04-11-2005, 04:56 PM
Jude Wrote:கவர்ச்சி என்பதன் அர்த்தம் வலிந்து தன்னை நோக்கி இழுத்தல் என்பதாகும். கள்ளன் பணத்தை கவர்ந்து சென்றான். காந்தம் இரும்பை கவரும். ஆணின் கம்பீரமான தோற்றம் பெண்களை கவரும். என்ற வசனங்களில் கவர்ச்சியின் பொருள் அதுவே.
பல ஆண்களுக்கு பெண்களின் தோற்றம், பேச்சு, குரல், புன்னகை, முக அழகு, உடை அழகு ஆகியவை கவர்ச்;சியானவை. சில ஆண்களுக்கு நிர்வாணமான பெண், குறிப்பாக தொப்புள், இடுப்பு போன்ற அங்கங்கள் மட்டுமெ கவர்ச்சியானவை. kirubans இந்த இரகத்தை சேர்ந்தவராக தன்னை மேற்படி கருத்துக்களால் அடையாளம் காட்டிக்கொள்கிறார். குருவிகளோ முதலாவது இரகத்தை சேர்ந்தவர்.
உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது. ஏற்றுக் கொள்கிறேன்.
பின்வருவற்றில் கவர்ச்சி என்பதன் அர்த்தம் என்ன?
படங்களில் கவர்ச்சி அதிகம் காட்டுகிறார்கள்
தோற்றம், பேச்சு, குரல், புன்னகை, முக அழகு, உடை அழகு அதிகம் என்று அர்த்தமா?
நடுப்பக்கத்தில் வண்ணக் கவர்ச்சிப்ப்டம்
இழுத்துப் போர்த்திய குடும்பப் பாங்கான உடையணிந்த படம் உள்ளது என்று அர்த்தமா?
பொதுவாக பெண் கவர்ச்சி காட்டுகிறாள் என்றால் அரைகுறை ஆடை அணிந்துள்ளாள் என்றுதான் அர்த்தம்.
நான் பண்பாடு, கலாச்சாரம் என்று போர்வைக்குள் இருந்துகொண்டு பெண் இதுதான் அணியவேண்டும், இப்படித்தான் அணியவேண்டும் என்று சட்டங்களைச் சொல்லிவிட்டு திருட்டுத் தனமாக சகிலாவின் படங்களைப் பார்க்கவில்லை. 8)
<b> . .</b>

