Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிவாரணங்களை தமிழர்களுக்கு அளிக்காததும் மனித உரிமை மீறலே
#3
<b>ஈழத்தமிழரின் இன்னல் நிலையை நேரடியாக அறிந்துவர விசேட குழுவை அனுப்பக்கோரி ஐ.நா. சபையில் முழக்கம்</b>

ஜ சுவிஸ் நிருபர் ஸ ஜ வெள்ளிக்கிழமை 01 ஏப்பிரல் 2005 6:59 ஈழம்

ஆழிப்பேரலையால் பாதிக்ப்பட்ட ஈழத்தமிழர்கள் சொல்லொணா துயரங்களுக்கு முகம்கொடுத்து வருகின்னறனர். ஆனால் அவற்றை சிறீலங்கா அரசு கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அவர்களின் நிலையை நேரடியாக காணச்சென்ற ஐ.நா. செயலாளர் நாயகத்தையும் தமிழர் பகுதிகளுக்கு அரசு அனுமதிக்கவில்லை.

ஆகவே ஐக்கிய நாடுசபை தனது விசேட குழுவை சிறீலங்காவுக்கு அனுப்பி அங்கு ஈழத்தமிழர் படும் துயரை அறிந்து அதற்கு நிவாரணமளிக்க வேண்டும்.

தற்பொழுது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் 61 ஆவது கூட்டத்தொடரில் 'சர்வதேச ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்" சார்பில் உரையாற்றிய திருமதி. டீயேற்றி மக்கோனால் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் அங்கு ஆற்றிய உரையில் மேலும் கூறியதாவது:

இலங்கைத்தீவில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்மக்களுடைய அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் மறுக்கப்பட்டு வருகின்றது. 1948 ஆம் ஆண்டு தொடக்கம் மொழிää கல்வி நிலம் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் சட்ட ரீதியாகவே மறுக்கப்பட்டுள்ளது.

நீதி சமத்துவத்திற்கான தமிழ்மக்களுடைய சாத்வீகப் போராட்டங்களை 1956 ஆம் ஆண்டு முதல் அரச வன்முறையினால் பல இனக்கலவரங்கள் மூலம் அடக்கமுற்பட்ட காரணத்தினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்படியான அரச வன்முறைகள் இறுதியில் தமிழ்மக்களை ஆயுதப் போராட்டத்திற்கு இட்டுச்சென்றன.

கடந்த இருபது வருடகால யுத்தத்தினால் 79,000 இற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கொல்லப்பட்டும், காணாமலும் போயுமுள்ளனர். ஐந்து லட்சத்திற்கு மேற்பட்டோர் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியும்ää 2,375 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும், சைவக்கோயில்களும் இலங்கைத்தீவின் தமிழர்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கில் விமானக் குண்டுவீச்சினாலும், செல் தாக்குதல்களினாலும் அழிக்கப்பட்டுள்ளன.

கொலையும் பாலியல் வன்முறையும் சிறீலங்கா பாதுகாப்புப் படைகளினால் ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட காரணத்தால், ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பலவிதங்களில் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்கொடூரச் செயல்களைக் கண்டித்து பல மனித உரிமை அமைப்புக்கள் குரல் கொடுத்தபோதும் சிறீலங்காவின் பாதுகாப்புப் படைகள் அரச மன்னிப்புடன் எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தப்படாது, தொடர்ந்தும் கொடூரப் படையாக செயற்படுகின்றனர்.

கடந்த மூன்று வருடகாலமாக தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையில் நடைமுறையில் இருந்துவரும் யுத்த நிறுத்தம், இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு தவிர்ந்த மற்றைய ஏழு மாகாணங்களுக்கு மட்டுமே பல நன்மைகளை கொடுத்துள்ளது.

யுத்தநிறுத்த உடன்படிக்கையில் உள்ள சரத்துகளுக்கு எதிராக செயற்படும் அரசபடைகள், தமிழ்மக்களை பல விதங்களில் கொடுமைப்படுத்தி வருகின்றன.

பாதுகாப்புப் படையினர் தேவாலயங்கள், கோயில்கள் பலவற்றிலிருந்து தமது முகாம்களை விலக்கிக் கொண்டபோதும், இன்னும் பல இடங்களில் நிலை கொண்டுள்ளனர். அத்துடன் பாதுகாப்பு வலயம் என்று கூறி, போரினால் இடம்பெயர்ந்த மக்களை, இன்று பல வருடங்களாகியும் மீளச்சென்று தமது வீடுகளில் வசிக்க அனுமதிக்கவில்லை.

வடக்கு கிழக்கில் வாழும் மக்கள், இப் 'பாதுகாப்பு வலயங்கள்" யாருக்கு என வினவுகின்றனர். இவையாவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட வலயங்கள் என்பதே உண்மை.

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் அரசாங்கம் மூன்று வருடங்களுக்கு முன்னரே அரச தமிழ் கூலிப்படைகளை கலைத்திருக்க வேண்டியது கட்டாயம். ஆனால் இக்கூலிப்படைகள் இன்றும் அரச ஆதரவுடன் கிழக்கில் பல அரசியல் கொலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வடக்கு கிழக்கு வாழ் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையால் வடக்கு கிழக்கே பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இப்பிரதேசங்களில் 24,500 இற்கு மேற்பட்டோர் இறந்தும் 10,000 இற்கு மேற்பட்டோர் காணாமல் போயும், ஏறக்குறைய ஏழு லட்சம் பேர் இடம்பெயர்ந்தும் உள்ளனர். இவர்களது 120,000 இற்கு மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன.

ஆனால் கடற்கொந்தளிப்பின் அனர்த்தங்களை பார்வையிட இலங்கைத்தீவிற்கு சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களையே வடக்கு கிழக்கிற்கு செல்லவிடாது சிறீலங்கா அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் உரிமைப்பத்திரத்தின் 100 ஆவது சரத்து, சிறீலங்கா அரசினால் மீறப்பட்டுள்ளது.

ஆகையால் இந்த 61 ஆவது கூட்டத்தொடர் உடனடியாக ஓர் குழுவை சிறீலங்காவிற்கு அனுப்பிவைத்து அங்குள்ள உண்மை நிலைகளை அறிந்து அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடன் நிவாரணம் வழங்க முன்வரவேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்" - என்று அவர் கூறினார்.

திருமதி. டீயேற்றி மக்கோனால் தமிழர் மனிதர் உரிமை மையத்தின் சர்வதேச இயக்குனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி புதினம்
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 04-01-2005, 02:28 PM
[No subject] - by hari - 04-01-2005, 03:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)