![]() |
|
15 ஆண்டாக கோமாவில் இருக்கும் பெண் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: 15 ஆண்டாக கோமாவில் இருக்கும் பெண் (/showthread.php?tid=4686) Pages:
1
2
|
15 ஆண்டாக கோமாவில் இருக்கும் பெண் - Mathan - 03-24-2005 15 ஆண்டாக கோமாவில் இருக்கும் அமெரிக்க பெண்ணுக்கு உணவு அளிக்கும் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு அட்லாண்டா, மார்ச் 24: அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் டெர்ரி ஷியாவோ(41) என்ற பெண்ணுக்கு உணவு-நீர் வழங்கும் குழாயை மீண்டும் பொருத்துமாறு விடுத்த கோரிக்கையை அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் நிராகரித்து விட்டது. டெர்ரி ஷியாவோ சுயநினைவின்றி 15 ஆண்டுகளாக படுத்தப்படுக்கையாக இருப்பதால் அவருக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கும் குழாயை துண்டிக்குமாறு, அவரது கணவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் புளோரிடா நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியது. அதன் பேரில் ஷியாவோவுக்கு உணவு, தண்ணீர் கொடுக்கும் குழாய் வெள்ளிக்கிழமை துண்டிக்கப்பட்டது. ஆனால், இந்நடவடிக்கைக்கு ஷியாவோவின் பெற்றோர் பாப் மற்றும் மேரி சின்டர் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பெண்ணுக்கு மீண்டும் உணவு-தண்ணீர் குழாயை பொருத்த வகைசெய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஷியாவோவின் பெற்றோர்கள் புளோரிடா நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மூன்று நீதிபதிகள் கொண்ட மத்திய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்கள் தங்கள் மனுவில், ஷியாவோவுக்கு மீண்டும் உணவுக்குழாய் இணைப்பு தர உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஷியாவோவின் பெற்றோர் கோரிக்கையை நிராகரித்தனர். இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து ஷியாவோவின் தாயார் மேரி சின்டர் மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மேலும் தன்மகள் ஷியாவோ விரைவாக மெலிந்து வருகிறார், எந்த நேரத்திலும் அவர் இறக்கக்கூடும் என்று சின்டர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், ஷியோவோவுக்கு உணவு, தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டால் இரண்டு வாரம் தான் அவர் உயிர்வாழ முடியும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். கோமா பெண்ணின் சர்ச்சை அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமணி - Mathan - 03-24-2005 அமெரிக்காவில் மிக மோசமாக மூளை பாதிக்கப்பட்ட நோயாளிக்கான சட்டப்போராட்டத்தில் மீண்டும் ஒரு தோல்வி <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39484000/jpg/_39484139_203b_terri_ap.jpg' border='0' alt='user posted image'> அமெரிக்காவில், மிக மோசமாக மூளை பாதிப்படைந்த , டெர்ரி ஷியாவோ என்ற பெண்ணின் பெற்றோர்கள், அவளை, உயிருடன் வைத்திருக்க தாங்கள் நடத்தி வரும் நீண்ட சட்டப்போராட்டத்தில் தற்போது மேலும் ஒரு தோல்வி கண்டுள்ளனர். நள்ளிரவில் விசாரணை நடத்திய ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு மீண்டும் செயற்கை குழாய் வழியாக உணவு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது. அவரது கணவர், அவர் கண்ணியத்துடன் இறக்க அனுமதிக்கப்படவேண்டும் என்று புளோரிடா மாநில நீதிமன்றத்தில் வாதாடியதை அடுத்து , இவ்வாறு செயற்கைக்குழாய் மூலம் அவருக்கு உணவளிப்பது , வெள்ளியன்றிலிருந்து நிறுத்தப்பட்டது. இந்த மிகச்சமீபத்திய தீர்ப்புக்குப் பின்னர்,ஷியாவோவின் பெற்றோர், தாங்கள் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்தனர். ஆனால் இது அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு செல்லுமா என்பது தற்போது நிச்சயமாகவில்லை என்று வாஷிங்டனில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். ஷியாவோவின் கணவர், அவர் , 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மாரடைப்பு ஏற்பட்டதிலிருந்து ஒரு நிரந்தரமான, முற்றிலும் உணர்வுகளும் உடலும் செயலற்ற நிலையில் இருப்பதாக கூறுகிறார். ஆனால் அவரது பெற்றோர்களோ அவர் மீண்டும் குணமடையக்கூடும் என்கிறார்கள். BBC Tamil - sri - 03-24-2005 எனக்கு தெரிந்து ஜேர்மனியில் வூப்பெற்றால் என்னும் இடத்தில் இலங்கை தமிழர் ஒருவர் கடந்த 4வருடங்களுக்கு மேலாக கோமாவில் உள்ளார் - vasisutha - 03-25-2005 பரிதாபமான நிலைதான். எந்த தாய் தகப்பன் தான் தங்கள் பிள்ளை இறப்பதை விரும்புவார்கள். அவர்கள் வழக்கு போட்டதில் எந்த தவறும் இல்லை. அதே நேரம் அப்பெண்ணின் நிலையை பார்க்கும் போது அவர் இப்படி அவதிப்பட்டு சாவதை விட நிம்மதியாக சாகவிடுவது மேல்தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- தூயா - 03-25-2005 பெத்த மனம் பித்து <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சட்டத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெண் - kuruvikal - 03-31-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39484000/jpg/_39484139_203b_terri_ap.jpg' border='0' alt='user posted image'> மூளை பாதிக்கப்பட்ட பெண் Terri Schiavo. அமெரிக்காவில்...இதய நோய் காரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்னால் மூளை பாதிக்கப்பட்டு பகுதி செயலிழந்துள்ள ஒரு பெண் செயற்கையான ஊட்டல்கள் மூலம் வாழ்ந்து வருகிறார்...! நீண்ட காலமாகவே அவரின் கணவருக்கும் பெற்றோருக்கும் இடையில் அவர் தொடர்பில் ஒரு வழக்குப் போகிறது...! கணவர் சொல்கிறார் தன் மனைவியை இந்த நிலையில் தொடர்ந்து வைத்திருக்க தான் விரும்பவில்லை... அவருக்கான செயற்கை ஊட்டல்களை நிறுத்தி மரணத்துக்கு இட்டுச் செல்லும் படி...பெண்ணின் பெற்றோரோ...அவ்வாறு செய்ய வேண்டாம் அவளை இந்த நிலையில் இன்னும் வாழ விடுங்கள் என்று...! சட்டப்படி இந்தப் பெண் ஒரு மனைவியாக கணவனின் பாதுகாப்பில் இருப்பதாகக் கொண்டு நீதிமன்றம் கணவனுக்குச் சார்பான தீர்ப்புக்களை அளித்து வருகின்றது...பெற்றோரும் மனித உரிமையார்வலர்களும் அதற்கு எதிராக நீதிமன்றதுக்குச் சென்று இந்த Terri Schiavo (41) எனும் பெண்ணின் வாழ்வை 15 வருடங்களாக நீட்டித்து வருகின்றனர்...! அதிபர் புஷ் உட்பட அமெரிக்கக் காங்கிரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது இவ்வழக்கு..என்பது குறிப்பிடத்தக்கது...! உங்கள் பார்வையில்....எது நியாயம்..சொல்லுங்க...! தகவல் - bbc.com எங்கள் பார்வையில்... மனிதாபிமான முறையில் அந்தப் பெண்ணுக்கான வாழ்வுரிமையை அந்தக் கணவன் அளிப்பதே சிறந்தது..! அவருக்கு அது சிரமம் என்றால் அவளின் பராமரிப்புப் பொறுப்பை சட்ட ரீதியாக பெற்றோரிடம் கையளிக்க முடிவு செய்யலாம்...! அதை விடுத்து மரணத்துக்கு இட்டுச்செல் என்பது அவளுக்கு வாழ இருக்கும் சந்தர்ப்பத்தைப் பறிப்பது போன்றதே...! - poonai_kuddy - 03-31-2005 ஒழுங்கா மூளை வேலை செய்யிற பொம்பிளயளையே உயிரோட சித்திரவத பண்ணுறாங்கள் மூளை பாதிக்கப்பட்ட பொம்பிளயள எப்பிடி விட்டுவப்பாங்கள் அண்ணா? முதல்ல மனிதாபிமான முறையில மூளை ஒழுங்கா இருக்கிற பொம்பிளயளுக்கு இருக்கிற வாழ்வுரிமைய அங்கீகரிக்கட்டும் அண்ணா. பாவம் மூளை பாதிக்கப்பட்ட பறவைகளையெல்லாம் உயிரோட விட்டுவச்சிருக்கிறாங்கள் மனுசரத்தான் கொல்லப் பாக்கிறாங்கள் - kuruvikal - 03-31-2005 பூனைக்குட்டி...இது அடுப்படியில்ல... மியா மியா என்றுவிட்டு சுருண்டு படுக்க... இது களம்... தேவையானதை தேவைக்கு அளவாச் சொல்லிட்டுப் போறது நல்லது...! தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்ளவும்... கள விதிகளின் பிரகாரம் கள உறுப்பினர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கி எழுதுதல் தவிர்க்கப்பட வேண்டும்...! :wink:
- poonai_kuddy - 03-31-2005 யாழினி அக்கா குரவியண்ணா என்னை வெருட்டுறார். நான் கருத்து எழுதினால் என்னை அவர் பேசுறார். என்னெண்டு கேளுங்கோ
- kuruvikal - 03-31-2005 <!--QuoteBegin-poonai_kuddy+-->QUOTE(poonai_kuddy)<!--QuoteEBegin-->யாழினி அக்கா குரவியண்ணா என்னை வெருட்டுறார். நான் கருத்து எழுதினால் என்னை அவர் பேசுறார். என்னெண்டு கேளுங்கோ <!--QuoteEnd--><!--QuoteEEnd-->சரி சரி பூனைக்குட்டி அழாதேங்கோ... உங்க குருவி அண்ணாதானே சொன்னது... அழாதேங்கோ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மேல படத்தில இருக்கிற ஆன்ரி பாவம் இல்லா...அவாவுக்காக உங்க கருத்தைச் சொல்லுங்க பாப்பம்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- poonai_kuddy - 03-31-2005 அதான் சொல்லிட்டன் தானே அதயும் ஒழுங்கா வாசிக்கேலயா அடக்கடவுளே :roll: - kuruvikal - 03-31-2005 <!--QuoteBegin-poonai_kuddy+-->QUOTE(poonai_kuddy)<!--QuoteEBegin-->ஒழுங்கா மூளை வேலை செய்யிற பொம்பிளயளையே உயிரோட சித்திரவத பண்ணுறாங்கள் மூளை பாதிக்கப்பட்ட பொம்பிளயள எப்பிடி விட்டுவப்பாங்கள் அண்ணா? முதல்ல மனிதாபிமான முறையில மூளை ஒழுங்கா இருக்கிற பொம்பிளயளுக்கு இருக்கிற வாழ்வுரிமைய அங்கீகரிக்கட்டும் அண்ணா. பாவம் மூளை பாதிக்கப்பட்ட பறவைகளையெல்லாம் உயிரோட விட்டுவச்சிருக்கிறாங்கள் மனுசரத்தான் கொல்லப் பாக்கிறாங்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--QuoteBegin-poonai_kuddy+-->QUOTE(poonai_kuddy)<!--QuoteEBegin-->அதான் சொல்லிட்டன் தானே அதயும் ஒழுங்கா வாசிக்கேலயா அடக்கடவுளே :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> குருவிகள் கேக்கிறது பெண்கள் என்ற பார்வையில் பொதுக்கருத்தல்ல.. அது தனியான விடயம்..மனிதாபிமான அவசியம் இல்லாததுகளையும் பெண்கள் கேட்கிறார்கள்... இது மனிதாபிமான உதவிகோரும் அந்த ஆன்ரிக்கு தேவையானது எது என்ற உங்கள் கருத்தை....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-31-2005 உண்மையா தனது மனைவி கஸ்டப்படுவதை பார்க்க முடியாமல் அந்த கணவன் இந்த முடிவெடுத்திருப்பாரா...?? என்ன தான் இருந்தாலும் அந்த பெண்ணை செயற்கையாய் மரணத்திற்கு இட்டுச்செல்வது சரியல்ல.. :evil: நம்மைப்பொறுத்தவரை (எங்கள் சொந்தக்கருத்து. இப்படி மற்றவையில் தங்கி அவர்களது சினத்திற்கு ஆளாகி வாழுறதை விட சாகிறது மேல். அவர்களாவது இடையு}று இல்லாமல் வாழட்டன். அது கணவனாய் இருந்தால் என்ன பிள்ளைகளாய் இருந்தால் என்ன பெற்றோராய் இருந்தால் என்ன..?? இந்த நிலையில் நாங்கள் இருக்கும் போது எங்களை சு}ழ உள்ளவர்களிற்கு தினம் தினம் வேதனை செத்துவிட்டால் எப்பவாவது ஒரு நாள் நினைத்து வேதனைப்படுவார்கள். எனன நான் சொல்லுறது. ) - Mathan - 03-31-2005 [size=14]<b>கணவனின் விருப்பத்தின் பேரில் உணவு மற்றும் நீர் துண்டிக்கப்பட்ட பெண் 13 நாட்களுக்கு பின் மரணமடைந்துள்ளார் பெற்றோர் தெரிவித்துள்ளனர். </b> செய்தி ஆதாரம் பிபிசி http://news.bbc.co.uk/1/hi/world/americas/4398131.stm - ¸ÅâÁ¡ý - 03-31-2005 þÐ «¿¢Â¡Âõ.. «¦ÁÃ¢ì¸ ¿£¾¢ÁýÈõ ¦ºö¾ Ó¨È Á¢¸×õ ¦¸¡ÎÃÕÁ¡ÉÐ. ±ÉÐ ¸ÕòÐÀÊ À¡¾¢ì¸ôÀð¼Å¨Ã ÀÃÁâôÀÐ ¸Š¼õ ±ñÎ ²üÚ À¡¾¢ì¸ôÀð¼Å÷ ¸Š¼À¼Áø «¾ÅÐ °º¢ ãħÁ¡ «øÄÐ §ÅÚ ²Ð §¿¡¸Áø ÁýõÁ¨¼Â ¦ºö¾¢Õì¸øÄ¡õ. ¯½¨ÅÔõ ¾ñ½£¨ÃÔõ 13 ¿¡ð¸û ÌÎì¸Áø ¨Åò¾¢ÕóÐ º¡¸ÊôÀÐ Á¢¸×õ ´Õ §Å¾¨É ¾Õõ ¦¸¡ÎÃî¦ºÂø.. «ôÀÊÂøÄÅ¢ð¼¡ø ¦¿¾÷Ä¡óÐ ¿¡ðÊø ¯ûÇ Ó¨ÈÂ¡É ¸Õ¨É¦¸¡¨Ä¨Â ¦ºö¾¢Õì¸Ä¡õ.. «¦ÁÃ¢ì¸ ¿£¾¢Å¡ý¸ÙìÌõ «ø†ö¼¡×ìÌõ ±ýÉ ¦Àâ Ţò¾¢Âºõ... :oops: :evil: º¡¸Êì¸ôÀð¼ ¦ÀñÏìÌ ±ÉÐ ¸ñ½£÷ «ïºÄ¢..
- AJeevan - 03-31-2005 [quote=Mathan]<span style='color:brown'><b>கணவனின் விருப்பத்தின் பேரில் உணவு மற்றும் நீர் துண்டிக்கப்பட்ட பெண் 13 நாட்களுக்கு பின் மரணமடைந்துள்ளார் பெற்றோர் தெரிவித்துள்ளனர். </b> செய்தி ஆதாரம் பிபிசி [size=15]டெர்ரி ஷியாவோவின் உயிர் பிரிந்தது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மூளை முற்றிலும் செயலிழந்த நிலையில் இருந்துவந்த டெர்ரி ஷியாவோ என்ற பெண்மணியின் உயிர் தற்போது பிரிந்திருக்கிறது. அவருக்கு உணவு வழங்கும் குழாய் பதின்மூன்று நாட்கள் முன்பு எடுக்கப்பட்டிருந்தது. டெர்ரி ஷியாவோ உயிருடன் இருக்கவேண்டும் என்று அவருடைய பெற்றோர் நீண்டதொரு சட்டப்போராட்டத்தை நடத்திவந்தார்கள். ஆனால், இப்படி செயற்கையான முறையில் அவர் உயிர்தொடர விரும்பியிருக்க மாட்டார் என்று அவருடைய கணவர் வாதிட்டுவந்தார். டெர்ரி ஷியாவோவின் பெற்றோர் மற்றும் கணவர் இடையே நடந்துவந்த சட்டப்போராட்டம், இம்மாத தொடக்கத்தில், அரசியல் அரங்கிலும் பிரவேசித்தது. டெர்ரி ஷியாவோ அவர் உயிர் வாழ வேண்டி அமெரிக்க அதிபர் புஷ் ஆதரவுடன், அவருடைய குடியரசுக்கட்சி பெரும்பான்மை வகிக்கும் காங்கிரஸ் மன்றம், இந்த வழக்கை மேல்நீதி மன்றங்களுக்கு அனுப்பியது. ஆனால், டெர்ரி ஷியாவோவுக்கு உணவு வழங்கும் குழாயை மீண்டும் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை எந்த அமெரிக்க நீதிமன்றமும் ஏற்கவில்லை. </span> BBC - Mathan - 03-31-2005 உணர்வுரீதியாக அவர் உயிர்வாழவேண்டும் என்று நினைத்தாலும் கோமா நிலையில் உலகமே தெரியாமல் செயற்கை முறையில் உயிர்வாழ்வது வேதனைக்குரியது. ஆனால் அவரை உணவு தண்ணீரை நிறுத்தாமல் கருணை கொலை மூலம் அமைதியடைய செய்திருக்கலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 03-31-2005 Quote:அவரை உணவு தண்ணீரை நிறுத்தாமல் கருணை கொலை மூலம் அமைதியடைய செய்திருக்கலாம்.
- kuruvikal - 03-31-2005 எனி அழுதென்ன ஆகிறது.. முடிவு கட்டினார்கள்...முடித்திட்டார்கள்..! :roll: hock:
- kirubans - 04-01-2005 ஓர் உயிரை வைத்து அரசியலும் பண்ணினார்கள், புஷ் உட்பட. அம்மையாரின் ஆன்மா சாந்தி அடையட்டும். ஓர் அப்பாவி உயிரைக் காப்பாற்றக் கூட ஜனநாயகமும், மனிதாபிமானமும் உள்ளதாகப் பறைசாற்றும் அமெரிக்காவில் முடியவில்லையே. |