03-31-2005, 12:10 PM
ஜே.வி.பி.யுடன் உறவை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட்டுகள்
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் கம்யூனிஸ்ட்டுகள் இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தொடர்பாக கடந்த காலத்தில் அபிப்பிராய பேதங்களை கொண்டிருந்த போதும் தற்போது இந்தக் கட்சியுடன் தொடர்புகளை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.) 19 ஆவது மாநாடு நேற்று புதன்கிழமை பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகார் நகரில் ஆரம்பமானது. இந்த மாநாட்டில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் மத்திய குழு உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பிமல் இரட்நாயக்கவும் கலந்து கொண்டனர். இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் 6 இல் புதுடில்லியில் இடம்பெறவிருக்கும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.(எம்)) மாநாட்டிலும் இந்த இருவரும் பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை சிங்கள தேசியவாதிகளும் இடதுசாரி அடிப்படைவாதிகளுமான ஜே.வி.பி.யினருக்கும் இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையிலான புதிய உறவானது சிறுபான்மை தமிழ் மக்கள் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் சாத்தியம் காணப்படுகிறது...............
விரிவாக பார்க்க