09-09-2003, 06:57 PM
தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் நடுவப்பணியகத்தினை திறந்து வைத்து அங்கு உரையாற்றுகையில்:-
சமூக வாழ்வு உயர்நிலை அடையும் பொழுதே ஒரு இனம் மகிமை பெறுகிறது மனித வாழ்வு உன்னதம் பெறுகிறது அதன் சமூக உறவு வளர்ச்சி பெறுகிறது இப்படியான சமூக வாழ்வு ஒரு இனத்திற்கு வரப்பிரசாதகமாக அளிக்கப்படுவதல்ல. அன்றி காலத்தால் உவந்தளிக்கப்படுவதுமல்ல அத்தோடு இது அடையப்பட முடியாத பொருளுமல்ல இதனை நாம் தான் நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும் நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும் இதற்காக நாம்தான் உறுதியோடு போராட வேண்டும்.
இந்த வகையில் இற்றைக்குப் பத்தாண்டுகளுக்கு முன்னர் எமது மண்ணிலே தமிழீழக் காவல்துறை நிறுவப்பட்டது. அப்போது இருந்த நிலைமை மிகவும் நெருக்கடியானது இடர்கள் நிறைந்தது சிங்கள அரசின் இன அழிப்புப்புப்போர் எமது மண்ணில் முனைப்புற்றிருந்தது பொருளாதாரத் தடை இறுக்கமாக்கப்பட்டு உணவுப் பொருட்கள் ஈறாக அனைத்திற்;குமே தட்டுப்பாடுகள் நிலவின. சட்ட ஒழுங்கு முற்றாக சீர்குலைந்து மனுநீதிக்கொவ்வாத ஈனச்செயல்களெல்லாம் பெருகின. எல்லாவற்றுக்கும் அப்பால் நாம் கட்டிக்காத்த சமூக வாழ்வை அடியோடு சிதைத்து அதனு}டாக எமது இனத்தின் இருப்பையே அழித்துவிட சிங்கள இனவாத அரசு பல வழிகளிலும் முயன்றது.
இந்த நெருக்கடிமிக்க ஆபத்தான சூழ்நிலையில்த்தான் ஆயிரமாயிரம் போராளிகளின் உதிரத்தாலும் தியாகத்தாலும் உருப்பெற்று வரும் எமது தாயகத்தை உன்னதமான மேன்மையான சமூதாயமாக மாற்றி அமைத்து எமது தேசியத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கட்டுக்கோப்பையும் பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் எமது தமிழீழக் காவல்த்துறையை எமது மண்ணில் நாம் நிறுவினோம் இது எமது விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான திருப்புமுனை, எமது தேச நிர்மாணத்திலே முக்கியமான மைல்;கல்.
இன்று உலகிலே பெரிதும் விபாPதமான மாற்றங்கள் நிகழ்கின்றன. பெரிதும் வளர்ச்pயுற்ற செல்வச் செழிப்பான நாடுகளில்க்கூட வன்செயல்கள் மலிந்து வருகின்றன. கொலைகளும், கொள்ளைகளும், வெறியாட்டங்களும் பெருகி வருகின்றன. அங்கு குற்றங்கள் ஒழியவில்லை. குற்றவாளிகளும் குறையவில்லை. மாறாக குற்றங்கள் பெருகி குற்றவாளிகளும் பெருகிவருகின்றன. அவர்களை அடைக்கும் சிறைகளும் பெருகிவருகின்றன. ஆனால் ஆளணிகளும் வளங்களும் வசதிகளும் போதுமானதாக இல்லாத போதும் எமது காவல்த்துறை மக்களை உள்வாங்கி உறவை வளர்த்து அவர்களது பேராதரவோடும் பங்களிப்போடும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி சிறப்பாக செயற்படுகிறது. எமது எதிரியின் பத்திரிகைகளே போற்றி பொறாமைப்படுமளவிற்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தவறாது செயற்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எமது தமிழீழக் காவல்த்துறை தேசப் பற்றுணர்வோடும் மனித நேயத்தோடும் அற்பணிப்பு உணர்வோடும் செயற்படுகிறது இதையிட்டு நான் உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன்.
எமது காவல்த்துறை சட்ட ஒழுங்கைப் பேணுவதோடு மட்டும் நின்றுவிடாது சமூகத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்குமான புறநிலைகளை உருவாக்கிச் செயற்படுகிறது. சமூகத்திலே நிலவுகின்ற தவறான கருத்துக்களையும் பார்வைகளையும் காலத்திற்கொவ்வாத வழக்குகளையும் மடமைத்தனமான சம்பிரதாயங்களையும் களைய நடவடிக்கை எடுத்து வருகின்றது இவற்றை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
அத்தோடு இன்றைய நன்நாளில் தமிழீழக் காவல்த்துறை நடுவகப்பணியக திறப்பு விழா நிகழ்வு சிப்புறவும் வெற்றி நடைபோடும் காவல்த்துறையின் பணி மென்மேலும் வியாபித்து வளரவும் எனது நல்லாசிகளையும் நல்லாதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எமது காவல்துறையின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அயராது பற்றுறுதியோடு உழைத்து வரும் காவல்த்துறைப் பொறுப்பாளருக்கும், போராளிகளுக்கும், காவல்த்துறை வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"