Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்தின் ஆலயம் ஒன்பது - தயா ஜிப்ரான்-
#1
ஆகமத் திருத்தத்திற்கு
மூன்றில் ரெண்டு போதும்.

கல்லறைப் பிரதேசமானாலும்
குறைந்த வாடகையில்
ஒரு
கர்ப்பக்கிரகம் வேண்டும்.

-------------------------------------------

அந்நியன் தார்ச்சாலையிலும்
"அம்மன்" தரிசனம் வேண்டி
அங்கப்பிரதிஸ்டை

-------------------------------------------

பொன்னாடை போர்த்தி
பொன்னம்பலவாணருக்கு பாராட்டு!

மூன்றாண்டுக்கு மேலாய் - ஒரே
முகவரியில்
கோயில் கொண்டருளிய
பெருமையை வியந்து.

-------------------------------------------

தீபாராதனை
அரோகரா முழக்கம்
Sorry சொல்லி
விலகிய
பிள்ளையார்

-------------------------------------------

சித்திரைப் பௌர்ணமியா?
ஆடி அமாவாசையா?
எதுவானாலும்

சனி ஞாயிறில்
வரச் சொல்லுங்கள்.

-------------------------------------------

மாணவர்கள் தான்
ஆனாலும்
ஆசிரியர்களாய் ஆகிவிட்டார்.

பூசைகளை பார்த்தவர் தான்
ஆனாலும்
பூசகராய் மாறிவிட்டார்.

பூசகரை வரச் சொல்லுங்கள்
கடவுள்களாய்
ஆக்கிடலாம்.

-------------------------------------------

வேதம் ஓதுதல்
வேதியர்க்கு அழகு

இல்லை இல்லை......

வேலையில்லையேல்
வேதியனாகு

-------------------------------------------

கல்லானாலும் கடவுள்
Lagerhaus ஆனாலும்
கோயில்

(Lagerhaus - Store Room)

-------------------------------------------

அமைச்சரை தெரிய
ஒரு தேர்தல்
பிரதமரை தெரிய
ஒரு தேர்தல்
ஜனாதிபதியை தெரிய
ஒரு தேர்தல்

பூசகரை தெரியவும்
ஒரு தேர்தல்

வாழ்க! பக்தநாயகம் !!!

-------------------------------------------

- தயா ஜிப்ரான்-
.
.!!
Reply

Messages In This Thread
புலத்தின் ஆலயம் ஒன்பது - தயா ஜிப்ரான்- - by Thaya Jibbrahn - 04-02-2005, 02:10 AM
[No subject] - by Mathan - 04-02-2005, 03:21 AM
[No subject] - by Thaya Jibbrahn - 04-02-2005, 04:21 AM
[No subject] - by kavithan - 04-02-2005, 04:32 AM
[No subject] - by vasisutha - 04-02-2005, 05:05 AM
[No subject] - by kasthori - 04-02-2005, 06:30 AM
[No subject] - by shanmuhi - 04-02-2005, 08:13 AM
[No subject] - by hari - 04-02-2005, 09:43 AM
[No subject] - by Eswar - 04-02-2005, 12:25 PM

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)