03-30-2005, 03:45 PM
<b>மட்டக்களப்பில் ஈ.பி.டி.பி வாகனம் மீது தாக்குதல்: ஒருவர் காயம்</b>
மட்டக்களப்பு - வாழைச்;சேனை வீதி ஆறுமுகத்தான் குடியிருப்பு என்னுமிடத்தில் ஈ.பி.டி.பியினர் பயணம் செய்த வாகனத்தின் மீது இனந் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு கடமைக்குச்; சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு ஈ.பி.டி.பி. அலுவலகத்திலிருந்து செங்கலடியிலுள்ள அலுவலகத்திற்கு வாகனம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த செங்கலடி அலுவலக ஈ.பி.டி.பி. பொறுப்பாளர் ரவி எனப்படும் தர்மலிங்கம் இளமாறன் என்பவரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளபட்டதாகக் கூறப்படுகின்றது.
தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் பதுங்கியிருந்து முதலில் கைக்குண்டை வீசிய பின்பு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் இந்த துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறிப்பிட்ட பொலிஸ் சார்ஜன்ட் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தையடுத்து அப் பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட பொலிசாரினாலும் இராணுவத்தினராலும் கைவிடப்பட்ட நிலையில் ரி-56 ரக துப்பாக்கியொன்று மகசீனுடன் கைப்பற்றப்பட்டுள்ளது

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]