03-31-2005, 12:01 PM
ரஷ்ய கூட்டுப்படைத் தளபதி யாழ்ப்பாணம் விஜயம் பாதுகாப்பு நிலைவரம் குறித்து விரிவாக ஆராய்வு
ரஷ்ய முப்படைகளினதும் கூட்டுப்படைத் தளபதி கேணல் அனற்ரோலிவ் சடரோஷ்கனி யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவாக ஆராய்ந்ததுடன் முக்கிய சந்திப்புகளையும் நடத்தியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை விஷேட இராணுவ விமானம் மூலம் இவரும் இலங்கைக்கான ரஷ்ய தூதரக சிரேஷ்ட அதிகாரிகளும் பலாலியிலுள்ள யாழ். இராணுவ தலைமையகத்தைச் சென்றடைந்தனர்.
அங்கு யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சுனில் தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டச் சந்திப்பில் கலந்து கொண்டு யாழ். குடாநாட்டு பாதுகாப்பு நிலைமை மற்றும் அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகவும் பலாலி விமானப்படைத் தள பாதுகாப்பு குறித்தும் ஆராய்ந்தார்.
இதன்பின்னர் யாழ். நகரிலுள்ள 51 ஆவது படையணித் தலைமையகத்துக்குச் சென்று அதன் கட்டளைத் தளபதி கேணல் ரணசிங்கவைச் சந்தித்து யாழ். நகர மற்றும் கரையோரப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார். இதன் பின்னர் நகரின் பல பகுதிகளுக்கும் கோட்டை பொது நூலகம் மற்றும் குருநகர் இறங்கு துறைக்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.
இதைத் தொடர்ந்து கேணல் சடரோஷ்கனி முகமாலைப் பகுதிக்குச் சென்று அங்குள்ள பாதுகாப்பு நிலைமையையும் சோதனை நிலைய செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
நேற்றுப் புதன்கிழமை காலை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குச் சென்று அதன் கட்டளைத் தளபதி கொமடோர் திஸநாயக்காவைச் சந்தித்து குடாநாட்டுக் கடல் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் கடற்படை முகாம் காங்கேசன் துறை துறைமுகம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளையும் பார்வையிட்டார்.......
தினக்குரலில்