04-06-2005, 01:26 AM
திருகோணமலையில் கடற்படை படகின் மீது துப்பாக்கிச் சூடு
திருகோணமலை மாவட்டத்தில் உப்பாறும், திருகோணமலை துறைமுக கடல் பிரதேசமும் சங்கமிக்கும் பகுதியினூடாக கடல் ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டிருந்த வேளை தங்களின் கடற்படை படகு மீது விடுதலைப் புலிகளின் பகுதியிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படையினர் திருகோணமலை மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் முறைப்பாடு செய்திருக்கின்றனர்.
உப்பாறு பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும்.
இந்தப் பகுதியிலிருந்தே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
இன்று காலை 10மணி 15 நிமிடமளவில் தங்கள் வழமையான ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் ரோந்துப் படகில் திருகோணமலை மாவட்ட போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் கடற் கண்கணிப்பாளரான அல்ப் என்பவர் உடன் இருந்ததாகவும், அவரது தலைக்கு அருகாக துப்பாக்கி குண்டுகள் சென்றதாகவும் இந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தினால் கடற்படை படகின் மீது துப்பாக்கி சன்னங்கள் தெறித்த போதும் எவரும் காயங்களுக்கு இலக்காகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் இது தொடர்பான விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
BBC தமிழ் செய்தி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>