04-06-2005, 01:28 AM
கடற்படையினரே முதலில் சுட்டதாக விடுதலைப்புலிகள் கூறுகின்றனர்
திருகோணமலை மாவட்டத்தில் உப்பாற்றுப்பகுதியில் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் 200 மீற்றர் தூரம்வரை வந்த இலங்கை கடற்படையினர் முதலில் தாக்குதல் நடத்தியதன் காரணத்தினாலேயே, தமது தரப்பினர் பாதுகாப்புக்காக பதில் தாக்குதல் நடத்த வேண்டி நேரிட்டது என்று விடுதலைப்புலிகளின் திருகோனமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் கூறியுள்ளார்.
தமது கட்டுப்பாட்டில் உள்ள கடற்பரப்பில் 200 மீற்றர் தூரம்வரை தம்மை நோக்கி கடற்படைப் படகு வந்ததை அடுத்து, தமது போராளிகள் தமது முகாமை நோக்கி ஓடியதாகவும், ஆனால் தம்மை நோக்கி படகில் இருந்து துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதை அடுத்தே போராளிகள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும், அதனை அடுத்து படகு திரும்பிச் சென்றுவிட்டதாகவும் எழிலன் கூறினார்.
இது தொடர்பாக தாம் கண்காணிப்பு குழுவினருக்கு புகார் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த படகில் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் ஒருவரும் இருந்ததாக கூறப்படுவது குறித்து கண்காணிப்பு குழுவினர் தமக்கு தெரியப்படுத்தியதாகவும், ஆனால் அந்த படகு தமது கரையை நோக்கி வந்தது தவறு என்பதை தான் அவர்களுக்கு வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
BBC தமிழ் செய்தி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>