09-09-2003, 07:55 PM
செல்வச் சந்நிதி முருகன் தேர்த்திருவிழாவில், கோயிலின் வடக்குப் பகுதியில் திடீரென தேர் சரிந்ததில் பலர் காயமடைந்ததுடன் பக்தர்கள் மனக்கலக்கமடைந்துள்ளார்கள்.
சமாதானமாக இருக்கும் இந்த நாட்டு சூழ்நிலையில் இன்று நடைபெற்ற செல்வச் சந்நிதி முருகன் தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்ற போது, கோயிலின் வடக்குப் பகுதியில் தேர் வந்து கொண்டிருந்த வேளை திடீரென தேர் சரிந்து சூழ்ந்திருந்த பக்தர்களின் மீது விழுந்தது. அதன்போது அங்கிருந்த பக்கத்தர்கள் அச்சத்தால் முருகனை வேண்டி அரோகரா என்று கூச்சலிட்டனர்.
ஒரு ஐயர் உட்பட சில பக்தர்களும் காயத்துக்குள்ளாயினர். இதனால் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களும் முருகனிடம் தரிசித்து மனவருத்தத்துடன் வீடு திரும்பினர். அத்துடன் இது யாழ் மண்ணுக்கே ஒரு அபசகுனம் எனவும் பலரும் அபிப்பிராயம் தெரிவித்தனர்.