04-02-2005, 11:55 PM
போப்பாண்டவர் மறைவு
வாடிகன், ஏப். 3: உலக கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தலைவரான போப்பாண்டவர் 2வது ஜான் பால், சனிக்கிழமை நள்ளிரவு மரித்தார். இத் தகவலை கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை பீடமான வாடிகன் அதிகாரிகள் அறிவித்தனர்.
""புனிதத் தந்தை, சனிக்கிழமை இரவு 9.37-க்கு, தனது இல்லத்தில் மரித்தார்'' என்று திருச்சபை தலைமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
84 வயதான அவருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவரது ரத்த அழுத்தமும் சீரற்று இருந்துவந்தது. சிறுநீர்க்குழாயில் தொற்று ஏற்பட்டு, அவருக்குக் கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டது. இதற்கிடையே இரு நாள்களுக்குமுன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
எனினும் தன்னை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டாம் என்றும், தனது இல்லத்திலேயே இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். அதனால், அவரது இல்லத்திலேயே அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். அவருக்கு நினைவிழப்பு ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாயின. ஆனால், அதை வாடிகன் நிர்வாகம் மறுத்தது.
இதற்கிடையே அவரது உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டு, சனிக்கிழமை இரவில் நன்மரணம் அடைந்தார்.
கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில், போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தாலியரல்லாத முதல் போப்பாண்டவர் இவர்.
அவர் போலந்து நாட்டில், வாதோவிஸ் என்ற இடத்தில் 1920, மே 18-ல் பிறந்தார். அவரது இயற்பெயர் கரோல் ஜோசப் வோஜிலா. குருவானவராக 1946, நவம்பர் 1-ல் பட்டம் பெற்றார். 1958, செப்டம்பர் 28-ல் ஆயராகப் பதவியேற்றார். 1964, ஜனவரி 13-ல், கிராகோவ் உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். 1967, ஜூன் 26-ல் கர்தினாலாக நியமிக்கப்பட்டார். 1978, அக்டோபர் 16-ல் போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 22-ம் தேதி, அப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, கத்தோலிக்க மத வழக்கப்படி, 2வது ஜான் பால் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.
26 ஆண்டுகளாக போப்பாண்டவராகப் பதவி வகித்த அவர், 120 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அவரைக் கொலை செய்ய 2 முறை முயற்சிகள் நடந்தன. அதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை பாதிப்படைந்தது. அவருக்கு நரம்பைப் பாதிக்கும் பார்க்கின்ஸன்ஸ் நோய் பாதிப்பும் ஏற்பட்டிருந்தது.
தினமணி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>