Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜேவிபி இனவாத கட்சி அல்ல?
#3
'ஜேவிபியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பேரினவாதக் கட்சியாக பார்க்கவில்லை

'ஜேவிபியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பேரினவாதக் கட்சியாக பார்க்கவில்லை' என்று பிபிசிக்கு நேர்காணல் வழங்கியிருக்கிறார் இந்தியமார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினர் வரதராஜன்

நான் உங்களையே மார்க்சியக் கட்சியாகப் பார்க்கவில்லை என்பதையே அவருக்குப் பதிலாகக் கூற விரும்புகிறேன்.

மார்க்சின் போதனைகள்,பொதுவுடமைத் தத்துவம் என்பவற்றில் எனக்குப் பிடிப்பும் நம்பிக்கையும் உண்டு.அவற்றைக் கேள்விக்குறியாக்கும் வகையில் வரதராஜன் போன்றவர்கள் இன்னமும் சிவப்புச் சாயம் பூசிய கொடிகளில் தொங்கிக்கொண்டு ஏனையவர்கள் ஏளனஞ் செய்யும் அளவுக்கு மார்க்சியம் என்ற சொல்லையே மாற்றி வருவது தாங்கவொண்ணா எரிச்சலை ஏற்படுத்துகிறது

இந்தியாதான் என்றில்லை.வட தென் இலங்கையில் இயங்கிய பொதுவுடமைக் கட்சிகள்,தென்னிந்திய பொதுவுடமைக் கட்சிகள் எவையுமே குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பின்னர் கம்யூனிசம் என்பதைக் கருத்தளவிலேயே கொண்டிருந்திருக்கிறார்கள்.

இலங்கையில் லங்கா சமசமாஜக் கட்சியும் தோழமைக் கட்சிகளும் இலங்கை இனப்பிரச்சனை தோட்டத் தொழிலாளர் பிரச்சனை,மொழிப்பிரச்சனை போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் திடமான நிலைப்பாடு ஒன்றைக் கொண்டிருந்ததுபோல் வட இலங்கையில் இருந்து இயங்கிய பொதுவுடமைக் கட்சி திட்டமான கொள்கை எதையும் கொண்டிருக்கவில்லை.இந்தியாவிலும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்திலும் இதே நிலையே காணப்படுவதாகத் தெரிகிறது.இலங்கை இனப்பிரச்சனை பற்றி என்றுதான் இல்லை உள்ளூர் விவகாரங்களிலேயே தமிழகப் பொதுவுடமைக் கட்சிகள் திடமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறுவது புரிகிறது.தங்கள் நிலை என்ன என்பதை தெளிவாக வலியுறுத்தாமல் அவ்வப்போது அறிக்கைகளுடன் ஓய்ந்து போய்விடுகிறது அவர்களது அரசியல்.

அந்த அறிக்கைகளில் ஒன்றாகவும் அரசியல் சுயாலாபத்துக்கு மட்டுமேயானதுமாகவே வரதாரஜனின் இந்தக் கருத்தை நான் பார்க்கிறேன்.

மாணவர் மத்தியிலும் தொழிற்சங்களிலும் உருவான போது மட்டுமே ஜே.வி.பி பொதுவுடமைக் கட்சியாக இருந்திருக்கிறது.எப்போது அரசியலில் ஈடுபட ஆரம்பித்ததோ அன்றே முதலாளித்துவக் கட்சிகளைவிட மோசமான பாசிசக் கட்சியாக மாறிவிட்டது.தனிச்சிங்கள இலங்கை சிங்கள பௌத்தைலங்கையர் என்னும் அவர்களது கொள்கை இனவாதமல்லாது பொதுவுடமைவாதமென்று வரதராஜன் நிறுவ முயல்கிறார்.

அப்பாவி அரசாங்க ஊழியர்களையும் அரசியல்வாதிகளையும் வெட்டிப் பொதி செய்து அவர்கள் வீட்டுக்கே அனுப்பியது போன்று ஜே.வி.பி பண்ணிய அரஜாகங்களை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.இவர்களை அடக்குவதாகக் கூறிக்கொண்டு சிறிமா தலைமையிலான அரசாங்கம் 60000 சிங்கள இளைஞர்களை உயிரோடும் கொலைசெய்தும் வீதிகளில் ரயர் போட்டு எரித்ததையும் யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

இதே ஜே.விபிதான் இலங்கை அரசாங்கத்தில் பங்காளியாகவும் இருக்கிறது.பொதுமக்கள் ஐக்கிய முண்ணனி நாடறிந்த முதலாளித்துவக் கட்சி அவர்களுடன் கைகோர்த்தியங்கும் ஒரு கட்சியை இன்னமும் மார்க்சியக் கட்சி என்ற வரையறைக்குள் வரதராஜன் அடக்கி வைத்திருப்பது.மார்க்சியம் பற்றி அவருக்குள்ள புரிதல் எவ்வளவு என்பதை வெளிக்காட்டுகின்றது.

அண்மையில் ஜே.வி.பி மிகுந்த பரிகாசத்துக்கிடமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அமெரிக்கா கியூபாவுக்கு எதிராகப் பிரகடனம் செய்த பொருளாதாரத் தடையை தாங்கள் எதிர்க்கிறோமாம்.ஜேவி.பி இதை சொல்லிய அதேவாரத்தில் அமெரிக்கா சக்திவாய்ந்த போர்க்கப்பல் ஒன்ற ஜே.விபி அங்கம் வகிக்கும் அரசாங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா இலங்கையில் படைத்தளம் அமைப்பதற்கு இதே அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது.அந்த ஜே.வி.பியும் தாங்களும் கொள்கையளவில் ஒன்று என்று சொல்லியிருக்கிறார் வரதராஜன்.

தனித் தமிழீழம் கோரும் போராளிகள் மட்டுமே ஜே.வி.பியை இனவாதக் கட்சி என்று சொல்கிறார்களாம்.பொதுவாக இலங்கைத் தமிழர்கள் அவ்வாறு பார்ப்பதில்லையாம்.இதை இவருக்கு யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.ஒட்டுமொத்த இல்ங்கைத் தமிழ் மக்களையும்நாடிபிடித்துப் பார்த்தது மாதிரியல்லவா இருக்கிறது இவர் கூற்று.

சர்வதேச பிரச்சினைகளில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நிலை எடுக்கக்கூடிய கட்சிகள் மற்றும் மூன்றாவது உலக நாடுகளிடையே இறையாண்மையை பாதுகாக்க போராடும் கட்சிகள் என்ற அடிப்படியிலேதான் தாம் சர்வதேச மட்டத்தில் ஏனைய கம்யூனிஸ நிலைப்பாடு எடுக்கக்கூடிய கட்சிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் இவர் கூறியது இரண்டுநாள் முந்திவந்துவிட்ட முட்டாள் தின நகைச்சுவை.

இவர்கள் சர்வதேச அளவில் தங்கள் நடவடிக்கைகளை விரிவாக்குவதை விட்டு இந்தியாவில் நிகழும் சாதிக்கொடுமைகளை ஒழித்தல்,அனைவருக்கும் கல்வியறிவு புகட்டுதல்,கிராமங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் போன்ற உள்ளூர் உதவித்திட்டங்களை செய்யலாமே.

நன்றி - ஈழநாதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 04-01-2005, 02:33 PM
[No subject] - by Mathan - 04-01-2005, 11:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)