03-30-2005, 11:33 PM
சுமத்ரா நில நடுக்கத்தால் கடல்கோள் ஏற்படாதது குறித்து விஞ்ஞானிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் ஆச்சரியம்
இந்தோனேசியாவில் திங்கட்கிழமை இரவு 8.7 ரிச்டர் அளவில் பூகம்பமொன்று ஏற்பட்ட போதிலும்இ கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்டது போன்றதொரு கடல்கோள் ஏற்படாதது குறித்து பெரும் ஆச்சரியம் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இதற்கு பல்வேறு விளக்கங்களையுமளித்துள்ளனர்.....
......கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட பூகம்பம் நிகழ்ந்த இடமும் திங்கட்கிழமை ஏற்பட்ட பூகம்பம் நிகழ்ந்த இடமும் வேறு வேறானவை.
கடந்த 26 ஆம் திகதி பூகம்பத்தின் போது இந்திய பெருநிலப்பரப்புஇ பர்மா பெருநிலப்பரப்புடன் மோதியது. இந்த மோதல் கிழக்கு மேற்காக நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அது தென்கிழக்கு ஆசியாவைத் தாக்கியது.
ஆனால் திங்கட்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது பர்மா பெரு நிலப்பரப்பு அவுஸ்திரேலிய பெரு நில பரப்புடன் மோதியதால் உருவானது. இம் மோதல் தென் கிழக்காக மோதியுள்ளது......
இதேவேளை இந்த கடல்கோள் ஏற்படாமைக்கான காரணம் குறித்து தெரிவித்த சென்னை பல்கலைக்கழக புவியியல் துறை ஆய்வாளர் வெங்கட் நாதன்
திங்கட்கிழமை நில நடுக்கத்தின் மையம் சுமத்ரா தீவினை எட்டிய மேற்கு கடல் பகுதியிலுள்ள நயாஸ் தீவிற்கும் சிமியூலு தீவிற்கும் இடையே இருந்ததால் அதன் தாக்கம் முழுவதும் அந்த இரு தீவுகளுக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே அடங்கிவிட்டது. அதனால் தான் அந்த இரு தீவுகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதேவேளைஇ இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டிஷ் விஞ்ஞானியான ஜோன் மிக் லொஸ்ட்
சென்ற முறை ஏற்பட்ட நிலநடுக்கத்திலும் பார்க்க இம்முறை ஏற்பட்ட நிலநடுக்கம் சக்தி குறைவாக இருந்ததே கடல்கோள் ஏற்படாததற்கு காரணம் எனக் கூறியுள்ளார்.
நிலநடுக்கத்தை அளவிடும் ரிச்டர் அளவீட்டில் ஒவ்வொரு அலகு அதிகரிப்பின் போதும் அது வெளியிடும் சக்தியின் அளவு 30 இன் மடங்குகளால் அதிகரிக்கும். எனவே இந்த தடவை நிலநடுக்கத்தின் போதுஇ சென்ற முறையை விட 12 முதல் 15 மடங்கு குறைந்தளவு சக்தியே வெளிப்படுத்தப்பட்டது. எனவே சக்தி வெளிப்பாடு குறைவாக இருந்ததே கடல்கோள் பெரியளவில் தோன்றாததற்கு காரணம் என தெரிவித்தார்.
அத்துடன் இந்த முறை நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சென்ற முறையைவிட கடலின் ஆழத்தில் இருந்துள்ளது. அதனால் மேற்பரப்பின் மீது அதன் தாக்கம் குறைவாக இருந்தது எனவும் தெரிவித்தார்.
பசுபிக் கடல் பிராந்தியத்தை கண்காணித்து கடல்கோள் பற்றிய விபரங்களை அளிக்கும் தேசிய கடலியல் நிறுவனத்தின் இயக்குநரான சார்லஸ் மெக்ரீரி கூறுகையில்
ரிச்டர் அளவுகளில் 8 என பதிவாகும் நிலநடுக்கத்தாலேயே கடல்கோள் ஏற்படும். ஆனால் 8.7 என பதிவாகிய நிலநடுக்கத்தால் கடல்கோள் இராட்சத அலை ஏற்படாதது ஆச்சரியத்தை அளிக்கிறது என்கிறார்.
நிலநடுக்கத்தின் அளவை வைத்து கடல்கோள் தாக்குதலை முன்கூட்டி கணிப்பதில் ஒரு நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டிருப்பதாக அவர் கருத்துத் தெரிவித்தார்.
தினக்குரலில்