04-10-2005, 12:04 AM
இளவரசர் சார்லஸ் - வாழ்க்கைக் குறிப்பு
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 1948-ம் ஆண்டு நவம்பர் 14ல் பக்கிங்ஹாம் அரண்மனையில் பிறந்தார். இவரது முழுப்பெயர் சார்லஸ் பிலிப் ஆர்தர் ஜார்ஜ்.
1958ல் வேல்ஸ் இளவரசராக அறிவிக்கப்பட்டார்.
ஸ்காட்லாந்தில் உள்ள சீம் பள்ளியில் படிப்பைத் தொடங்கிய சார்லஸ் 1966}ல் ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் உள்ள இங்கிலாந்து இலக்கணப் பள்ளியில் சில காலம் பயின்றார். பிரிட்டிஷ் மன்னர் பரம்பரையில் முதன் முதலாக வெளிநாட்டில் கல்வி கற்றவர் என்ற பெருமையைப் பெற்றவர் சார்லஸ்.
பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வரலாறு, தொல்லியல் ஆராய்ச்சி குறித்து படித்தார். 1970}ல் பி.ஏ. பட்டம் பெற்றார். அதே ஆண்டில் பிரபுக்களின் அவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1969}ல் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். வேல்ஸ் ரெஜிமெண்ட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று பணியாற்றினார். 1971}ல் விமானப் படையிலும் சில காலம் பணிபுரிந்தார். அத்துடன் கடற்படையிலும் சில மாதங்கள் வேலைப் பார்த்தார்.
தற்போது கடற்படையின் துணைத் தலைவராகவும், ராணுவத்தின் லெப்டினெட் ஜெனரலாகவும், விமானப்படையின் தளபதியாகவும் பதவி வகிக்கிறார்.அவர்.
1981 ஜூலை 29}ல் டயானாவை சார்லஸ் திருமணம் செய்தார். இத்திருமணம் லண்டனில் உள்ள புனித பால் பேராலயத்தில் நடைபெற்றது. இவர்களுக்கு ஹாரி, வில்லியம் என்ற இரு புதல்வர்கள் உள்ளனர்.
இவர்களது இல்வாழ்க்கை 1996 ஆகஸ்ட் 28ல் முடிவுக்கு வந்து இருவரும் அதிகாரப்பூர்வமாகப் பிரிந்தனர். துரதிஷ்டவசமாக இளவரசி டயானா 31.8.1997}ல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த கார் விபத்தில் பலியானார்.
இளவரசர் சார்லஸ் தனது காதலி கமீலா பார்க்கரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக கடந்த பிப்ரவரி 10}ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 8}ம் தேதி விண்ட்ஸர் பதிவு அலுவலகத்தில் இவர்களது திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நாளில் போப்பாண்டவரின் உடல் அடக்கம் நடைபெற்றதால் அத்திருமணம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டது. ஏப்ரல் 9}ம் தேதி நடைபெறும்
இத்திருமணத்தில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்களும் நண்பர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சேவை அமைப்புகளிலும் இளவரசர் சார்லஸ் பதவி வகிக்கிறார். போலோ விளையாட்டு, குதிரையேற்றம், விவசாயம், சுற்றுச்சூழல், கட்டடக்கலை ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர் சார்லஸ்..
வெளிநாடுகளில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளுக்கு அரசி எலிசபெத் சார்பாக இவர் கலந்துகொள்வது வழக்கம். 1997}ல் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைக்கும் முறைப்படியான நிகழ்ச்சியில் இவர் பிரிட்டிஷ் அரசியின் சார்பாக சார்லஸ் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Dinamani
திருமணத்திற்கு முன்னால் வந்த குறிப்பு இது

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>