06-20-2003, 07:45 PM
அன்புடன் திரு மோகன் அவர்கட்கு,
வை.சி.கிருபானந்தன் என்னும் பெயரில் இன்னுமொருவர் இருப்பதாகவும் அவர் ஏற்கனவே களத்தில் பதிந்திருந்தவர் என்றும் கூறி, எனது உள் நுழைவை தடுத்துள்ளீர்கள்.இருக்கட்டும். எனக்கும் வை.சி. என்பது இனிசியல் தான்.கிருபராஜ் என்னும் நான் இந்தக்களத்திற்குள் வருவதற்காக பெயரை சுருக்கமாக வைத்துக்கொண்டேன்.என்னை இந்தக்களத்திற்கு அறிமுகப்படுத்தியது இங்கே கருத்தெழுதும் நண்பர் ஒருவர்தான். அது போக இந்தக்களத்தில் ஒவ்வொருவரும் புதிதாகத்தான் பதிந்துள்ளார்கள்.உங்கள் பக்கத்தில் என்ன நியாயம் இருக்கின்றதென்பது எனக்குப் புரியவில்லை.எனவே புனைப்பெயரோ சொந்தப்பெயரோ பதிந்துள்ள ஒருவரின் பெயரில் இன்னுமொருவர் உலகில் வாழ்வதற்கு யாரும் பலியில்லையே.இந்தக்களத்தில் பொழுதுபோக்கிற்காக எழுதத்தான் வந்தேன்.அதனை நீங்கள் இந்தமுறையில் தடுத்திருக்கத்தேவையில்லை.நான் தப்பாக நடந்திருந்தால் அல்லது அநாகரிகமாக நடந்திருந்தால் பரவாயில்லை.இன்னுமொருவர் நாளை வந்து நான் தான் மோகன் என்னுடைய பெயரில் நீங்கள் எழுதுகிறீர்களே என்று கேட்கும் போது உங்கள் பெயரையும் விட்டுக்கொடுப்பீர்களா என்று தெரியவில்லை.தவிரவும் இங்கு கருத்தெழுத இதுவரை வருகை தராத நீங்கள் குறிப்பிடும் நபர் இப்போது எப்படி அறிந்து கொண்டார்?
எதற்கும் சம்பந்தமில்லாத பெண்களின் பெயரில் அவர் தான் எழுதுகிறார் என்பதை ஒத்துக்கொள்வாரா?
அவருக்கு பெயர் வேறு என்றால் நீங்கள் ஏன் அதனை ஆராயவில்லை.
உங்கள் களத்தில் சொந்தப்பெயரில்தான் எழுதவேண்டும் என்றும் எந்த நிபந்தனைகளும் இல்லை.
எனவே என்னைத்தடுத்ததில் எனக்குக் கவலையில்லை.ஆனால் தொடர்ந்தும் இப்படி பக்கசார்பாக நடந்து கொள்ளாதீர்கள்.
நன்றி வணக்கம்.