04-09-2005, 11:34 PM
30 ஆண்டுக் காதல் நிறைவேறியது: 57 வயது கமீலாவை பதிவுத் திருமணம் செய்தார் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்
<img src='http://news.bbc.co.uk/media/images/41016000/jpg/_41016553_greet300.jpg' border='0' alt='user posted image'>
லண்டன், ஏப். 10: முப்பது ஆண்டுகளுக்கு மேலாகக் காதலித்துவந்த கமீலா பார்க்கர் பெüல்ûஸ (57), அவரைவிட ஒரு வயது இளையவரான பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் சனிக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.
இத் திருமணம் தேவாலயத்தில் நடைபெறாமல், லண்டனிலிருந்து 32 கி.மீ. தூரத்தில், விண்ட்சரில் உள்ள கில்ட்ஹாலில் எளிய முறையில் பதிவுத் திருமணமாக நடைபெற்றது.
அதில் சார்லஸின் மூத்த மகன் வில்லியமும், கமீலாவின் மூத்த மகன் டாம் பார்க்கர் பெüல்ஸýம் சாட்சிக் கையெழுத்திட்டனர்.
சார்லஸ்-டயானா தம்பதியின் மகன்கள் வில்லியம், ஹாரி, கமீலா-ஆண்ட்ரூ பார்க்கர் பெüல்ஸ் தம்பதியின் குழந்தைகள் டாம் மற்றும் லாரா ஆகியோரும் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமாக 28 பேரும்தான் இத் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.
திருமண நிகழ்ச்சி இருபதே நிமிடங்களில் நிறைவடைந்துவிட்டது.
தேவாலயத்தில் நடைபெறாததால், இத் திருமணத்தில் இங்கிலாந்து ராணியும் சார்லஸின் தாயாருமான எலிஸபெத் ராணி கலந்துகொள்ளவில்லை.
1981-ல் சார்லஸ் ~ டயானா திருமணம் பிரமாண்டமான முறையில் புனித பால் தேவாலயத்தில் நடைபெற்றது. அதற்கு மாறாக, இத் திருமணம் மிக எளிமையாக நடந்தது. 1997-ல் கார் விபத்தில் டயானா இறந்தார். அதற்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து மறுமணம் புரிந்துள்ளார் சார்லஸ். அவரது காதலியான கமீலா, 1995-ல் முதல் கணவர் ஆண்ட்ரூவிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
திருமணத்துக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கருப்பு நிற கோட், இளம்சாம்பல் நிற ஜாக்கட் அணிந்த சார்லஸýம், பழுப்பு நிற கோட் அணிந்த கமீலாவும் கையுடன்கை கோத்தபடி திருமண அரங்கிலிருந்து, மக்களைப் பார்த்துக் கையசைத்தபடி வெளியே வந்தனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அச் சாலைகளில் கூடியிருந்தனர். அவர்கள் இருவரின் கைகளிலும் புதிய திருமண மோதிரங்கள் ஜொலித்தன.
முன்னதாக, அத் திருமணத்துக்கு 3 பேர் ஆட்சேபனை தெரிவித்து இருந்தனர். ஆனால், திருமணத்தைப் பதிவுசெய்த துணைத் தலைமைப் பதிவாளர் டென்னிஸ் ராபர்ட்ஸ் அவற்றை நிராகரித்துவிட்டார்.
ஏற்கெனவே இத் திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது.
மறைந்த போப்பாண்டவரின் உடல் அடக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றதால், சார்லஸ்-கமீலா திருமணம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டு, சனிக்கிழமை நடைபெற்றது.
Dinamani

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>