03-29-2005, 08:21 PM
வெலிமடையில் இனந்தெரியாத நோய்க்கு மூவர் பலி
வெலிமடையில் இனந்தெரியாத நோய்க்கு இலக்காகி ஒரே பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் மற்றும் உப அதிபர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
வெலிமடை ஊவா பரணகமவிலுள்ள பாடசாலையொன்றில் 10 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும் மாணவன் ஒருவன் நேற்று முன்தினம் மயங்கி விழுந்ததனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளான்.
வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட சிறிது நேரத்தில் மாணவன் மரணமடைந்துள்ளான்.
அதே பாடசாலையின் மற்றுமொரு மாணவனும் நேற்றைய தினம் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்களும் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் மரணம் குறித்து பரிசோதனை நடத்திய வைத்தியர்கள் இவர்களின் கல்லீரலை நோய் கிருமிகள் தாக்கியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
எனினும் இம்மரணங்கள் குறித்து பூரண ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் இரு விசேட குழுக்கள் ஊவா பரணகமவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஊவா மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளார் ஷெல்டன் சந்ரசிறி தெரிவித்துள்ளார்.
குடிநீர் மூலமாகவே இந்நோய் பரவுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
புதினத்தில்