![]() |
|
போப் ஜோன் போல் மரணமடைந்தார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: போப் ஜோன் போல் மரணமடைந்தார் (/showthread.php?tid=4599) Pages:
1
2
|
போப் ஜோன் போல் மரணமடைந்தார் - sompery - 04-01-2005 84 வயதான பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருப்பதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுநீரில் கிருமி படர்ந்ததால் அவரது உடலில் காய்ச்சல் உருவாகியுள்ளதாகவும்ää ஏற்கனவே இரு தடவை அடுத்தடுத்து சத்திரசிகிச்சைக்குள்ளானதால் நோய்வாய்ப்பட்டிருந்த உடலில்ää இது அதிக உபாதைகளை உருவாக்கியுள்ளதாகவும் தெரிகிறது. ரோமை நகரில் அமைந்துள்ள ஜெமினி மருத்துவ மனையில் சத்திரசிகிச்சைக்குள்ளான பாப்பரசர்ää தற்போது வத்திக்கான் கட்டடத்தில் ஓய்வுபெற்றுவரும் நிலையில்ää அவரது உடல்நிலையில் திடீர் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. கத்தோலிக்க மதத்தில்ää உயிருக்கு ஆபத்துள்ள நேரத்தில் வழங்கப்படும் தேவதிரவிய அனுமானமான அவஸ்தைபூசுதல்ää பாப்பரசருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவஸ்தை பூசுதல் வழங்கப்பட்டதால்ää மரணம் சம்பவிக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தப்படாது. முன்னர் ஒருதடவைää பாப்பரசர் துப்பாக்கியால் சுடப்பட்டபோதும்ää 1981ம் ஆண்டு இந்தப் பாப்பரசருக்கு அவஸ்தைபூசுதல் வழங்கப்பட்டது. 26 வருடங்கள் பாப்பரசராக இருக்கும் இவர்ää உலக சமாதானத்திற்காகவும்ää ஐரோப்பாவின் எழுச்சிக்காகவும் மிகக் கடுமையாக உழைத்து வெற்றிபெற்ற ஒருவராகக் கருதப்படுபவர். வரலாற்றிலேயே மிக அதிகமான பயணங்களை மேற்கொண்ட ஒரு பாப்பரசராகவும்ää மிக அதிகமான மக்களைச் சந்தித்த ஒருவராகவும் இவர் விளங்குகிறார். போலந்து நாட்டில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த கரோல் வொஜ்ரைலா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர்ää மிகச் சிறந்த ஒரு மாணாக்கராக விளங்கியதுடன்ää பின்னர் மொத்தம் 11 மொழிகளில் அனாயாசமாகப் பேச எழுதத் தெரிந்த ஒருவராகவும்ää இன்னும் பல மொழிகளை ஓரளவு அறிந்து வைத்திருந்தவராகவும் விளங்கினார். 1981ல் சூட்டுக் காயங்களுக்காக சத்திர சிகிச்சைக்கும்ää 1992ல் வயிற்றில் கட்டியொன்று இருந்ததால் சத்திரசிகிச்சைக்கும்ää 94ல் இடுப்பு மூட்டில் ஏற்பட்ட உபாதையால் சத்திரசிகிச்சைக்கும் உள்ளானபோதிலும்ää இறுதி மூச்சு இருக்கும்வரை தனது பணி தொடரும் என்று அறிவித்திருந்தார். பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்ட பாப்பரசர்ää இம்மாதம் 14ம் திகதியுடன்ää வரலாற்றில் அதிக காலம் பாப்பரசராகப் பணியாற்றிய மூன்றாவது பாப்பரசராக உருவானார். இவருக்கு மரணம் சம்பவிக்கும் பட்சத்தில்ää புதிய பாப்பரசரைத் தெரிவுசெய்யää உலகிலுள்ள அனைத்து கருதினால்களும் ரோமை நகரின் வத்திக்கான் சபையில் கூடிää விசேட வாக்கெடுப்பில் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: புதினம் - Mathan - 04-01-2005 பாப்பரசரின் நிலை கவலைக்கிடம் <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40980000/jpg/_40980347_popeindex.jpg' border='0' alt='user posted image'> புனித பாப்பரசர் அவர்களின் உடல் நிலையில், நேற்றிரவு திடீரென்று ஏற்பட்ட பின்னடைவை அடுத்து, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக ஆனால் ஸ்திரமாக இருப்பதாக வத்திகான் கூறுகிறது. அவருக்கு இரத்த அழுத்தம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமங்கள் ஏற்பட்டதாக மிகச்சமிபத்திய மருத்துவ அறிக்கை கூறியது. பாப்பரசர் அசாதாரணமான அமைதியுடன் காணப்பட்டார் என்றும், பிரார்த்தனைகள் அவருக்குப் படிக்கப்பட்ட போது முழு உணர்வுடன் இருந்தார் என்றும் போப்பாண்டவருக்காகப் பேசவல்லவரான, ஜொக்வின் நவாரோவால்ஸ் கூறினார். அவர் உயர் மட்ட வத்திகான் அதிகாரிகளை சந்தித்தார் மற்றும், பல புதிய மதகுருமார்கள் மற்றும் தலைமை மதகுருமார்கள் நியமனத்தை அங்கீகரித்தார் . ஆனால், அவரது படுக்கைக்கருகே காணப்படும் காட்சியைப் பற்றிய விவரங்களை வைத்துப்பார்க்கையில், தான் இறக்கபோகிறோம் என்பதைப்பற்றி அவர் ஏற்றுக்கொண்டது தெளிவாகிறது என்று பிபிசியின் ரோம் நகர செய்தியாளர் கூறுகிறார். அவர் அமைதியாக மறைந்துகொண்டிருக்கிறார் என்று அவரைப்பார்த்த கார்டினல்களில் ஒருவரான ஆண்டிறஸ் டெஸ்குர் வர்ணித்தார். தான் மீண்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படக்கூடாது என்பது பாப்பரசரின் விருப்பம் என்று அதிகாரிகள் கூறினார்கள். BBC Tamil News - Mathan - 04-01-2005 உலகெங்கும் பாப்பரசருக்காக பிரார்த்தனை <img src='http://news.bbc.co.uk/media/images/40983000/jpg/_40983831_managua_ap300.jpg' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/media/images/40983000/jpg/_40983779_washingtondc_gi300.jpg' border='0' alt='user posted image'> உலகெங்கிலும் உள்ள பல கோடிக்கணக்கான கத்தொலிக்கர்கள், தேவாலயங்களிலும், திறந்த வெளிமைதானங்களிலும் , பாப்பரசருக்காக பிரார்த்திக்கக் கூடி வருகிறார்கள். ரோம் நகரில், பாப்பரசர் வசிக்கும் இருப்பிட வளாகத்துக்கு சில மீட்டர்கள் தூரத்தில், தூய பீட்டர் சதுக்கத்தில் யாத்ரீகர்கள் கவலையுடன் காத்திருக்கிறார்கள். சிலர் இரவு முழுவதையும் திறந்த வெளியிலேயே கழித்தனர். பாப்பரசரின் சொந்த நாடான, போலாந்தில், பல தேவாலயங்களில், வழிபடுபவர்கள் நிரம்பியிருந்தனர். ஏசுநாதர் பிறந்த ஊரான , பெத்லஹேமில், மெழுகுவர்த்திப்பிரார்த்தனகள் நடந்தன. ரோமன் கத்தொலிக்க நாடான, பிலிப்பைன்ஸில் தேவாலயங்கள் பல்லாயிரம் மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் ஒளிர்ந்தன. BBC Tamil News - Hariny - 04-02-2005 þÕ Å¡Ãí¸ÙìÌ ÓýÒ Åò¾¢ì¸¡É¢ø ¿¡ý ÒÉ¢¾ À¡ôÀ¡ñ¼Å¨Ã §¿Ã¢ø À¡÷ìÌõ Å¡öôÒ ¸¢¨¼ò¾Ð. Áì¸û «Å¨Ã ´Ä¢ù þ¨Ä¸¨Ç «¨ºòÐ ÅçÅüÈÉ÷. ±í¸ÙìÌ «Õ¸¢ø ¿¢ýÈ ´Õ ¦ÀñÁ½¢, À¡ôÀú¨Ãì¸ñÎ ¸ñ½£÷ Áø¸¢ «ØÐ¦¸¡ñÊÕó¾Ð þô¦À¡ØÐõ ÁÉì¸ñ½¢ø ¿¢ü¸¢ÈÐ. - AJeevan - 04-02-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40980000/jpg/_40980347_popeindex.jpg' border='0' alt='user posted image'> <b>அவர் அமைதியாக மறைந்துகொண்டிருக்கிறார்</b> <span style='font-size:25pt;line-height:100%'>நேர்மையும் அஞ்சா நெஞ்சமும் அன்பும் கொண்ட பாப்பரசர் , தாம் ஆற்றிய பணிகளுக்குப் பிறகு அமைதியாக இறைவனடி சேர மன்றாடுவோம். இதுவரை பணியாற்றிய பாப்பரசர்களில் மிகவும் வேறுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.</span> - sinnappu - 04-02-2005
போப் ஜோன் போல் மரணமடைந்தார் - Mathan - 04-02-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40983000/jpg/_40983341_pope203bap.jpg' border='0' alt='user posted image'> இதயம், சிறுநீரகம் என்பன சரியாக தொழிப்படாமையினாலும் இரத்த அழுத்தம் காரணமாகவும் கடுமையாக சுகவீனமுற்றிருந்த போப் ஜோன் போல் (II) பிரித்தானிய நேரப்படி 19.37 அளவில் வத்திக்கான் நகரில் மரணமடைந்தார், செய்தி ஆதாரம் BBC செய்தி முழுமையாக ஆங்கிலத்தில் http://news.bbc.co.uk/1/hi/world/europe/4399715.stm - Danklas - 04-02-2005 ±ÁÐ ¸ñ½£÷ «ïºÄ¢..
- Nitharsan - 04-02-2005 எனது கண்ணீர் அஞ்சலிகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- சிலந்தி - 04-02-2005 கண்ணீர் அஞ்சலிகள் - shanmuhi - 04-02-2005 எனது கண்ணீர் அஞ்சலிகள்.
- vasisutha - 04-02-2005 கண்ணீர் அஞ்சலிகள்.
- Mathan - 04-02-2005 போப்பாண்டவர் மறைவு வாடிகன், ஏப். 3: உலக கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தலைவரான போப்பாண்டவர் 2வது ஜான் பால், சனிக்கிழமை நள்ளிரவு மரித்தார். இத் தகவலை கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை பீடமான வாடிகன் அதிகாரிகள் அறிவித்தனர். ""புனிதத் தந்தை, சனிக்கிழமை இரவு 9.37-க்கு, தனது இல்லத்தில் மரித்தார்'' என்று திருச்சபை தலைமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 84 வயதான அவருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவரது ரத்த அழுத்தமும் சீரற்று இருந்துவந்தது. சிறுநீர்க்குழாயில் தொற்று ஏற்பட்டு, அவருக்குக் கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டது. இதற்கிடையே இரு நாள்களுக்குமுன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. எனினும் தன்னை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டாம் என்றும், தனது இல்லத்திலேயே இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். அதனால், அவரது இல்லத்திலேயே அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். அவருக்கு நினைவிழப்பு ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாயின. ஆனால், அதை வாடிகன் நிர்வாகம் மறுத்தது. இதற்கிடையே அவரது உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டு, சனிக்கிழமை இரவில் நன்மரணம் அடைந்தார். கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில், போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தாலியரல்லாத முதல் போப்பாண்டவர் இவர். அவர் போலந்து நாட்டில், வாதோவிஸ் என்ற இடத்தில் 1920, மே 18-ல் பிறந்தார். அவரது இயற்பெயர் கரோல் ஜோசப் வோஜிலா. குருவானவராக 1946, நவம்பர் 1-ல் பட்டம் பெற்றார். 1958, செப்டம்பர் 28-ல் ஆயராகப் பதவியேற்றார். 1964, ஜனவரி 13-ல், கிராகோவ் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். 1967, ஜூன் 26-ல் கர்தினாலாக நியமிக்கப்பட்டார். 1978, அக்டோபர் 16-ல் போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 22-ம் தேதி, அப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, கத்தோலிக்க மத வழக்கப்படி, 2வது ஜான் பால் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். 26 ஆண்டுகளாக போப்பாண்டவராகப் பதவி வகித்த அவர், 120 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அவரைக் கொலை செய்ய 2 முறை முயற்சிகள் நடந்தன. அதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை பாதிப்படைந்தது. அவருக்கு நரம்பைப் பாதிக்கும் பார்க்கின்ஸன்ஸ் நோய் பாதிப்பும் ஏற்பட்டிருந்தது. தினமணி - AJeevan - 04-03-2005 <img src='http://www.cartage.org.lb/en/themes/Biographies/MainBiographies/E/Erpelding/canvaspope916small.jpg' border='0' alt='user posted image'> ±ÁÐ ¸ñ½£÷ «ïºÄ¢.. - Vasampu - 04-03-2005 எனது குடும்பத்தாரின் கண்ணீர் அஞ்சலிகள். பரிசுத்த பாப்பரசரின் ஆனமா சாந்தியடைய இறை அருள் புரிவாராக.
- KULAKADDAN - 04-03-2005 எமது கண்ணீர் அஞ்சலிகள்............... - seelan - 04-03-2005 எனது கண்ணீர் அஞ்சலிகள்..
- Malalai - 04-03-2005
- Mathan - 04-03-2005 புதிய போப்பாக 6 பேருக்கு வாய்ப்பு புதிய போப்பாக இந்தியாவின் இவான் டயஸ் உட்பட 6 பேருக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. போப் ஆண்டவர் மரணம் அடைந்ததும், 15 நாட்களில் இருந்து 20 நாட்களுக்குள் புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்கான தேர்தல் வாடிகன் தேவாலயத்தில் நடைபெறும். உலகம் முழுவதும் உள்ள 120 கர்தினால்கள் ஓட்டுப் போட்டு புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வார்கள். பூட்டிய அறைக்குள் ரகசியமாக இந்த கூட்டம் நடைபெறும். ஒவ்வொரு கர்தினால்களுக்கும் ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படும். அந்தச் சீட்டில் லத்தீன் மொழியில் போப் ஆண்டவராக யாரை தேர்ந்தெடுக்கிறேன் என்று அவர்கள் குறிப்பிட வேண்டும். வேட்பாளர்கள் என்று இதில் யாரும் போட்டியிட மாட்டார்கள். இந்த தேர்தலில் 3 முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏகமனதாக ஒருவரை தேர்ந்தெடுத்து அவரையே புதிய போப் ஆண்டவராக அறிவிக்கலாம். போட்டி இருந்தால் 3ல் 2 பங்கு ஓட்டு பெறும் கர்தினால் புதிய போப்பாக அறிவிக்கப்படுவார். போட்டி இருந்து 3ல் 2 பங்கு கிடைக்காத பட்சத்தில் அதிக ஓட்டுகளின் அடிப்படையில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவார். புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தான் அந்த அறையின் கதவு திறக்கப்படும். புதியவர் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் அந்த அறையிலுள்ள குழாய் வழியே வெண்புகை வெளியே வரும். இதை வைத்து புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை தெரிந்து கொள்ளலாம். 1268ம் ஆண்டு போப் ஆண்டவர் 4வது கிளமென்ட் இறந்து 3 ஆண்டுகள் கழிந்த பிறகும் புதிய போப்பை தேர்ந்தெடுக்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டது. இதற்குப் பிறகு தான் பூட்டிய அறைக்குள் ரகசியமாக தேர்ந்தெடுக்கும் முறை அமலுக்கு வந்தது. இம்முறை புதிய போப் ஆண்டவராக இத்தாலிய கர்தினால் ஏஞ்சலோ சொடானா, ஜெர்மன் கர்தினால் ஜோசப் ரட்சிங்கர் மற்றும் மும்பை ஆர்ச் பிஷப் இவான் டயஸ் உள்பட 6 பேருக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.Thats Tamil - sinnappu - 04-03-2005 ±ÁÐ ¸ñ½£÷ «ïºÄ¢..
|