Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போப் ஜோன் போல் மரணமடைந்தார்
#1
84 வயதான பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருப்பதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுநீரில் கிருமி படர்ந்ததால் அவரது உடலில் காய்ச்சல் உருவாகியுள்ளதாகவும்ää ஏற்கனவே இரு தடவை அடுத்தடுத்து சத்திரசிகிச்சைக்குள்ளானதால் நோய்வாய்ப்பட்டிருந்த உடலில்ää இது அதிக உபாதைகளை உருவாக்கியுள்ளதாகவும் தெரிகிறது.

ரோமை நகரில் அமைந்துள்ள ஜெமினி மருத்துவ மனையில் சத்திரசிகிச்சைக்குள்ளான பாப்பரசர்ää தற்போது வத்திக்கான் கட்டடத்தில் ஓய்வுபெற்றுவரும் நிலையில்ää அவரது உடல்நிலையில் திடீர் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

கத்தோலிக்க மதத்தில்ää உயிருக்கு ஆபத்துள்ள நேரத்தில் வழங்கப்படும் தேவதிரவிய அனுமானமான அவஸ்தைபூசுதல்ää பாப்பரசருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவஸ்தை பூசுதல் வழங்கப்பட்டதால்ää மரணம் சம்பவிக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தப்படாது.

முன்னர் ஒருதடவைää பாப்பரசர் துப்பாக்கியால் சுடப்பட்டபோதும்ää 1981ம் ஆண்டு இந்தப் பாப்பரசருக்கு அவஸ்தைபூசுதல் வழங்கப்பட்டது.

26 வருடங்கள் பாப்பரசராக இருக்கும் இவர்ää உலக சமாதானத்திற்காகவும்ää ஐரோப்பாவின் எழுச்சிக்காகவும் மிகக் கடுமையாக உழைத்து வெற்றிபெற்ற ஒருவராகக் கருதப்படுபவர்.

வரலாற்றிலேயே மிக அதிகமான பயணங்களை மேற்கொண்ட ஒரு பாப்பரசராகவும்ää மிக அதிகமான மக்களைச் சந்தித்த ஒருவராகவும் இவர் விளங்குகிறார்.

போலந்து நாட்டில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த கரோல் வொஜ்ரைலா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர்ää மிகச் சிறந்த ஒரு மாணாக்கராக விளங்கியதுடன்ää பின்னர் மொத்தம் 11 மொழிகளில் அனாயாசமாகப் பேச எழுதத் தெரிந்த ஒருவராகவும்ää இன்னும் பல மொழிகளை ஓரளவு அறிந்து வைத்திருந்தவராகவும் விளங்கினார்.

1981ல் சூட்டுக் காயங்களுக்காக சத்திர சிகிச்சைக்கும்ää 1992ல் வயிற்றில் கட்டியொன்று இருந்ததால் சத்திரசிகிச்சைக்கும்ää 94ல் இடுப்பு மூட்டில் ஏற்பட்ட உபாதையால் சத்திரசிகிச்சைக்கும் உள்ளானபோதிலும்ää இறுதி மூச்சு இருக்கும்வரை தனது பணி தொடரும் என்று அறிவித்திருந்தார்.

பார்க்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்ட பாப்பரசர்ää இம்மாதம் 14ம் திகதியுடன்ää வரலாற்றில் அதிக காலம் பாப்பரசராகப் பணியாற்றிய மூன்றாவது பாப்பரசராக உருவானார்.

இவருக்கு மரணம் சம்பவிக்கும் பட்சத்தில்ää புதிய பாப்பரசரைத் தெரிவுசெய்யää உலகிலுள்ள அனைத்து கருதினால்களும் ரோமை நகரின் வத்திக்கான் சபையில் கூடிää விசேட வாக்கெடுப்பில் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: புதினம்
.
Reply


Messages In This Thread
போப் ஜோன் போல் மரணமடைந்தார் - by sompery - 04-01-2005, 12:12 PM
[No subject] - by Mathan - 04-01-2005, 11:06 PM
[No subject] - by Mathan - 04-01-2005, 11:09 PM
[No subject] - by Hariny - 04-02-2005, 01:26 AM
[No subject] - by AJeevan - 04-02-2005, 01:50 AM
[No subject] - by sinnappu - 04-02-2005, 02:14 AM
[No subject] - by Danklas - 04-02-2005, 11:16 PM
[No subject] - by Nitharsan - 04-02-2005, 11:18 PM
[No subject] - by சிலந்தி - 04-02-2005, 11:23 PM
[No subject] - by shanmuhi - 04-02-2005, 11:26 PM
[No subject] - by vasisutha - 04-02-2005, 11:41 PM
[No subject] - by Mathan - 04-02-2005, 11:55 PM
[No subject] - by AJeevan - 04-03-2005, 12:19 AM
[No subject] - by Vasampu - 04-03-2005, 01:47 AM
[No subject] - by KULAKADDAN - 04-03-2005, 02:05 AM
[No subject] - by seelan - 04-03-2005, 03:21 AM
[No subject] - by Malalai - 04-03-2005, 04:38 AM
[No subject] - by Mathan - 04-03-2005, 03:19 PM
[No subject] - by sinnappu - 04-03-2005, 04:11 PM
[No subject] - by kuruvikal - 04-03-2005, 04:33 PM
[No subject] - by Mathan - 04-05-2005, 01:31 AM
[No subject] - by ரோபட் - 04-06-2005, 12:03 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)