04-08-2005, 03:22 AM
இலண்டன்வாழ் தமிழர் ஆலயம் எந்தத் தரப்புக்கு - தீர்ப்பு வெளியானது
இலண்டன் மாநகரில் வெம்ப்ளி என்கின்ற இடத்தில் அமைந்துள்ள, ஈழத்தமிழர்களிடையே பிரபலமான ஈழபதீசுவரர் ஆலயத்தின் நிர்வாகம் தங்களிடம் வழங்கப்படவேண்டும் என அதன் நிர்வாக சபையில் இருந்த இலண்டனைச் சேர்ந்த ஜெயதேவன் என்பவரும் அவரைச் சார்ந்தோரும் இலண்டன் உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில், இலண்டன் உயர் நீதி மன்றம் இன்று, சிவயோகம் என்ற அறக்கட்டளையிடம் சிறிது காலம் இருந்த இந்த கோவில்நிர்வாகம் மற்றும் அது சம்மந்தமான பொருட்கள் அனைத்தையும் மீண்டும் ஜெயதேவன் வசமே ஒப்படைக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளது.
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கோவில் நிர்வாகத்தை சீவரத்தினம் பெயருக்கு மாற்றித் தரச் சொல்லி தான் வன்னியில் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும் நீதி மன்றத்தின் முன் ஜெயதேவன் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.
இன்றைய தீர்ப்பு குறித்தும் உங்கள் தரப்பு வாதங்கள் என்ன என்றும் ஜெயதேவனின் சார்பில் ஆஜரான இலண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் பால் ரிட்ஜ் அவர்கள் இதுபற்றி விளக்குகிறார்.
BBC Tamil News

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>