Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
15 ஆண்டாக கோமாவில் இருக்கும் பெண்
#16
[quote=Mathan]<span style='color:brown'><b>கணவனின் விருப்பத்தின் பேரில் உணவு மற்றும் நீர் துண்டிக்கப்பட்ட பெண் 13 நாட்களுக்கு பின் மரணமடைந்துள்ளார் பெற்றோர் தெரிவித்துள்ளனர். </b>

செய்தி ஆதாரம் பிபிசி

[size=15]டெர்ரி ஷியாவோவின் உயிர் பிரிந்தது

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மூளை முற்றிலும் செயலிழந்த நிலையில் இருந்துவந்த டெர்ரி ஷியாவோ என்ற பெண்மணியின் உயிர் தற்போது பிரிந்திருக்கிறது.

அவருக்கு உணவு வழங்கும் குழாய் பதின்மூன்று நாட்கள் முன்பு எடுக்கப்பட்டிருந்தது.

டெர்ரி ஷியாவோ உயிருடன் இருக்கவேண்டும் என்று அவருடைய பெற்றோர் நீண்டதொரு சட்டப்போராட்டத்தை நடத்திவந்தார்கள். ஆனால், இப்படி செயற்கையான முறையில் அவர் உயிர்தொடர விரும்பியிருக்க மாட்டார் என்று அவருடைய கணவர் வாதிட்டுவந்தார்.

டெர்ரி ஷியாவோவின் பெற்றோர் மற்றும் கணவர் இடையே நடந்துவந்த சட்டப்போராட்டம், இம்மாத தொடக்கத்தில், அரசியல் அரங்கிலும் பிரவேசித்தது.

டெர்ரி ஷியாவோ அவர் உயிர் வாழ வேண்டி அமெரிக்க அதிபர் புஷ் ஆதரவுடன், அவருடைய குடியரசுக்கட்சி பெரும்பான்மை வகிக்கும் காங்கிரஸ் மன்றம், இந்த வழக்கை மேல்நீதி மன்றங்களுக்கு அனுப்பியது.

ஆனால், டெர்ரி ஷியாவோவுக்கு உணவு வழங்கும் குழாயை மீண்டும் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை எந்த அமெரிக்க நீதிமன்றமும் ஏற்கவில்லை. </span>
BBC
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 03-24-2005, 03:53 AM
[No subject] - by sri - 03-24-2005, 03:33 PM
[No subject] - by vasisutha - 03-25-2005, 04:48 AM
[No subject] - by தூயா - 03-25-2005, 08:45 AM
[No subject] - by poonai_kuddy - 03-31-2005, 11:11 AM
[No subject] - by kuruvikal - 03-31-2005, 12:02 PM
[No subject] - by poonai_kuddy - 03-31-2005, 12:28 PM
[No subject] - by kuruvikal - 03-31-2005, 12:34 PM
[No subject] - by poonai_kuddy - 03-31-2005, 12:42 PM
[No subject] - by kuruvikal - 03-31-2005, 12:47 PM
[No subject] - by tamilini - 03-31-2005, 01:23 PM
[No subject] - by Mathan - 03-31-2005, 06:53 PM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 03-31-2005, 07:09 PM
[No subject] - by AJeevan - 03-31-2005, 08:05 PM
[No subject] - by Mathan - 03-31-2005, 08:36 PM
[No subject] - by tamilini - 03-31-2005, 09:51 PM
[No subject] - by kuruvikal - 03-31-2005, 10:58 PM
[No subject] - by kirubans - 04-01-2005, 12:46 AM
[No subject] - by Mathan - 04-01-2005, 01:14 AM
[No subject] - by அசோகன் - 04-01-2005, 09:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)