![]() |
|
நிவாரணங்களை தமிழர்களுக்கு அளிக்காததும் மனித உரிமை மீறலே - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நிவாரணங்களை தமிழர்களுக்கு அளிக்காததும் மனித உரிமை மீறலே (/showthread.php?tid=4598) |
நிவாரணங்களை தமிழர்களுக்கு அளிக்காததும் மனித உரிமை மீறலே - AJeevan - 04-01-2005 <b>சர்வதேச ஆழிப்பேரலை நிவாரணங்களை தமிழர்களுக்கு அளிக்காததும் மனித உரிமை மீறலே: சிறீலங்கா மீது ஐ.நா.வில் புகார்</b> இலங்கைத் தீவகத்தில் தமிழர் தாயகப் பகுதியில் சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஆழிப்பேரலையால் தமிழர் தாயகப் பாதிப்பு விவரங்கள் குறித்தும் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிடம் தமிழர் உரிமை மையம் முறையீட்டு மனுவை அளித்துள்ளது. ஜெனிவாவில் கடந்த மார்ச்; 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 61 ஆவது கூட்டத் தொடரின் தலைவரான இந்தோனேசிய நாட்டின் ஐ.நா தூதுவர் திரு. மக்கரிம் விப்பிசோனிடம் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச்;செயளார் ச. வி. கிருபாகரன் இந்த முறையீட்டு மனுவை அளித்தார். பிரான்சில் தலைமையகத்தைக் கொண்டு தமிழர் மனித உரிமைகள் மையம் இயங்கி வருகிறது. ஐ.நா. மனித உரிமைக் குழுவிடம் தமிழர் மனித உரிமைகள் மையம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் போர்நிறுத்த உடன்படிக்கை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று வருடங்களாகியும் இன்னும் அங்கு எந்தவித சுமுகமான நிலையும் உருவாகவில்லை. போர்நிறுத்த உடன்படிக்கையில் கூறப்பட்டது போல் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்ப முடியவில்லை. இராணுவம் தொடர்ந்தும் மக்களை துன்புறுத்துவதுடன் பாதுகாப்பு வலயம் என்று கூறி தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் மக்கள் குடியிருப்புக்கள் அடங்கிய பல பெரிய பிரதேசங்கள் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் போர்க்காலத்தில் இருந்த இராணுவத்தினரை விட பல மடங்கு இராணுவத்தினர் தற்பொழுது உள்ளார்கள். கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்புää அம்பாறை பிரதேசங்களில் இராணுவத்தின் உதவியுடன் அவர்களுடன் சேர்ந்தியங்கும் கூலிப்படைகளினால் அரசியல் படுகொலைகள் தொடர்கின்றன. அண்மையில் ஏற்பட்ட ஆழிப்பேரலை மக்களின் வாழ்க்கையை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. ஆழிப்பேரலை துயரங்கள் ஓர் மனித உரிமை மீறல் சம்பவம் இல்லாவிடிலும் சிறீலங்கா அரசு இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித மனிதாபிமான உதவியும் செய்யாத காரணத்தால் இது ஒரு மனித உரிமை மீறலாக மாறியுள்ளது. தொடர்ந்து சர்வதேச சமூகத்தினால் கொடுக்கப்பட்ட எந்தவித நிவாரணங்களோ நிதி உதவிகளோ வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை கிடைக்கப்பெறவில்லை. இலங்கைத்தீவில் ஆழிப்பேரலையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் வடக்கு கிழக்கில் உள்ள அம்பாறை மட்டக்களப்பு முல்லைத்தீவு மாவட்டங்களேயாகும். இம் மாவட்டங்களில் உடனடி மீட்பு வேலைகளை தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் இணைந்து செய்தனர். இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் வேறு சில அரசசார்பற்ற நிறுவனங்களினாலுமே நிவாரணங்கள் கொடுக்கப்படுகிறது. சிறிலங்கா அரசு உண்மைக்குப்புறம்பான தகவல்களுடன் சர்வதேச பிரச்;சாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஐ.நா செயலாளர் நாயகம் அவர்கள் ஆழிப்பேரலை பாதிப்புக்களை நேரில் பார்வையிட சிறீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த பொழுது சிறீலங்கா அரசு கோபி அனானை வடக்கு கிழக்கிற்கு செல்லவிடாது தடுத்து நிறுத்தியிருந்தது. சிறீலங்கா அரசின் இச்; செயற்பாடு ஐ.நா சபையின் அதிகாரப்பத்திரத்தின் சாரம் 100ஐ மீறிச் செயற்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரிய விடயம். கோபி அனானைத் தொடர்ந்து சிறிலங்கா வந்த பல நாட்டுத் தலைவர்களையும் வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்யவிடாது சிறீலங்கா அரசு தடுத்து நிறுத்தியுள்ளது ஓர் மனிதாபிமானமற்ற செயலாகும். இதேவேளை சிறீலங்கா அரசு பெரும்தொகையான பணத்தைச்; செலவழித்து ஆயுதங்களை கொள்வனவு செய்து போருக்குத் தன்னை தயார் செய்கிறது. இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் மீதான அனுதாபம் சர்வதேச சமூகத்திற்கு இருந்தபோதும் அதை வெளிப்படையாக காட்டத் தயங்குவது மிகவும் கவலை தரும் விடயம். இதனாலேயே சிறீலங்கா அரசினால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வருகிறார்கள். இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தொடரினால்ää இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் ஏனைய மக்களைப்போல் சமனாக நடத்தப்படவேண்டும் என்று ஓர் கண்டனம் கொண்டுவருமாறு உங்களைக் கேட்டுக்கொள்ளும் அதேவேளை சர்வதேச சமூகத்திடம் நிவாரண உதவிகளை வடக்கு கிழக்கு மக்களுக்கு நேரடியாக அனுப்பிவைக்க வேண்டிக்கொள்ளுமாறும் வேண்டுகிறோம். இத்துடன் அறிக்கைகளும்ää அட்டவணைகளும் ஒப்பீடுகளும் உங்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. - hari - 04-01-2005 நன்றி அண்ணா - hari - 04-01-2005 <b>ஈழத்தமிழரின் இன்னல் நிலையை நேரடியாக அறிந்துவர விசேட குழுவை அனுப்பக்கோரி ஐ.நா. சபையில் முழக்கம்</b> ஜ சுவிஸ் நிருபர் ஸ ஜ வெள்ளிக்கிழமை 01 ஏப்பிரல் 2005 6:59 ஈழம் ஆழிப்பேரலையால் பாதிக்ப்பட்ட ஈழத்தமிழர்கள் சொல்லொணா துயரங்களுக்கு முகம்கொடுத்து வருகின்னறனர். ஆனால் அவற்றை சிறீலங்கா அரசு கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அவர்களின் நிலையை நேரடியாக காணச்சென்ற ஐ.நா. செயலாளர் நாயகத்தையும் தமிழர் பகுதிகளுக்கு அரசு அனுமதிக்கவில்லை. ஆகவே ஐக்கிய நாடுசபை தனது விசேட குழுவை சிறீலங்காவுக்கு அனுப்பி அங்கு ஈழத்தமிழர் படும் துயரை அறிந்து அதற்கு நிவாரணமளிக்க வேண்டும். தற்பொழுது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் 61 ஆவது கூட்டத்தொடரில் 'சர்வதேச ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்" சார்பில் உரையாற்றிய திருமதி. டீயேற்றி மக்கோனால் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அங்கு ஆற்றிய உரையில் மேலும் கூறியதாவது: இலங்கைத்தீவில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்மக்களுடைய அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் மறுக்கப்பட்டு வருகின்றது. 1948 ஆம் ஆண்டு தொடக்கம் மொழிää கல்வி நிலம் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் சட்ட ரீதியாகவே மறுக்கப்பட்டுள்ளது. நீதி சமத்துவத்திற்கான தமிழ்மக்களுடைய சாத்வீகப் போராட்டங்களை 1956 ஆம் ஆண்டு முதல் அரச வன்முறையினால் பல இனக்கலவரங்கள் மூலம் அடக்கமுற்பட்ட காரணத்தினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்படியான அரச வன்முறைகள் இறுதியில் தமிழ்மக்களை ஆயுதப் போராட்டத்திற்கு இட்டுச்சென்றன. கடந்த இருபது வருடகால யுத்தத்தினால் 79,000 இற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கொல்லப்பட்டும், காணாமலும் போயுமுள்ளனர். ஐந்து லட்சத்திற்கு மேற்பட்டோர் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியும்ää 2,375 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும், சைவக்கோயில்களும் இலங்கைத்தீவின் தமிழர்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கில் விமானக் குண்டுவீச்சினாலும், செல் தாக்குதல்களினாலும் அழிக்கப்பட்டுள்ளன. கொலையும் பாலியல் வன்முறையும் சிறீலங்கா பாதுகாப்புப் படைகளினால் ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட காரணத்தால், ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பலவிதங்களில் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கொடூரச் செயல்களைக் கண்டித்து பல மனித உரிமை அமைப்புக்கள் குரல் கொடுத்தபோதும் சிறீலங்காவின் பாதுகாப்புப் படைகள் அரச மன்னிப்புடன் எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தப்படாது, தொடர்ந்தும் கொடூரப் படையாக செயற்படுகின்றனர். கடந்த மூன்று வருடகாலமாக தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையில் நடைமுறையில் இருந்துவரும் யுத்த நிறுத்தம், இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு தவிர்ந்த மற்றைய ஏழு மாகாணங்களுக்கு மட்டுமே பல நன்மைகளை கொடுத்துள்ளது. யுத்தநிறுத்த உடன்படிக்கையில் உள்ள சரத்துகளுக்கு எதிராக செயற்படும் அரசபடைகள், தமிழ்மக்களை பல விதங்களில் கொடுமைப்படுத்தி வருகின்றன. பாதுகாப்புப் படையினர் தேவாலயங்கள், கோயில்கள் பலவற்றிலிருந்து தமது முகாம்களை விலக்கிக் கொண்டபோதும், இன்னும் பல இடங்களில் நிலை கொண்டுள்ளனர். அத்துடன் பாதுகாப்பு வலயம் என்று கூறி, போரினால் இடம்பெயர்ந்த மக்களை, இன்று பல வருடங்களாகியும் மீளச்சென்று தமது வீடுகளில் வசிக்க அனுமதிக்கவில்லை. வடக்கு கிழக்கில் வாழும் மக்கள், இப் 'பாதுகாப்பு வலயங்கள்" யாருக்கு என வினவுகின்றனர். இவையாவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட வலயங்கள் என்பதே உண்மை. யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் அரசாங்கம் மூன்று வருடங்களுக்கு முன்னரே அரச தமிழ் கூலிப்படைகளை கலைத்திருக்க வேண்டியது கட்டாயம். ஆனால் இக்கூலிப்படைகள் இன்றும் அரச ஆதரவுடன் கிழக்கில் பல அரசியல் கொலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வடக்கு கிழக்கு வாழ் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையால் வடக்கு கிழக்கே பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இப்பிரதேசங்களில் 24,500 இற்கு மேற்பட்டோர் இறந்தும் 10,000 இற்கு மேற்பட்டோர் காணாமல் போயும், ஏறக்குறைய ஏழு லட்சம் பேர் இடம்பெயர்ந்தும் உள்ளனர். இவர்களது 120,000 இற்கு மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன. ஆனால் கடற்கொந்தளிப்பின் அனர்த்தங்களை பார்வையிட இலங்கைத்தீவிற்கு சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களையே வடக்கு கிழக்கிற்கு செல்லவிடாது சிறீலங்கா அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் உரிமைப்பத்திரத்தின் 100 ஆவது சரத்து, சிறீலங்கா அரசினால் மீறப்பட்டுள்ளது. ஆகையால் இந்த 61 ஆவது கூட்டத்தொடர் உடனடியாக ஓர் குழுவை சிறீலங்காவிற்கு அனுப்பிவைத்து அங்குள்ள உண்மை நிலைகளை அறிந்து அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடன் நிவாரணம் வழங்க முன்வரவேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்" - என்று அவர் கூறினார். திருமதி. டீயேற்றி மக்கோனால் தமிழர் மனிதர் உரிமை மையத்தின் சர்வதேச இயக்குனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நன்றி புதினம் |