![]() |
|
ஜேவிபி இனவாத கட்சி அல்ல? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஜேவிபி இனவாத கட்சி அல்ல? (/showthread.php?tid=4613) |
ஜேவிபி இனவாத கட்சி அல்ல? - Mathan - 03-31-2005 [b]<span style='font-size:23pt;line-height:100%'>இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தை படித்து பாருங்கள்</span> :twisted: 'ஜேவிபியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பேரினவாதக் கட்சியாக பார்க்கவில்லை'- மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினர் வரதராஜன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தேசிய மட்ட மாநாடுகளுக்கு இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியாக கருதப்படும் ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி) அழைக்கப்பட்டிருப்பது இரு நாட்டு அரசியல் வட்டாரங்களில் முக்கியமான விவகாரமாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாடுகளுக்கு தற்போதே முதல் தடவையாக ஜேவிபி அழைக்கப்பட்டுள்ள போதிலும், ஜேவிபியுடன் இந்த இரண்டு இடதுசாரிக் கட்சிகளுக்கும் நீண்ட காலமாகவே நட்பு ரீதியான தொடர்பு இருப்பதாகவும், இலங்கையின் நிலைமையிலே ஜேவிபியை தாம் ஒரு இடதுசாரிக் கட்சியாக கருதுவதானாலேயே அதனுடன் நெருக்கமான தொடர்பை தொடர்ந்து வைத்திருக்க விரும்புவதாகவும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான டபிள்யூ. ஆர். வரதராஜன் கூறியுள்ளார். இலங்கையில் ஜேவிபியினரின் ஊர்வலம் ஒன்று ஜேவிபியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை வைத்து அவர்களை ஒரு நேச சக்தியாக தாம் பார்ப்பதாகவும் அவர் குறிபிட்டார். [b]<span style='color:red'>ஜேவிபியை ஒரு சிங்கள இனவாத அமைப்பாக தனித் தமிழீழம் கோரும் அமைப்புகளே பார்க்கின்றன என்றும், ஆனால் பொதுவாக இலங்கைத் தமிழர்களின் விமர்சனம் அதுவல்ல என்றும் வரதராஜன் கூறினார். ஒரு பேரினவாத அமைப்பாக தாம் ஜேவிபியை பார்க்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சியின் கீழேயே தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜேவிபி வலியுறுத்தி வருவது உங்களுக்கு தவறாகப் படவில்லையா என்று கேட்டதற்கு பதிலளித்த வரதராஜன் அவர்கள், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி பெற்ற தமிழ் பகுதிகள் என்ற அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக இருப்பதாகவும், ஜேவிபியின் இது தொடர்பான நிலைப்பாடு இறுதியானது அல்ல என்பதே தமது கருத்து என்றும், அது தொடர்பில் ஜேவிபியை சாதகமான நிலைப்பாட்டை எடுக்க வைப்பதில் தாம் வெற்றி பெறுவோம் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார். சர்வதேச பிரச்சினைகளில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நிலை எடுக்கக்கூடிய கட்சிகள் மற்றும் மூன்றாவது உலக நாடுகளிடையே இறையாண்மையை பாதுகாக்க போராடும் கட்சிகள் என்ற அடிப்படியிலேதான் தாம் சர்வதேச மட்டத்தில் ஏனைய கம்யூனிஸ நிலைப்பாடு எடுக்கக்கூடிய கட்சிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் தாம் பெரிய அளவில் தலையிடுவதில்லை என்றும் வரதராஜன் கூறினார். ஜேவிபியின் நிலைப்பாட்டை தான் நியாயப்படுத்த விரும்பாத போதிலும், அங்கு பல சந்தர்ப்பங்களில் ஜேவிபி எடுக்கும் நிலைப்பாடு என்பது விடுதலைப் புலிகள் எடுக்கும் நிலைப்பாட்டின் எதிரொலியாக அமைந்துவிடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.</span> BBC Tamil News - Mathuran - 04-01-2005 என்னதான் இருந்தாலும் இந்திய கம்முனிஸ்ட் கட்சியும் இந்திய கட்சிதானே. அவர்களும் தங்களின் சுயலாபம் கருதி செயல்படுல்கின்றார்கள் போலும். ஒரு மனித இனம் தனது சுயநிர்ண்யத்தினை தீர்மனிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை என்று சொல்லும் ஜே வி பி யினருக்கு வக்காலத்து வாங்கும் வரதராஜன் போன்றோர். தமிழ் மக்கள் சிங்களப்படையால் கொன்று குவிக்கப் பட்ட பொழுது எந்த மார்சின் தத்துவங்களை புரிந்து கொண்டு மௌனமாக இருந்தார்கள். கர்ல் மர்க்ச்சின் சிந்தனையை சரியாக புரிந்து கொண்ட எவரும், ஈழத்தமிழர்கள் தங்களைத்தாங்கள் ஆழ்வதையோ, இல்லை பிரிந்து சென்று தனி அரசை அமைப்பதனையோ எதிர்க்கமாட்டார்கள். வரதராஜன் போன்றோர் எதனை பேசிட முயல்கின்றனரோ புரியவில்லை. - Mathan - 04-01-2005 'ஜேவிபியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பேரினவாதக் கட்சியாக பார்க்கவில்லை 'ஜேவிபியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பேரினவாதக் கட்சியாக பார்க்கவில்லை' என்று பிபிசிக்கு நேர்காணல் வழங்கியிருக்கிறார் இந்தியமார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினர் வரதராஜன் நான் உங்களையே மார்க்சியக் கட்சியாகப் பார்க்கவில்லை என்பதையே அவருக்குப் பதிலாகக் கூற விரும்புகிறேன். மார்க்சின் போதனைகள்,பொதுவுடமைத் தத்துவம் என்பவற்றில் எனக்குப் பிடிப்பும் நம்பிக்கையும் உண்டு.அவற்றைக் கேள்விக்குறியாக்கும் வகையில் வரதராஜன் போன்றவர்கள் இன்னமும் சிவப்புச் சாயம் பூசிய கொடிகளில் தொங்கிக்கொண்டு ஏனையவர்கள் ஏளனஞ் செய்யும் அளவுக்கு மார்க்சியம் என்ற சொல்லையே மாற்றி வருவது தாங்கவொண்ணா எரிச்சலை ஏற்படுத்துகிறது இந்தியாதான் என்றில்லை.வட தென் இலங்கையில் இயங்கிய பொதுவுடமைக் கட்சிகள்,தென்னிந்திய பொதுவுடமைக் கட்சிகள் எவையுமே குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பின்னர் கம்யூனிசம் என்பதைக் கருத்தளவிலேயே கொண்டிருந்திருக்கிறார்கள். இலங்கையில் லங்கா சமசமாஜக் கட்சியும் தோழமைக் கட்சிகளும் இலங்கை இனப்பிரச்சனை தோட்டத் தொழிலாளர் பிரச்சனை,மொழிப்பிரச்சனை போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் திடமான நிலைப்பாடு ஒன்றைக் கொண்டிருந்ததுபோல் வட இலங்கையில் இருந்து இயங்கிய பொதுவுடமைக் கட்சி திட்டமான கொள்கை எதையும் கொண்டிருக்கவில்லை.இந்தியாவிலும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்திலும் இதே நிலையே காணப்படுவதாகத் தெரிகிறது.இலங்கை இனப்பிரச்சனை பற்றி என்றுதான் இல்லை உள்ளூர் விவகாரங்களிலேயே தமிழகப் பொதுவுடமைக் கட்சிகள் திடமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறுவது புரிகிறது.தங்கள் நிலை என்ன என்பதை தெளிவாக வலியுறுத்தாமல் அவ்வப்போது அறிக்கைகளுடன் ஓய்ந்து போய்விடுகிறது அவர்களது அரசியல். அந்த அறிக்கைகளில் ஒன்றாகவும் அரசியல் சுயாலாபத்துக்கு மட்டுமேயானதுமாகவே வரதாரஜனின் இந்தக் கருத்தை நான் பார்க்கிறேன். மாணவர் மத்தியிலும் தொழிற்சங்களிலும் உருவான போது மட்டுமே ஜே.வி.பி பொதுவுடமைக் கட்சியாக இருந்திருக்கிறது.எப்போது அரசியலில் ஈடுபட ஆரம்பித்ததோ அன்றே முதலாளித்துவக் கட்சிகளைவிட மோசமான பாசிசக் கட்சியாக மாறிவிட்டது.தனிச்சிங்கள இலங்கை சிங்கள பௌத்தைலங்கையர் என்னும் அவர்களது கொள்கை இனவாதமல்லாது பொதுவுடமைவாதமென்று வரதராஜன் நிறுவ முயல்கிறார். அப்பாவி அரசாங்க ஊழியர்களையும் அரசியல்வாதிகளையும் வெட்டிப் பொதி செய்து அவர்கள் வீட்டுக்கே அனுப்பியது போன்று ஜே.வி.பி பண்ணிய அரஜாகங்களை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.இவர்களை அடக்குவதாகக் கூறிக்கொண்டு சிறிமா தலைமையிலான அரசாங்கம் 60000 சிங்கள இளைஞர்களை உயிரோடும் கொலைசெய்தும் வீதிகளில் ரயர் போட்டு எரித்ததையும் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். இதே ஜே.விபிதான் இலங்கை அரசாங்கத்தில் பங்காளியாகவும் இருக்கிறது.பொதுமக்கள் ஐக்கிய முண்ணனி நாடறிந்த முதலாளித்துவக் கட்சி அவர்களுடன் கைகோர்த்தியங்கும் ஒரு கட்சியை இன்னமும் மார்க்சியக் கட்சி என்ற வரையறைக்குள் வரதராஜன் அடக்கி வைத்திருப்பது.மார்க்சியம் பற்றி அவருக்குள்ள புரிதல் எவ்வளவு என்பதை வெளிக்காட்டுகின்றது. அண்மையில் ஜே.வி.பி மிகுந்த பரிகாசத்துக்கிடமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அமெரிக்கா கியூபாவுக்கு எதிராகப் பிரகடனம் செய்த பொருளாதாரத் தடையை தாங்கள் எதிர்க்கிறோமாம்.ஜேவி.பி இதை சொல்லிய அதேவாரத்தில் அமெரிக்கா சக்திவாய்ந்த போர்க்கப்பல் ஒன்ற ஜே.விபி அங்கம் வகிக்கும் அரசாங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா இலங்கையில் படைத்தளம் அமைப்பதற்கு இதே அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது.அந்த ஜே.வி.பியும் தாங்களும் கொள்கையளவில் ஒன்று என்று சொல்லியிருக்கிறார் வரதராஜன். தனித் தமிழீழம் கோரும் போராளிகள் மட்டுமே ஜே.வி.பியை இனவாதக் கட்சி என்று சொல்கிறார்களாம்.பொதுவாக இலங்கைத் தமிழர்கள் அவ்வாறு பார்ப்பதில்லையாம்.இதை இவருக்கு யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.ஒட்டுமொத்த இல்ங்கைத் தமிழ் மக்களையும்நாடிபிடித்துப் பார்த்தது மாதிரியல்லவா இருக்கிறது இவர் கூற்று. சர்வதேச பிரச்சினைகளில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நிலை எடுக்கக்கூடிய கட்சிகள் மற்றும் மூன்றாவது உலக நாடுகளிடையே இறையாண்மையை பாதுகாக்க போராடும் கட்சிகள் என்ற அடிப்படியிலேதான் தாம் சர்வதேச மட்டத்தில் ஏனைய கம்யூனிஸ நிலைப்பாடு எடுக்கக்கூடிய கட்சிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் இவர் கூறியது இரண்டுநாள் முந்திவந்துவிட்ட முட்டாள் தின நகைச்சுவை. இவர்கள் சர்வதேச அளவில் தங்கள் நடவடிக்கைகளை விரிவாக்குவதை விட்டு இந்தியாவில் நிகழும் சாதிக்கொடுமைகளை ஒழித்தல்,அனைவருக்கும் கல்வியறிவு புகட்டுதல்,கிராமங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் போன்ற உள்ளூர் உதவித்திட்டங்களை செய்யலாமே. நன்றி - ஈழநாதன் |