04-02-2005, 01:01 PM
21ம் நூற்றாண்டிலும்...... புலத்தில் தமிழ்ப் பெண்கள்........... இந்த 21ம் நூற்றாண்டிலும்ää தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றிää தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றிää; மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்றுää வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும்ää பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும்ää பெண்ணியம் பேசுவது தற்போதைய நாகரீகம் என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்குää அந்த ஆண்சமூகம் தம்மைத்தான் மிதிக்கிறது என்று தெரியாமல்ää புரியாமல் குடை பிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள். இவர்களின் இந்த அறியாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண்விடுதலை என்பது இன்னும் எட்டாத உயரத்திலேயேதான் இருக
.

