04-11-2005, 11:29 PM
kirubans Wrote:20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் சேலை அணியும் முறை எல்லோருக்கும் பொதுவாக அமையவில்லை. யாழ்ப்பாணத்தில் சட்டை அணிவது உயர்சாதி பெண்களுக்கு மட்டும் என்று இருந்தது. பலர் குறுக்குக்கட்டுதான் கட்டி இருந்தார்கள். மீறினால் பெரும் தண்டனை கொடுக்கப்பட்டிருந்தது.மெகதஞ்சார கரப்பா பகுதிகளில் ஆதாரம் கிடைக்கவில்லை உங்களை போல் சொல்ல நினைத்தேன் குருவியார் ஆதாரம் வேணும் என்று தடா போட்டு விட்டார்-----------------------------------------ஸ்ராலின்
20ம் நூற்றாண்டில் இப்படி நடாத்தப்பட்டவர்கள் அதற்கு முற்பட்ட காலங்களில் எப்படி நடாத்தப்பட்டிருப்பார்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.
உடைகள் எவ்வாறு அணியப்பட்டன என்பதை கோயிற்சிற்பங்கள் விளக்குகின்றன. பழைய கால ஓவியங்களும் சிற்பங்களும்தான் நமக்கு முன்னுள்ள ஆதாரங்கள்.
வேதங்கள் சேலை உடுத்துவதைச் சொல்லியிருந்தால், அக்கால சிற்பங்களும் (கி.பி. 3000 என்றால் சிந்துவெளி நாகரிக கால) அதைப் பிரதிபலித்திருக்க வேண்டும்.

