04-01-2005, 02:33 PM
என்னதான் இருந்தாலும் இந்திய கம்முனிஸ்ட் கட்சியும் இந்திய கட்சிதானே. அவர்களும் தங்களின் சுயலாபம் கருதி செயல்படுல்கின்றார்கள் போலும். ஒரு மனித இனம் தனது சுயநிர்ண்யத்தினை தீர்மனிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை என்று சொல்லும் ஜே வி பி யினருக்கு வக்காலத்து வாங்கும் வரதராஜன் போன்றோர். தமிழ் மக்கள் சிங்களப்படையால் கொன்று குவிக்கப் பட்ட பொழுது எந்த மார்சின் தத்துவங்களை புரிந்து கொண்டு மௌனமாக இருந்தார்கள். கர்ல் மர்க்ச்சின் சிந்தனையை சரியாக புரிந்து கொண்ட எவரும், ஈழத்தமிழர்கள் தங்களைத்தாங்கள் ஆழ்வதையோ, இல்லை பிரிந்து சென்று தனி அரசை அமைப்பதனையோ எதிர்க்கமாட்டார்கள். வரதராஜன் போன்றோர் எதனை பேசிட முயல்கின்றனரோ புரியவில்லை.

