04-06-2005, 07:22 PM
பாப்பரசர் மறைவுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் இரங்கல் செய்தி
தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள், பரிசுத்த பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் அவர்களின் மறைவு குறித்து இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில்ää மானுடத்தின் விடிவிற்காக அயராது உழைத்த ஒரு மகத்தான ஆன்மீகத்தலைவரை உலகம் இழந்துவிட்டது என ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.
''உலகசமாதானத்திற்கும், தேசங்கள் மத்தியிலான சகவாழ்விற்கும், சகல மதத்தவர்களதும் ஒத்திசைவான நல்லுறவுக்கும், புனிதபார்பரசர் ஆற்றிய பணி அற்புதமானது, அனைவராலும் போற்றப்படுவது. உலகத்தின் உன்னதமான ஆன்மீகத்தலைவர் என்றரீதியில், வறுமைப்பட்ட மக்களதும்ää ஒடுக்கப்பட்ட இனங்களினதும் விடிவுக்காக அவர் அரும்பணியாற்றினார். அன்பு, காருண்ணியம், சகோதரத்துவப் பண்பு போன்ற சீலங்களை அவர் பரப்புரை செய்தார். சுதந்திரம், விடுதலை, சமத்துவம் போன்ற உயரிய மனிதவிழுமியங்களில் நம்பிக்கை கொண்ட அனைத்து மனிதப் பிறவிகளும் பாப்பரசரின் உன்னதமான வாழ்க்கையையும், அவரது உயரிய சிந்தனைகளையும் என்றும் தமது நெஞ்சில் நிறுத்தி அவரை கௌரவிப்பார்கள்'' என திரு.பிரபாகரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் சார்பாக தமது ஆழ்ந்த துயரையும் கவலையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தமது செய்தியில் கூறியுள்ளார்.

--
--
--