Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சீஸ் சாப்பிடுவது எப்படி?
#8
சீஸ் சாப்பிடுவதில் ஒரு வகை உருக்கல். சீஸ் பொண்டூ (fondue) இதற்கு ஒரு உதாரணம். மேசை நடுவில் ஒரு அடுப்பை வைத்து அதன் மேல் ஒரு பாத்திரத்தில் சீஸை வைன் கலந்து உருக்குவார்கள். எல்லோருக்கும் ஒரு கோப்பையில் பாண் துண்டுகள் தரப்படுவன. ஒரூ நீளமான் முள்ளுக்கரண்டியால் பாண் துண்டொன்றைக் குத்தி உருகிய சீஸில் புரட்டி எடுத்துச் சாப்பிட வேண்டும். பாணுக்குப் பதிலாக மரக்கறி அல்லது இறைச்சித் துண்டுகளும் சாப்பிடலாம். துண்டு தவறி சீஸுக்குள் விழுந்து விட்டால், விழுத்தியவரை அப்படியே தூக்கிக் குளத்துக்குள் வீச வேண்டும் என்பார்கள். பெல்ஜியத்தில் சீஸுக்குப் பதிலாக சொக்கிளற் உபயோகிப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

இன்னொரு உதாரணம் ரக்ளெற் (raclette). பாரம்பரிய ரக்ளெற் செய்வதை நேரில் பார்க்கக் கிடைத்ததில்லை: ஒரு பெரிய சீஸ் தட்டை நெருப்புக்குமேல் சுழற்றி உருகத் தொடங்கியதும் சீவல் சீவலாக வழித்தெடுத்து வேறு உணவுகளின் மேல் போட்டுச் சாப்பிடுவார்களாம். நவீன ரக்ளெற் உபகரணம் மேசை நடுவே வைக்கப்ப்டும் மின்சாரத்தால் சூடாக்கப்படுகிற hotplate போன்ற கருவி. ஒவ்வொருவரும் ஒரு தட்டையான ப்ளாஸ்டிக் 'அகப்பை'யில் கொஞ்ச உணவுத்துண்டுகளையும் (மரக்கறி, கடலுணவு, இறைச்சி) வைத்து ஒன்றிரண்டு சீஸ் துண்டுகளையும் வைத்து அந்தச் சுடுதட்டில் வைத்துச் சூடாக்குவார்கள். சீஸ் உருகியதும் அதை எடுத்து அவித்த உருளைக்கிழங்கோடு சாப்பிடலாம். நவீன ரக்ளெற்றில் ஒரு நல்ல அம்சம் என்னவென்றால் விருந்தினர் வந்தால் அதிகம் முன்வேலை இல்லாமல் விருந்து படைக்கலாம். (அந்த உருகிய சீஸை கழுவித் துப்புரவாக்குவதில் உள்ள பின் வேலை வேறு கதை!)

சீஸ் உருக்கிச் சாப்பிடும் போது வைன் அல்லது வெறும் தேநீர் அருந்த வேண்டுமென்பார்கள். இல்லாவிட்டல் வயிறு பிசகு செய்யுமாம்.

எல்லா வகையான சீஸ்களும் உருக்குவதற்குப் பொருந்தா. அனேகமான ் பலசரக்குச் சந்தைகளில் fondue ்மற்றும் raclette சீஸ் கலவைகள் வேறாக விற்பனைக்கிருப்பன.

உருக்கிய சீஸ் (பொதுவாக எந்த சீஸுமே) ஒரு acquired taste ("அனுபவத்தில் வளரும் ரசனை"?).
Reply


Messages In This Thread
[No subject] - by shobana - 04-01-2005, 08:38 AM
[No subject] - by shiyam - 04-01-2005, 01:29 PM
[No subject] - by Mathan - 04-01-2005, 04:39 PM
[No subject] - by sinnappu - 04-01-2005, 05:13 PM
[No subject] - by sinnappu - 04-01-2005, 05:20 PM
[No subject] - by Mathan - 04-01-2005, 07:22 PM
[No subject] - by அசோகன் - 04-01-2005, 09:40 PM
[No subject] - by sinnappu - 04-02-2005, 12:46 AM
[No subject] - by Mathan - 04-02-2005, 01:39 AM
[No subject] - by Mathan - 04-02-2005, 01:46 AM
[No subject] - by sinnappu - 04-02-2005, 02:06 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)