு தமிழ்விரோத இணையங்களைக் குறிப்பிட்டால் ஏற்றுக் கொள்வீர்களா?
சில காரணங்களுக்காக புலத்தில் ஈழபதீஸ்வரர் விடயம் ஒரு விலக்கப்பட்ட விடயமாக (taboo) உள்ளது.
தனிநபர் தாக்குதல் தேவையில்லைத்தான். என்றாலும் பிழையான கருத்துக்கள் பரவுதலை தடுத்து நிறுத்த தமிழ்தேசிய ஊடகங்கள் பின்னிற்பதேன்?
<b> . .</b>

