04-04-2005, 04:21 PM
<img src='http://img109.exs.cx/img109/3143/birdflower9pr.jpg' border='0' alt='user posted image'>
<b>பருவத்தில்
பறக்கும் அந்த நினைவுகள்
சிறகொடித்து சிறை வைத்தேன்
பாடம் பயில்கையில்
சித்தமது சிதையக் கூடாதென்று...!
விவேகானந்தரும் ஜேசுவும்
எனக்குள் வந்ததாய்
என்னை நானே பெருமைப்படுத்தினேன்
எடுத்த கொள்கை தவறா
சுதந்திரப் பறவையாய் வாழவென்று....!
தொட்டது கெட்டதாக
ஒரு கூட்டம் சமூகம் என்று
விட்டது தனித்துப் போனேன்
என் வழி தனி வழி என்று
அது கண்டு சுற்றம் கூட
சுதாகரிக்கத் தயங்கியது...!
காலக் கண்ணாடி
காட்டியது ஒரு வசந்தம்
மலராய் வந்தது தந்தது அன்பு
மனதெங்கும் நினைவாய் பதிந்தது
கொடுமை பண்ணி
ஆளுது நினைவது
என்னை அடிமையாக்கி...!
அன்பென்றாலும் அடிமை வாழ்வு
கெஞ்சலும் வழிதலும்
அன்புக்குப் பரிசாய்....!
ஆர்ப்பரிக்குது மனசு
சுதந்திரப் பறவையே
உனக்கேன் இந்த நிலை...?!
எடுத்தேன் முடிவு
மலரவள் அன்பின்
அடிமை நினைவுகள் அறுக்க..!
ஓர்மத்து வாளெடுத்து
கொட்டினேன் போர் முரசு
மலரவள் நினைவோடு...!
ஓர் விடியலுக்குள்...
தோல்வியுள் துவண்டேன்
கனவோடு கலந்து
மலரவள் நினைவது வென்றது
அன்பு யுத்தம்...!
மீண்டும் நான்
மீளமுடியா அடிமையாகி
மலரவள் நினைவோடு அலைகிறேன்....!
காலம் எனக்கு விலங்கிட்டு
உன்னோடு கட்டி வைக்குமோ என்ற பயம்
மலரே மண்றாடுகிறேன்...
குருவி நான்
சுதந்திரப் பறவையாய் சிறகடிக்க
உன் நினைவதில்
ஒரு வானம் அமை...!
அதுபோதும்...
உன் அடிமையாகினும்
கொள்கை காத்ததற்கு சான்றாக...!</b>
<b>பருவத்தில்
பறக்கும் அந்த நினைவுகள்
சிறகொடித்து சிறை வைத்தேன்
பாடம் பயில்கையில்
சித்தமது சிதையக் கூடாதென்று...!
விவேகானந்தரும் ஜேசுவும்
எனக்குள் வந்ததாய்
என்னை நானே பெருமைப்படுத்தினேன்
எடுத்த கொள்கை தவறா
சுதந்திரப் பறவையாய் வாழவென்று....!
தொட்டது கெட்டதாக
ஒரு கூட்டம் சமூகம் என்று
விட்டது தனித்துப் போனேன்
என் வழி தனி வழி என்று
அது கண்டு சுற்றம் கூட
சுதாகரிக்கத் தயங்கியது...!
காலக் கண்ணாடி
காட்டியது ஒரு வசந்தம்
மலராய் வந்தது தந்தது அன்பு
மனதெங்கும் நினைவாய் பதிந்தது
கொடுமை பண்ணி
ஆளுது நினைவது
என்னை அடிமையாக்கி...!
அன்பென்றாலும் அடிமை வாழ்வு
கெஞ்சலும் வழிதலும்
அன்புக்குப் பரிசாய்....!
ஆர்ப்பரிக்குது மனசு
சுதந்திரப் பறவையே
உனக்கேன் இந்த நிலை...?!
எடுத்தேன் முடிவு
மலரவள் அன்பின்
அடிமை நினைவுகள் அறுக்க..!
ஓர்மத்து வாளெடுத்து
கொட்டினேன் போர் முரசு
மலரவள் நினைவோடு...!
ஓர் விடியலுக்குள்...
தோல்வியுள் துவண்டேன்
கனவோடு கலந்து
மலரவள் நினைவது வென்றது
அன்பு யுத்தம்...!
மீண்டும் நான்
மீளமுடியா அடிமையாகி
மலரவள் நினைவோடு அலைகிறேன்....!
காலம் எனக்கு விலங்கிட்டு
உன்னோடு கட்டி வைக்குமோ என்ற பயம்
மலரே மண்றாடுகிறேன்...
குருவி நான்
சுதந்திரப் பறவையாய் சிறகடிக்க
உன் நினைவதில்
ஒரு வானம் அமை...!
அதுபோதும்...
உன் அடிமையாகினும்
கொள்கை காத்ததற்கு சான்றாக...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

