04-05-2005, 01:31 AM
பிரசில்ஸ் நாட்டில் பாப்பரசர் எதிர்கொண்ட சவால்கள்
உலகிலேயே கத்தோலிக்கர்கள் அதிகமாக வாழும் நாடான பிரசில்ஸ் நாட்டிலும் பாப்பரசர் புனித இரண்டாவது அருளப்பர் சின்னப்பரின் மறைவை ஒட்டி அஞ்சலிப் பிரார்த்தனைகளும், ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன.
பிரஸில் மீது பாப்பரசர் மிகவும் அக்கறை கொண்டவராகவே இருந்தார்.
அந்த நாட்டின் பிரச்சினைகளை அவர் நன்கு அறிந்திருந்தார்; ஆனால் திருச்சபை அரசியலில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்ற அவரது கொள்கை பிரசில் நாட்டில் அவருக்கு அதிக எதிர்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
பிரசில் நாடு இராணுவ சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்த போது ஜனநாயக ஆதரவாளர்களுக்கு பாப்பரசர் தலைமை தாங்க வேண்டும் என்று அங்கு பல மதகுருமார் எதிர்பார்த்தனர்.
ஆனால் அவர் அரசியலில் இருந்து திருச்சபை விலகி இருக்க வேண்டும் என்று கோரியதுடன், விடுதலைக்கான இறையியல் கொள்கையை பின்பற்றுபவர்களை தடை செய்தும் வைத்திருந்தார்.
அதேவேளை இவாஞ்சலிக்கல் திருச்சபையின் போதனையை பின்பற்றுபர்களின் அதிகரிப்பும் அவருக்கு அங்கு பெரும் சவாலாக அமைந்திருந்தது.
அதுமாத்திரமன்றி பெண்களை குருத்துவ பணியில் விலக்கி வைத்தல், பெண்ணுரிமை மற்றும் பெண்ணியம் போன்ற விசயங்களிலும் பாப்பரசர் பழமைவாதியாக திகழ்ந்தார் என்ற கருத்தும் அங்கு பலர் மத்தியில் காணப்பட்டது.
கருத்தடை, கருச்சிதைவு மற்றும் ஓரினச்சேர்க்கை போன்ற விசயங்களில் திருச்சபையின் கொள்கையை அவர் கடுமையாக கடைப்பிடித்ததாகவும் பல தரப்பினர் அங்கு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
BBC தமிழ்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>