03-31-2005, 12:38 AM
kuruvikal Wrote:நல்ல முடிவு மகாத்மா.. மனதை திருப்திப்படுத்த முடியாதவனுக்குத்தான் குழப்பம் அதிகம்...அவர்களால் எவ்வளவுதான் முயன்றாலும் அதை அமைதிப்படுத்த முடியாது... அப்படிப்பட்டவர்கள் தங்களைத் திருப்திப்படுத்த மற்றவர்களில் குறை சொல்லிக் கொண்டே இருப்பர்...அவர்களால் நிறைவை எட்டவே முடியாது...எனவே அப்படியானவர்களிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு விலகி இருப்பதுதான் நல்லம்...அவர்கள் தங்களளவில் திருப்திப்பட்டு நிம்மதி பெறவாவது உதவும்....! பாவம் அவர்கள்...தங்கள் இயலாமையால்...பலவீனத்தால் வேகுகிறார்கள்..அதை வளர்க்க இடமளிப்பது கூட அமைதியை நாடுபவனுக்கு ஆகாது...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மனிதன் என்பவன் பலவீனமானவன். குருவிக்குப் பலவீனம் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மமதை. மகாத்மாவின் பலவீனம் தன்னம்பிக்கை இல்லாமலிருப்பது.
மனிதனுக்குரிய பலவீனங்கள் பல எனக்கும் உள்ளது. பலவீனங்களை மறைத்து உத்தமனாக நடிக்கும் போக்கைவிட நேர்மையாக நடக்க வேண்டும் என்ற கொள்கையுடையவன் நான்.
உலகத்தில் எல்லா கேள்விகளுக்கும் ஒருவரால் விடைகூற முடியுமென்றால் அவர் ஒரு ஞானி. விடையற்ற கேள்விகள் பல உள்ளன. கேள்விகள், தேடல்கள் இல்லாமல் இருந்தால் ஆறறிவு வைத்து என்ன பிரயோசனம். விலங்கைப் போல, பறவையைப் போல, உணவு தேடுவதிலும், வம்சத்தை விருத்தி செய்வதிலும், வம்சத்தைப் பாதுகாப்பதிலும் மட்டும் அக்கறை கொண்டால் மனிதனாக இருப்பதில் அர்த்தமில்லை.
மகாத்மா, அமைதியும் மனச்சாந்தியும் உள்ள வாழ்வை அடைய வேண்டுமென்றால் காவியுடையை அணிந்து சாமியாரகப் போகவேண்டியதுதான். போராட்டமும் சஞ்சலமும் இல்லாத வாழ்வு கற்பனையில்தான் கிடைக்கும். வாழ்க்கை என்பது நாம் இருக்கும் நிலையிலிருந்து நாம் அடைய நினைக்கும் நிலைக்குச் செல்வதற்கான போராட்டமே. போராட்டத்தில் வெற்றி பெறாமலேயே அநேகமாக எல்லோருடைய வாழ்வும் அஸ்தமிக்கிறது.
<b> . .</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 