![]() |
|
வேண்டுகோள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வேண்டுகோள் (/showthread.php?tid=8204) |
வேண்டுகோள் - sethu - 08-21-2003 <span style='font-size:25pt;line-height:100%'>அலகு ஆசைக்கு அப்பாவி மக்களை அவலக்குரலுக்குத் தள்ளிவிடும் அரசியல்வாதிகளின் அராஜகம் .</span> எங்களது அன்பார்ந்த தமிழ், முஸ்லிம் சகோதரர்களே! அரசியல் வாதிகளின் தலைமைத்துவ ஆசைக்கு அப்பாவி தமிழ், முஸ்லிம் சகோதர்களை கடத்தியும், வெட்டியும் அவர்களுடைய ஆசையை நிறைவேற்ற நினைக்கின்றார்கள். இதைவிட இந்த அரசியல்வாதிகள் பிச்சையெடுத்து தங்களுடைய ஆசையைத் தீர்த்துக்கொள்ளலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த உங்கள் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு உங்களின் உயிரைப் பறிக்கின்றார்கள். இது உங்களுக்கு தெரியவில்லையா? சற்று சிந்தியுங்கள் அப்பாவி முஸ்லிம் மக்களின் உயிரைப் புலிகள் பறிக்கின்றார்கள் என ஈவிரக்கமற்ற அரசியல்வாதிகள் கூறுவதை பரிசீலித்துப் பாருங்கள் எவ்வளவோ மக்கள் கூடும் கட்டுநாயக்காவில் ஒரு அப்பாவி மகன் செத்தானா? அப்படியான புலிகளை, புலிகள் செய்ததாக கூறிக்கொண்டு தன்னினத்தையே அழிக்க முற்படும் முஸ்லிம் அரசியல்வாதிகளோடு முஸ்லிம் மக்கள் சற்று (கடும்) விழிப்பாக இருக்கவேண்டும். கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ஐனாதிபதி சூளுரைக்கின்றார் எப்போது எனப் பாருங்கள். கிழக்கில் முஸ்லிம்கள் சதித்திட்டத்தில் கொல்லப்படும் போதுதானா? சிந்தியுங்கள், யாருடைய சதித்திட்டத்தால் யாரால் யார் கொல்லப்படுகின்றார். ஆகவே தமிழ் முஸ்லிம் மக்களாகிய நாம் இணைந்து இந்த நேரத்தில் நல்ல முடிவெடுக்காவிட்டால் இறுதியில் எமது பிரதேசத்தில் ஐந்தறிவு ஐPவராசிகளும், புல் பூண்டுகளும் தான் மிஞ்சும். இதை நாம் உணராவிட்டால் வரலாற்றை உணராதவர்கள் என்றே உலகம் உணரும் என அத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரம். பாடுமீன் மற்றும் ஒஸ்லோவேயிஸ் - sethu - 08-21-2003 மோகன் இதைப்பிரித்து எளதுவதற்கு மன்னிக்கவும் முடியுமானவரை பலபேருக்க இதை அனுப்பிவைக்கவும் - sethu - 08-21-2003 <span style='font-size:25pt;line-height:100%'>தற்போதைய அமைதிச் சூழலை குழப்பும் நோக்குடன் சில அரசியல்வாதிகளின் திட்டமிட்ட செயல். சம்மாந்துறையில் இடம்பெற்ற சம்பவம். </span> அமைதிச் சூழலை குழப்பும் நோக்குடன் சில அரசியல்வாதிகளின் திட்டமிட்ட செயல். என விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அத்துண்டுப்ரிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தற்போது நாட்டில் ஏற்படும் அமைதிச் சூழலை குழப்பும் நோக்குடன் சில அரசியல்வாதிகளின் திட்டமிட்ட செயற்பாடாகவே சம்மாந்துறையில் இரண்டு முஸ்லிம் உறவுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் பிரதிபலிப்பாக அம்பாறை மாவட்டத்தில் ஆங்காங்கே சில வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இவ்வன்முறை தொடருமாயின் இரு சமூக மக்களிடையிலும் உயிரிழப்புக்கள் சொத்திழப்புக்கள் ஏற்படும் எனவே இவற்றை கடந்தகாலங்கள் எமக்கு புகட்டித்தந்த பாடமாகும். ஆகவே இரு சமூக புத்திஐPவிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதன் மூலமே பாரிய இழப்புக்களிலிருந்து எம்மை பாதுகாக்க முடியும். என்பதைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தை ஒளிமயமாக்க இரு சமூக மக்களும் பாடுபடவேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகள், அரசியல்துறை, அம்பாறை மாவட்டம். - sethu - 08-21-2003 sethu Wrote:மோகன் இதைப்பிரித்து எளதுவதற்கு மன்னிக்கவும் முடியுமானவரை பலபேருக்க இதை அனுப்பிவைக்கவும் - sethu - 08-22-2003 தங்களுக்கு முஸ்லிம் மக்கள் எதிரிகள் அல்ல. மட்டு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர். முஸ்லிம் மக்களை எதிரிகளாகவோ, விரோதிகளாகவோ நாம் ஒருபோதும் கருதவில்லை. நண்பர்களாகவும், உறவினர்களாகவுமே நாம் பார்க்கின்றோம். சில தீயசக்திகள் தமிழ் முஸ்லிம் மக்களைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கின்றனர். இவற்றிக்குத் தமிழ் மக்கள் ஒருபோதும் துணையாகக் கூடாது என மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் இ.கௌசல்யன் குறிப்பிட்டார். கடந்த 20ம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் உள்ள திகிலிவட்டைக் கிராம மீனவர்கள் பத்துப் பேருக்கு மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் தோணி, வலைகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே இவ்வாறு கூறினார். அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன் தொடர்ந்து கூறுகையில்:- எமது உரிமைப்போர் இன்று சர்வதேச அரங்கில் அரசியல் வெற்றிக்கான இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. சிங்களதேசம் இதனை உணர்ந்து எமது சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வைத் தர வேண்டும். தொடர்ந்தும் எமது உரிமை மறுக்கப்படுமானால் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து எமது உரிமையை வென்றெடுக்கும் தருமப் போரில் இணைய வேண்டும் எனவும் தெரிவித்தார். - sOliyAn - 08-23-2003 இப்படியான செய்திகளோடு சேது நின்றால் களமும் சிறக்குமே? - sethu - 08-23-2003 <span style='font-size:25pt;line-height:100%'>கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் குழுக்களுக்கு வரதர் அணியினர் ஆயுதங்கள் விற்பனை. </span> கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் பின்னணியில் உள்ள சில குழுக்கள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கெனப் பெருந் தொகையான ஆயுதங்களையும் கொள்வனவு செய்து வருகின்றனர். தமிழ்க் குழுவான ஈ.பி.ஆர்.எல்.எவ். வரதர் அணி இவர்களுக்குக் குறைந்த விலையில் ஆயுதங்களை விற்பனை செய்து வருவதுடன் இந்த ஆயுதக் கொள்வனவு பற்றிப் பேசுவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணி உறுப்பினர் ஒருவரிடம் சென்ற வேளையிலேயே திருகோணமலை உப்புவெளியில் இரு முஸ்லீம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மூது}ர் பகுதியில் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தும் குழுக்களின் தலைவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த இரு இளைஞர்களும், முன்னிரவு நேரத்தில் தங்களோடு 80 ஆயிரம் ரூபாவையும் பணமாக எடுத்துக் கொண்டு, உப்புவெளி கடற்தளத்திற்குப் போனதற்கான காரணம் என்ன என்று விசாரித்து வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களோடு வேறு யார் யாரெல்லாம் சென்றார்கள், இவர்களை அனுப்பியவர்கள் யார், இவ்வளவு பெரிய தொகைப் பணம் இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது, இப்பணத்தை இவர்கள் எடுத்துச் சென்றதற்கான காரணம் என்ன, இவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இப்பணம் எப்படிக் காணாமற் போனது போன்ற விபரங்களைக் கண்டறிய ஒரு விசேட சி.ஐ.டி. குழு கிழக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ்மா அதிபர் ரி.ஈ. ஆனந்தராஜா தெரிவித்துள்ளார். இந்தக் கொலைகளுக்கும், பின்னர் இடம்பெற்ற இரு முஸ்லிம்களின் கொலைகளுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா என்பதை விசேட சி.ஐ.டி. பிரிவினர் ஆராய்ந்து வருவதாகவும் தெரியவருகிறது. கொலை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள், முஸ்லிம் காங்கிரசுடனும், ரவுூப் ஹக்கீமுடனும் நெருங்கிய தொடர்புடையவர்களின் செயற்பாட்டாளர்கள் என்று கொழும்புப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் பெருந்தொகையான ஆயுதங்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திற்கு வழங்கப்பட்டது. இவை வடகிழக்கின் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. சிறிலங்கா அரசாங்கமும் இவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியிருந்தது. கிழக்கு மாகாணத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த ஆயுதங்களை வரதர் அணியினர் இப்போது முஸ்லீம் குழுக்களுக்குக் குறைந்த விலையில் விற்று வருகின்றனர். தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே இந்த ஆயுதங்களை முஸ்லீம் குழுக்கள் கொள்வனவு செய்து வருகின்றன. இதற்கெனப் பெருந்தொகையான பணம் முஸ்லீம் குழுக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தை நடத்தப்போவதாக அம்பாறை மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் இஸ்மையில் அண்மையில் தெரிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் பேரியல் அஷ்ரப்பும் முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தித் தமிழர்களுக்கு எதிராக போராடப் போவதாகத் தெரிவித்திருந்தார். - sethu - 08-26-2003 <span style='font-size:25pt;line-height:100%'>மட்டு படுகொலைகளில் மறைந்திருக்கும் மர்மங்கள்.</span>மட்டக்களப்பு நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்த ரதீஸ் என்பவரின் சடலம் பட்ட பாட்டினைப் பற்றியே மக்கள் கடந்த சில தினங்களாகப் பரவலாகப் பேசினர். உயிர் பிரிந்த பின் சடலத்தைச் சகல மதங்களும் தெய்வமாகவே போற்றி அதற்குரிய மரியாதையுடன் அடக்கம் செய்கின்றனர். இது சகல மதங்களிலும் உண்டு. வீட்டில் புனிதப்படுத்தப்படுகின்ற சடலம் நல்லடக்கத்துக்கு முன்பாக தேவாலயம் அடுத்தது மயானத்தில் வைத்தே திறந்து மற்றவர்களுக்குக் காட்டப்படும். அப்போது மக்கள் அஞ்சலி செலுத்துவார்கள். கண்டகண்ட இடங்கெல்லாம் வைத்து சடலத்தைத் திறந்து காட்டும் பாணி இந்து மதத்தில் இல்லை. இவ்வாறு செய்தால் உறவினர்களுக்குள் யாராவது மரணிப்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அத்துடன் சடலத்தை எப்போதும் தெய்வமாகவே போற்றுவார்கள். அநாதரவாக சடலத்தை விட்டுச் செல்லும் வழக்கம் எந்த மதத்திலோ, எந்த மக்களிடமோ இல்லை. ஆனால் கடந்த வியாழக்கிழமை (14.08.2003) அன்று சுட்டுக்கொல்லப்பட்ட அ. ரதீஸ்கரனின் சடலத்தை வீட்டிலிருந்து ஈ.பி.டி.பி., வரதர் அணி, புளொட், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோர் ஒன்றிணைந்து து}க்கி வந்து அநாதரவாக மூன்று மணித்தியாலங்கள் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப் புக்குழு அலுவலகத்துக்கு முன்பாக இட்டுச் சென்ற சம்பவம் அநாகரிகமற்ற செயல் என்றே பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். அடுத்ததாக நாம் யார் இந்த ரதீஸ்கரன் (ரதீஸ்). இவர் ஏன் சுடப்பட்டார், யார் இவரைத் துப்பாக்கியால் சுட்டார்கள் என்பது பற்றி அலசி ஆராய வேண்டும். ரதீஸ் என்பவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பல வருடங்களா கக் கடமையாற்றி வந்தவர். இவர் மூலம் இராணுவப் புலனாய்வுக்குப் பெறுமதியான பல தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றவராக இருந்தவர். இதன் மூலம் இராணுவப்புலனாய்வு சம்பந்தமான நிறையத் தகவல்களை இவர் அறிந்தவராகவும், மட்டக்களப்பில் உள்ள இராணுவத்தினர் தகவல்களைப் பெறுகின்ற முறைகளையும் இவர் அறிந்திருந்ததுடன் பல்வேறு இரகசியங்களையும் அறிந்தவராகவே காணப்பட்டார். இச்சந்தர்ப்பத்தில் பல வருடங்கள் இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தராகக் கடமையாற்றிய இவர் திடீரென சென்ற மாதம் ஈ.பி.டி.பியுடன் இணைந்து கொண்டார். இச்செயல் இராணுவத்தினருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியதுடன் இவர் மூலம் தங்கள் இராணுவ ரகசியங்கள் வெளியே சென்று விடும் என்ற அச்சமும் இராணுவத்தினருக்கு இருந்து வந்ததை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே சில இடங்களில் கூறியுமுள்ளனர். இந்நபர் ஈ.பி.டி.பியுடன் இணைந்த பின்பே அங்கு சில சிக்கல்களை ஏற்படுத்த முனைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் ஈ.பி.டி.பியும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் சேர்ந்து இவரைத் தீர்த்துக் கட்டத்திட்டம் தீட்டி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. இதனையே இவரது கொலை நடந்த இடம், நேரம் அன்றைய சூழல் என்பன எடுத்துக்காட்டுகின்றது. சம்பவம் நடைபெற்ற தினம் நோர்வேயின் சிறப்புத் து}துவர் எரிக்சொல்ஹெய்ம் மட்டக்களப்பில் தங்கி இருந்தார். அன்றய தினத்தில் தானா இக்கொலை இது திடீரென திட்டமிட்டுச் செய்து முடித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஈ.பி.டி.பியினர் தமது அலுவலக வளவினுள் காலைக்கடன் முடிப்பதற் குச் செல்லும் போதும் பொலிஸ் பாதுகாப்புடனேயே செல்கின்றனர் தினமுரசு பத்திரிகை விற்பனை செய்யும் போதும் பொலிஸ் பாதுகாப்பு, வெளியில் நடமாடும் போதும் பொலிஸ் பாதுகாப்பு. அன்று ரதீஸ்கரன் இரண்டு தடவைகள் குறிப்பிட்ட மோட்டார் சைக்கிளில் பொலிஸ் பாதுகாப்புடன் மட்டக்களப்பு நகருக்குள் வந்து சென்றுள்ளார். மூன்றாவது தடவை பொலிஸ் பாதுகாப்பு இல்லாமல் சக உறுப்பினருடன் திட்டமிட்டு வெளியில் அனுப்பும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். இவர் சுடப்பட்ட இடம் தொடர்ச்சியாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சிவில் உடையில் நின்று படுவான்கரையிலிருந்து வருகின்ற மக்களை விசாரிக்கும் இடம். சற்று தொலைவில் அப்பால் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படை யினர் காவல்புரிகின்ற இடம். அந்த இடத்தில் பட்டப்பகலில் புலிகள் சுட்டுவிட்டுத் தப்பிச் செல்வதற்கு நியாயமே இல்லை. அது மட்டுமல்லாமல் ரதீஸ் என்பவரைச் சுடும் போது இராணுவ வாகனம் ஒன்று சம்பவத்தைப் பார்த்துச் சென்றுள்ளது. இதனை சம்பவத்தை நேரில் கண்டவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். அது மாத்திரமல்லாமல் இவரைச்சுடும் போது படையினர் பார்த்து நின்றதாகச் சிங்கள நாளிதழ் ஒன்றே செய்தி வெளியிட்டுள்ளது. இவை அனைத்தையும் நோக்கும் போது குடிமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரச படையினரும் ஈ.பி.டி.பியும் இணைந்தே புலிகளின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் எரிக்சொல்ஹெய்ம் மட்டக்களப்பிற்கு வருகை தந்த தினத்தில் திட்டமிட்டு இக்கொலையைச் செய்துள்ளனர் எனப் புலனாகின்றது. அடுத்து அண்மையில் புது}ரில் சுட்டுக்கொல்லப்பட்ட புளொட் உறுப்பினர் வ. மேகநாதனின் கொலை சம்பந்தமாகவும் இங்கு எடுத்துரைப்பது பொருத்தமானது என நினைக்கின்றேன். மேகநாதன் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் புளொட் இயக்கத்துடன் சேர்ந்து 1993 காலப் பகுதியில் இயங்கியவர். பின்பு புளொட் இயக்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முன்னாள் வவுணதீவுப் பிரதேச சபைத் தலைவர் க. வேலாயு தம் (ரங்கன்) சகிதம் புளொட் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டார். அதன் பின்பு இவரையும் வேலாயுதத்தையும் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும், புளொட் இயக்கமும் கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தியது. இதனையடுத்து மேகநாதன் பயத்தின் காரணமாகச் சில காலம் தலைமறைவாகி இருந்தார். அதன் பின்பு புளொட் இயக்கத்துடன் உறவினை ஏற்படுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்காலகட்;டத்தில் தான் ரங்கன் மீண்டும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மட்டக்களப்பில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டார். ரங்கன் கடத்திச் செல்லப்பட்டு ஒரு மாதத்தின் பின்பே மேகநாதனின் கொலை நடைபெற்றது. மேகநாதனின் கொலையைப் புலிகள் தான் செய்தார்கள் என்று கூறினாலும் இக் கொலைக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இக்கொலையைச் செய்தவர்கள் மட்டக்களப்பில் இயங்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே எனத் தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு புளொட் இயக்கத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களைத் தீர்த்துக் கட்டும் நோக்கம் புளொட் இயக்கத்துக்கும், இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கும் ஏற்பட்டது. அந்தவகையில் பலரை இவர்கள் குறிவைத்துள்ளனர். அதில் மேகநாதன் பலியாகி விட்டார். அடுத்த குறி வவுணதீவு முன்னாள் உதவி பிரதேச சபைத் தலைவர் இ.நாகலிங்கத்தின் மீதே (சின்னப்பொடியன்) இவர்களின் கொலைத்திட்டம் அம்பலமாக சின்னப்பொடியன் படுவான்கரைப் பகுதிக்குக் குடும்பத்துடன் தப்பிச் சென்று விட்டார். இதுதான் இன்றைய மட்டக்களப்பு நிலவரம். ஏட்டிக்குப் போட்டியான கொலைகளும், திட்டமிட்ட கொலைகளுமே நடைபெறுகின்றன. கொலைகள் யார் செய்தாலும் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் இக்கொலைகள் பற்றி இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினரும் தகுந்த விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை தயாரிக்க வேண்டியதும் கட்டாயமாகும். வேலுப்பிள்ளை - பரணிதரனின் கொலையை புளொட் இயக்கம் செய்ததும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்தப்பட வேண்டும். மேலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக அரச படையினரே கொலைகளைப்புரிந்து விட்டு ஆர்ப்பாட்டத்திற்குத் து}ண்டுவது பொருத்தமற்ற செயல். ஏனெனில் கடந்த வெள்ளிக்கிழமை (15.08.2003) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊர்வலத்துக்கு அரச படையினரே பின்னணியில் இருந்தார்கள் என்பது அன்றைய சம்பவங்கள் அனைத்தும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. இச்செயல்கள் குறித்து விடுதலைப்புலிகள் மௌனம் சாதிக்காமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச படைகளின் நடவடிக்கைகள், அட்டூழியங்கள், மிரட்டல்களை உடனுக்குடன் அரசின் மேல்மட்டத்துக் குத் தெரியப்படுத்துவதுடன் இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அல்லாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச படைகளுக்கு எதிராக மக்கள் திரண்டெழும் நாள் வெகு தொலைவில் இல்லையென்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் அறிய வேண்டும்.[/color] -நன்றி- தமிழ் அலை - sethu - 09-03-2003 தற்போது கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் படைக்கு தமிழ் பேசும் இளைஞாகள் சேர்க்கப்படுவது குறித்து இளைஞர்களை விழிப்புடன் இருக்குமாறு வேண்டி மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் துண்டுப்பிரசுரம் இரண்டினை வெளியிட்டுள்ளனர். அத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 01. தமிழ் பேசும் இளைஞர்கள் பொலிஸ் படையில்சேர்வது தொடர்பாக விழிப்படையுங்கள். முஸ்லிம் பிரச்சினை தீர்ப்பதற்கென பொலிஸ் சேமப் படையில் சேர்க்கப்படும் தமிழ பேசும் இளைஞர்கள் தொடர்பாக முஸ்லிம் புத்திஜீவிகளும், கல்விமான்களும், முதலீட்டாளர்களும் தெளிவாகவும், து}ரநோக்கோடு சிந்திக்க வேண்டிய காலம் இது. எமது தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசத்திலும் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் காட்டு மிரண்டித் தனமாக நடத்தப்பட்ட படுகொலைகள் எமது தாயகம் முழுவதும் விடுதலைப் போராட்ட தீச்சுவாலை வேகமாகப் பரவ காரணமாக இருந்தது. ஒரு நாட்டில் சமாந்தரமான இரண்டு படையினர் என்ற நிலைக்கு வந்திருக்கின்றது. எம்மினங்களை பேரினவாத அரசு நன்கு திட்டமிட்டு முரண்பாடுகளை உருவாக்கியது இதனை விளங்கிக் கொள்ளாத நாம் பல துன்பியல் சம்பவங்களுக்கு ஆளாகிப் போனோம் அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். இன்று எமது தாயகப் பிரதேசத்தில் யுத்தமற்ற சூழல் உருவாகி ஒவ்வொருத்தரும் தமது வாழ்வியலை வழப்படுத்துவதற்காக முயல்வதுடன் இதனை வலுப்படுத்துவதற்காக எமது தரப்பு பிரதிநிதிகளும், முஸ்லிம் தரப்பு பிரதிநிதிகளும் பல கலந்துரையாடலை நடாத்தி அதிகமான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு கொண்டு வருகின்ற இந்த காலத்தை அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது உள்ளது. இதனை என்றுமே அவர்கள் விரும்பவில்லை அவர்களின் மூல உபாயத்தில் அன்றும், இன்றும், என்றும் இது இருந்தே வருகின்றது. இன்று சர்வதேச மத்தியஸ்தத்துடன் இன்றைய உலக ஒழுங்குக்கு அமைய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை நன்கு உணராத முஸ்லிம் அரசியல் வாதிகளும் அவர்களுடன் துணை போகின்ற தீய சக்திகள் தொடர்பாக நீங்கள் அனைவரும் விழிப்பாக இருங்கள் நாம் என்றும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்;பாக இருப்போம் என்பதனை நீங்கள் உறுதியாக நம்புங்கள். எனவே பொலிஸ் சேமப்படையில் இணைகின்ற தமிழ் பேசும் இளைஞர்களே! சிந்தியுங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடைய இராணுவத்தை எந்த இராணுவ சக்தியாலும் வென்று விட முடியாது. நீங்கள் அதில் தான் இணைகிக்றீர்கள் உடன் நிறுத்துங்கள் அல்லது யுத்தம் மீண்டும் வந்தால் நீங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவர்கள் உங்கள் நிலை அன்று பரிதாபகரமானது என வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 'நின்று நிதானித்து சிந்தித்து செயற்படுங்கள்" 02. தமிழ் இளைஞர்களே...! எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் பலம் அடைந்து உலகமே வியக்கும் இராணுவ சக்தியாக சர்வதேச அரங்கில் தமிழர் தம் உரிமைதனை தமிழீழ விடுதலைப்புலிகள் பிரதி நிதித்துவப்படுத்தும் இவ்வேளை தமிழ் இளைஞர்களில் ஒரு சிலர் சிங்களப் பொலிஸ் படையில் இணைவது வேதனைக்;குரிய விடயமாகும். தமிழ் இளைஞர்கள் சிங்களப் படையில் இணைய வேண்டாம் என நாம் முன்னர் அறிவித்திருந்தோம். அதனையும் மீறி இணைவதென்பது எமது விடுதலைப் போராட்டத்தை புரிந்து கொள்ளாத தன்மையைப்புலப்படுத்தும் என்பதால் சிங்களப் பொலிஸ் படையில் இணைவதனை உடன் நிறுத்தி எம் தலைவனின் காலத்தில் ஓர் அணியாக திரள்வோம் சுதந்திரம் மீட்க. <span style='font-size:25pt;line-height:100%'>தமிழீழ விடுதலைப்புலிகள், அரசியல்துறை, மட்டு-அம்பாறை மாவட்டம் தமிழீழம்</span> - Mathivathanan - 09-03-2003 [quote=sethu]தற்போது கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் படைக்கு தமிழ் பேசும் இளைஞாகள் சேர்க்கப்படுவது குறித்து இளைஞர்களை விழிப்புடன் இருக்குமாறு வேண்டி மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் துண்டுப்பிரசுரம் இரண்டினை வெளியிட்டுள்ளனர். அத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 01. தமிழ் பேசும் இளைஞர்கள் பொலிஸ் படையில்சேர்வது தொடர்பாக விழிப்படையுங்கள். முஸ்லிம் பிரச்சினை தீர்ப்பதற்கென பொலிஸ் சேமப் படையில் சேர்க்கப்படும் தமிழ பேசும் இளைஞர்கள் தொடர்பாக முஸ்லிம் புத்திஜீவிகளும், கல்விமான்களும், முதலீட்டாளர்களும் தெளிவாகவும், து}ரநோக்கோடு சிந்திக்க வேண்டிய காலம் இது. எமது தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசத்திலும் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் காட்டு மிரண்டித் தனமாக நடத்தப்பட்ட படுகொலைகள் எமது தாயகம் முழுவதும் விடுதலைப் போராட்ட தீச்சுவாலை வேகமாகப் பரவ காரணமாக இருந்தது. ஒரு நாட்டில் சமாந்தரமான இரண்டு படையினர் என்ற நிலைக்கு வந்திருக்கின்றது. எம்மினங்களை பேரினவாத அரசு நன்கு திட்டமிட்டு முரண்பாடுகளை உருவாக்கியது இதனை விளங்கிக் கொள்ளாத நாம் பல துன்பியல் சம்பவங்களுக்கு ஆளாகிப் போனோம் அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். இன்று எமது தாயகப் பிரதேசத்தில் யுத்தமற்ற சூழல் உருவாகி ஒவ்வொருத்தரும் தமது வாழ்வியலை வழப்படுத்துவதற்காக முயல்வதுடன் இதனை வலுப்படுத்துவதற்காக எமது தரப்பு பிரதிநிதிகளும், முஸ்லிம் தரப்பு பிரதிநிதிகளும் பல கலந்துரையாடலை நடாத்தி அதிகமான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு கொண்டு வருகின்ற இந்த காலத்தை அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது உள்ளது. இதனை என்றுமே அவர்கள் விரும்பவில்லை அவர்களின் மூல உபாயத்தில் அன்றும், இன்றும், என்றும் இது இருந்தே வருகின்றது. இன்று சர்வதேச மத்தியஸ்தத்துடன் இன்றைய உலக ஒழுங்குக்கு அமைய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை நன்கு உணராத முஸ்லிம் அரசியல் வாதிகளும் அவர்களுடன் துணை போகின்ற தீய சக்திகள் தொடர்பாக நீங்கள் அனைவரும் விழிப்பாக இருங்கள் நாம் என்றும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்;பாக இருப்போம் என்பதனை நீங்கள் உறுதியாக நம்புங்கள். எனவே பொலிஸ் சேமப்படையில் இணைகின்ற தமிழ் பேசும் இளைஞர்களே! சிந்தியுங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடைய இராணுவத்தை எந்த இராணுவ சக்தியாலும் வென்று விட முடியாது. நீங்கள் அதில் தான் இணைகிக்றீர்கள் உடன் நிறுத்துங்கள் அல்லது யுத்தம் மீண்டும் வந்தால் நீங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவர்கள் உங்கள் நிலை அன்று பரிதாபகரமானது என வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 'நின்று நிதானித்து சிந்தித்து செயற்படுங்கள்" 02. தமிழ் இளைஞர்களே...! எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் பலம் அடைந்து உலகமே வியக்கும் இராணுவ சக்தியாக சர்வதேச அரங்கில் தமிழர் தம் உரிமைதனை தமிழீழ விடுதலைப்புலிகள் பிரதி நிதித்துவப்படுத்தும் இவ்வேளை தமிழ் இளைஞர்களில் ஒரு சிலர் சிங்களப் பொலிஸ் படையில் இணைவது வேதனைக்;குரிய விடயமாகும். தமிழ் இளைஞர்கள் சிங்களப் படையில் இணைய வேண்டாம் என நாம் முன்னர் அறிவித்திருந்தோம். அதனையும் மீறி இணைவதென்பது எமது விடுதலைப் போராட்டத்தை புரிந்து கொள்ளாத தன்மையைப்புலப்படுத்தும் என்பதால் சிங்களப் பொலிஸ் படையில் இணைவதனை உடன் நிறுத்தி எம் தலைவனின் காலத்தில் ஓர் அணியாக திரள்வோம் சுதந்திரம் மீட்க. <span style='font-size:25pt;line-height:100%'>தமிழீழ விடுதலைப்புலிகள், அரசியல்துறை, மட்டு-அம்பாறை மாவட்டம் தமிழீழம்</span> நன்றி.. http://www.uthayan.com/news/newsmain.htm - sethu - 09-09-2003 தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் நடுவப்பணியகத்தினை திறந்து வைத்து அங்கு உரையாற்றுகையில்:- சமூக வாழ்வு உயர்நிலை அடையும் பொழுதே ஒரு இனம் மகிமை பெறுகிறது மனித வாழ்வு உன்னதம் பெறுகிறது அதன் சமூக உறவு வளர்ச்சி பெறுகிறது இப்படியான சமூக வாழ்வு ஒரு இனத்திற்கு வரப்பிரசாதகமாக அளிக்கப்படுவதல்ல. அன்றி காலத்தால் உவந்தளிக்கப்படுவதுமல்ல அத்தோடு இது அடையப்பட முடியாத பொருளுமல்ல இதனை நாம் தான் நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும் நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும் இதற்காக நாம்தான் உறுதியோடு போராட வேண்டும். இந்த வகையில் இற்றைக்குப் பத்தாண்டுகளுக்கு முன்னர் எமது மண்ணிலே தமிழீழக் காவல்துறை நிறுவப்பட்டது. அப்போது இருந்த நிலைமை மிகவும் நெருக்கடியானது இடர்கள் நிறைந்தது சிங்கள அரசின் இன அழிப்புப்புப்போர் எமது மண்ணில் முனைப்புற்றிருந்தது பொருளாதாரத் தடை இறுக்கமாக்கப்பட்டு உணவுப் பொருட்கள் ஈறாக அனைத்திற்;குமே தட்டுப்பாடுகள் நிலவின. சட்ட ஒழுங்கு முற்றாக சீர்குலைந்து மனுநீதிக்கொவ்வாத ஈனச்செயல்களெல்லாம் பெருகின. எல்லாவற்றுக்கும் அப்பால் நாம் கட்டிக்காத்த சமூக வாழ்வை அடியோடு சிதைத்து அதனு}டாக எமது இனத்தின் இருப்பையே அழித்துவிட சிங்கள இனவாத அரசு பல வழிகளிலும் முயன்றது. இந்த நெருக்கடிமிக்க ஆபத்தான சூழ்நிலையில்த்தான் ஆயிரமாயிரம் போராளிகளின் உதிரத்தாலும் தியாகத்தாலும் உருப்பெற்று வரும் எமது தாயகத்தை உன்னதமான மேன்மையான சமூதாயமாக மாற்றி அமைத்து எமது தேசியத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கட்டுக்கோப்பையும் பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் எமது தமிழீழக் காவல்த்துறையை எமது மண்ணில் நாம் நிறுவினோம் இது எமது விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான திருப்புமுனை, எமது தேச நிர்மாணத்திலே முக்கியமான மைல்;கல். இன்று உலகிலே பெரிதும் விபாPதமான மாற்றங்கள் நிகழ்கின்றன. பெரிதும் வளர்ச்pயுற்ற செல்வச் செழிப்பான நாடுகளில்க்கூட வன்செயல்கள் மலிந்து வருகின்றன. கொலைகளும், கொள்ளைகளும், வெறியாட்டங்களும் பெருகி வருகின்றன. அங்கு குற்றங்கள் ஒழியவில்லை. குற்றவாளிகளும் குறையவில்லை. மாறாக குற்றங்கள் பெருகி குற்றவாளிகளும் பெருகிவருகின்றன. அவர்களை அடைக்கும் சிறைகளும் பெருகிவருகின்றன. ஆனால் ஆளணிகளும் வளங்களும் வசதிகளும் போதுமானதாக இல்லாத போதும் எமது காவல்த்துறை மக்களை உள்வாங்கி உறவை வளர்த்து அவர்களது பேராதரவோடும் பங்களிப்போடும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி சிறப்பாக செயற்படுகிறது. எமது எதிரியின் பத்திரிகைகளே போற்றி பொறாமைப்படுமளவிற்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தவறாது செயற்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எமது தமிழீழக் காவல்த்துறை தேசப் பற்றுணர்வோடும் மனித நேயத்தோடும் அற்பணிப்பு உணர்வோடும் செயற்படுகிறது இதையிட்டு நான் உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன். எமது காவல்த்துறை சட்ட ஒழுங்கைப் பேணுவதோடு மட்டும் நின்றுவிடாது சமூகத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்குமான புறநிலைகளை உருவாக்கிச் செயற்படுகிறது. சமூகத்திலே நிலவுகின்ற தவறான கருத்துக்களையும் பார்வைகளையும் காலத்திற்கொவ்வாத வழக்குகளையும் மடமைத்தனமான சம்பிரதாயங்களையும் களைய நடவடிக்கை எடுத்து வருகின்றது இவற்றை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அத்தோடு இன்றைய நன்நாளில் தமிழீழக் காவல்த்துறை நடுவகப்பணியக திறப்பு விழா நிகழ்வு சிப்புறவும் வெற்றி நடைபோடும் காவல்த்துறையின் பணி மென்மேலும் வியாபித்து வளரவும் எனது நல்லாசிகளையும் நல்லாதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எமது காவல்துறையின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அயராது பற்றுறுதியோடு உழைத்து வரும் காவல்த்துறைப் பொறுப்பாளருக்கும், போராளிகளுக்கும், காவல்த்துறை வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" - sethu - 09-09-2003 அதாரம் பாடுமீன். - yarlmohan - 09-09-2003 சேது இந்த ஆதாரம் என்பதை தனியாக் குறிப்பிடாமல் இணைக்கப்படும் செய்தி / ஆக்கத்துடன் சேர்த்து எழுதவும். முன்பும் இது சம்பந்தமாக அறிவுறுத்தல் தந்துள்ளேன் என நினைக்கின்றேன். மோகன் - sethu - 09-09-2003 தவறாக போட்டுவிட்டேன் காரணம் முதல் தவறுதலாக ஆதரத்தை போட மறந்ததால் பிறிம்பாக போட்டேன். |