![]() |
|
இது ஒரு புது முயற்சி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: இது ஒரு புது முயற்சி (/showthread.php?tid=8415) |
- Mohan - 04-14-2003 நன்றி, ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் இரண்டுவிதமான எழுதும் முறைகள் இங்கு இணைக்கப்பட்டுள்னதென. இங்குவரும் பலரும் பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுவதையே அடிப்படையாகக் கொண்டபடியால் பாமினியில் இருந்து யுனிகோட்டுக்கு மாறும்படி default செய்திருந்தேன். நீங்கள் ஆங்கில உச்சரிப்பு அடிப்படையில் எழுதுபவராக இருப்பின் profile ற்குச் சென்று english2unicode என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம். நீங்கள் தந்த முகவரி எழுத எழுத மாறும் முறை நன்றாக உள்ளது. ஆனால் உங்கள் முறையில் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றால் எழுதுவது சிரமமாக இருக்கும் என நினைக்கின்றேன். சில மொழிகள் இணைக்கப்பட்டுள்ளது. பதிந்தவர்கள் உங்கள் நாட்டு மொழியினைத் தேவைப்படின் தெரிவு செய்து கொள்ளுங்கள். - Mohan - 04-14-2003 ஈ-கலப்பபை போன்ற சிறு நிகழ்வுகளை, பாமினியில் இருந்து யுனிகோட்டிற்கோ அல்லது ஆங்கில உச்சரிப்பில் இருந்து யுனிகோட்டிற்கோ மாற்றுவதற்காக யாரவது programming தெரிந்தவர்கள் செய்தால் வேலையை இன்னூம் இலகுவாக்கமுடியும். இதற்கு தெரிந்த யாராவது உதவ முன்வர வேண்டும். - Mohan - 04-14-2003 நான் குறிப்பிட்டவிடயம் கணணியை on செய்யும்போதே அந்நிகழ்வும் start செய்திருக்கவேண்டும். தேவைப்படும்போது ஒரு hotkeyயினை அழுத்தி எழுதக்கூடியதாக இருந்தால் நல்லது என நினைக்கின்றேன் - Guest - 04-15-2003 kuruvikal registered here.but the data is not appearing as in current yarl forum. Mohan anna,please,remove the registered(now last registerd member) details in new forum or change the data to appear as in current forum and kuruvikal has no ability to type thamil fonts directly using key board. they are using your converter(english tamil to tamil) please arrange to insert same facility in your current forum! or guide me how to use same facility in your new forum. Thank you kuruvikal. - kuruvikal - 04-15-2003 இன்னும் பல வேலைகள் உண்டு போல் தெரிகிறது.சுயவிபரக் கோவைக்கு படம் போட முடியவில்லை.மேலும் கையொப்பம் தெரிகிறதில்லை! மேலும் பிரச்சனைகள் இருப்பின் உடனுக்குடன் அறியத்தரப்படும்! நன்றி.(Thank you) - Mohan - 04-15-2003 நன்றி குருவிகள், தற்போது படங்கள் போடுவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது. தேவைப்படின் படங்களை நீங்கள் தரவேற்றம் செய்தும் இணைத்துக்கொள்ளமுடியும். கையொப்பம் என்று நீங்கள் குறிப்பிட்டது எதுவென்று எனக்கு விளங்கவில்லை. மீண்டும் விளக்கமாகக் குறிப்பிடுங்கள். நன்றி மோகன் - kuruvikal - 04-16-2003 மேலே உள்ள இரண்டு குருவிகளின் செய்திகளையும் பார்த்தீர்கள் என்றால் முதலில் எழுதியது கையொப்பம் இணைக்க முதல் பின்னையது கையொப்பம் இணைக்கப்பட்ட பின்.தற்பொழுது சுயவிபரக் கோவையில் கையொப்பம் உண்டு.ஏன் கையொப்பம் பின்னையதைப் போன்று முதலாவதிலும் தெரியவிலை.தற்போதைய யாழ் களத்தில் சுயவிபரக் கோவையில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் பழைய செய்திகளிலும் மாறித்தானே வருகிறது! இங்கு ஏன் அப்படி மாற்றத்திற் கேற்ப மாறமறுக்கிறது! அதைத்தான் குறிப்பிட்டேன். நன்றி. நட்புடன் குருவிகள். - kuruvikal - 04-16-2003 ஆம் இப்பொழுது எல்லாம் திற்மையாகத் தொழிற்படுகின்றன.மேலும் பிரச்சனைகள் எதிர்காலத்தில் வருமானால் உடனுக்குடன் தெரியப்படுத்தப்படும்! நன்றிகள். நட்புடன் குருவிகள். பரீட்சார்த்தம் - Guest - 06-06-2003 பற்றற்றான் பற்றினை பற்றி அப்பற்றை பற்றி பற்று விடற்க! வள்ளுவன். - Chandravathanaa - 06-10-2003 எனக்குப் புதிய கருத்துக்களத்தில் எழுத்துக்கள் சரி வர மறுக்கின்றன. லதா அடித்து அழித்து விட்டேன் நீங்கள் தனிப்பட்ட செய்தி மூலம் அனூப்பியதும் சரிவரவில்லை. தற்போது தந்த tau1_bar(2) ஐயும் பதிந்தேன். எழுத்துக்கள் குழப்பமாய்த்தான் தெரிகின்றன. தற்போது யாழின் கொன்வேற்றரைப் பாவிக்கிறேன். - Chandravathanaa - 06-14-2003 அப்பாடா..! ஒருவாறு சரி வந்து விட்டது. Tsc Avarankal உள்ளே இருந்ததை நான் கவனத்தில் எடுக்கவில்லை. அதையும் அழித்தவுடன் சரி வந்து விட்டது. பிரச்சனையின்றி நானூம் இப்போது புதிய கருத்துக்களத்துக்குள் வந்து விட்டேன். - Paranee - 06-15-2003 ஆவரங்கால் என்றாலே தொல்லையோ........... - இளைஞன் - 06-15-2003 வணக்கம் !!! நன்றாக இருக்கிறது... ஆனால் தமிழில் எமது பெயரை எழுத முடியவில்லை. காரணம் என்ன??? - yarlmohan - 06-15-2003 யாழால் உருவாக்கப்பட்ட பாமுனி பாவிப்பதன் மூலம் தமிழ் பெயரினையும் கருத்துக்களின் தலைப்புக்களையும் மிகவும் இலகுவாக எழுதலாம். - sOliyAn - 06-16-2003 பாமுனி சரி. இனி எவ்வாறு எனது பெயரை தழிழில் எழுதுவது.. இப்படியே englishல் இருக்கவேண்டியதுதானா?
- nalayiny - 06-16-2003 உங்களுக்கு சரி .எனக்கு முனியே வராதாம் - nalayiny - 06-16-2003 அடவருகுதா..! அல்லது ஆரும் மாத்தினனீங்களா? - sOliyAn - 06-16-2003 எதுக்கும் யாழின் விளக்கத்தை சரியாக உள்வாங்குங்கோ.. வரும்.. மற்றது உங்களுடைய பிறவுசரிலும் தமிழுக்கு மாற்றவேணும்.. முதலில் எனக்கும் வரவில்லை.. பிறகு பிறவுசரில் 'ஒப்சன்" போய் போன்ற்ஸ் போய்.. தமிழை ஒருக்கா அமத்தினேனா.. வந்தீட்டுது.. அதற்குப் பிறகும் ஒரு தொல்லை.. இரட்டைக் கொம்பு, ஒற்றைக் கொம்பு போட பொத்தானை அழுத்தினால்.. அதுகளை காணேல்லை.. கொஞ்சநேரம் தலையை பிச்சுக்கொண்டு, யாழுக்கும் சுரதாக்கும் அலைஞ்சதில் கொஞ்ச முடி போட்டுது.. அந்த கொம்புகளை அழுத்திவிட்டு, அவை கண்ணுக்கு தெரியாவிட்டாலும்... அதற்கடுத்து வரும் எழுத்தை அழுத்தும்போது எல்லாமே தெரிகிறதே.. மிகவும் சுலபமான செயல்முறை.. பாமுனியை தொடேக்கை பயந்துகொண்டுதான் தொட்டன்.. இப்ப நீச்சல் அடிக்கிறேன்.. சுரதாவுக்கும் மோகனுக்கும் நன்றி கூறவேண்டும்.. இனி மோகனிடம் ஒரு கேள்வி.. இந்த முறையில் மெயில் அனுப்பும்போது.. அதைப் பெறுபவர் எவ்வித தடங்கலுமின்றி வாசிக்க முடியுமா? அல்லது அவரும் தனது கணனியில் இந்த செயலியையோ அல்லது பிறவுசரில் 'தமிழ்" என்ற ஆணையையோ கொடுக்கவேண்டுமா? - Guest - 06-16-2003 hello - nalayiny - 06-16-2003 தாமாவும் லதாவும் பாமுனியும் என்னைப்போட்டு சிப்பிலி ஆட்டி எடுத்துப்போட்டினம்.(பொறுமை என்கிற நகையை முதன் முதல் அணிந்து அழகு பாத்தேன்.) :wink: :wink: |