04-04-2005, 12:13 PM
கடந்த ஆண்டு நிகழ்ந்த சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின் இந்தியாவின் தமிழ்நாட்டின் மெரீனா கடற்கரைஓரத்தில் மனிதமுகமும் மீனின் உடலும் கொண்டதான சடலம் ஒன்று கண்டெடுககப்பட்டிருப்பதாகவும் இது பலத்த பாதுகாப்பபுக்கு மத்தியில் சென்னை எக்மோர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி ஒன்று படங்களுடன் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பில் இணையத்தளம் ஒன்றினால் வெளியிடப்பட்டிருந்த செய்திபற்றி கவனம் செலுத்தி ஆராய்ந்த போது இச்செய்தி வெறும் புரளி என்பது தொரியவந்திருக்கின்றது.தமிழர்களின் புராதன கதைப்படைப்புக்களில் பொதுவாக கடல்கன்னி என்றழைக்கப்படும் இவ்வுருவம் சம்பந்தமான குறித்த படங்கள் 2003 ஒக்டோபர் மாதத்தில் இருந்தே மின்னஞ்சல்கள் வாயிலாகப்பரப்பப்பட்டுவருவது தொரியவந்திருக்கிறது.பின்னர் இச்செய்தி சுனாமி முலாம் பூசப்பட்டு சென்றமாத நடுப்பகுதியில் இருந்து உலவிவந்திருக்கின்றது.இச்செய்தி குறித்த இணையத்தளத்தினருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருக்கக்கூடும்.
இவ்வாறான கடல்கன்னிகள் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக சிலரால் சந்தேகம் தொ¢விக்கப்படுகின்றபோதிலும் இதனை நிருபிப்பதற்கான எந்த விதமான அறிவியல் ரீதியிலான சான்றுகளும் இதுவரையில் இல்லை எனவே இந்த எண்ணப்பாடு வெறும்கற்பனை மாதி¡¢களினால் நிருபிக்க முயற்சிக்கப்பட்ட சம்பவங்கள் நிறையவே நிகழ்ந்திருக்கின்றன. இந்தவகையில் யப்பானில் இதுதொடர்பான உருவம் ஒன்று காட்சிக்குவைக்கப்பட்டிருக்கின்றது. இது 1400 வருடஙகளுக்கு முந்தையது என்று சொல்லப்படுகின்றது.இதனை அங்கே காணலாம்
இதேபோல் சென்ற நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லி இன்னும் ஒரு உருவம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.இது மிகவும் பிரபல்யமானதாகும்.இதனை கீழே படத்தில் காணலாம்.ஆயினும் இவற்றுக்கிடையில் நிறைய வேறுபாடுகள் இருப்பது அவதானிக்கப்டிருக்கின்றது.வெறும் கற்பனை மாதி¡¢களாகவே இதுவரை பலராலும் கருதப்பட்டுவருகின்றது.
இந்தவகையில் தற்போது உருவெடுத்துள்ள இந்த கடல்கன்னியும் வெறும் கற்பனையே என்பதில் எந்த வித சச்தேகமும் இல்லை
-ஆசிரிய பீடம்-
http://www.webtamilan.com

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>